(Reading time: 24 - 47 minutes)

மெரசலாயிட்டேன்..! - விக்னேஷ் கார்த்திக்

This is entry #23 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

9.26 a.m.. “நான் மெரசலாயிட்டேன்..மெரசலாயிட்டேன்..மெரசாயிட்டேன்” .. அந்த பாடலை கேட்டதுமே உற்சாகமாய் சிரித்தான் அஷ்வின்.. நம்ம ஹீரோ அஷ்வினுடன் அனிருத்தும் பாட….கொஞ்சம் ஓவர் பில்டப்பா இருக்கோ? சரி நம்ம அனிருத் குரலுக்கு தோதாய் அஷ்வினும் பாட, சுறுசுறுப்பாய் தொடங்கியது அன்றைய தினம். தனது புதிய வீட்டில் இருந்து அலுவலகதிற்கு செல்ல 20 நிமிடங்களே ஆகும் என்பதால் பொறுமையாகவே தூங்கி எழுந்து உற்சாகமாய் தயாரானான் அவன்..  புதிய மனை, காதல் மனைவி என்று சந்தோஷத்திற்கு குறைவே இல்லாமல் இருந்தது அவனது வாழ்க்கை..

அந்த பாடலில் லயித்திருந்த கணவனை பின்னாலிருந்து இறுக அணைத்துக் கொண்டாள் அனன்யா.. கண்ணாடியின் முன் நின்றிருந்த அஷ்வின் அவளை கண்ணாடி வழியாய் பார்க்க முயல, தனது முகத்தை அவன் முதுகில் தோதாய் புதைத்து கொண்டு நின்றாள் அனன்யா.. சிரிப்புதான் வந்தது அவனுக்கு.. இருவர் மட்டுமே இருக்கும் அந்த வீட்டில் இவளை விட்டால் யார் இப்படி கட்டியணைக்கமுடியும் ?விட்டுவிடுவாளா இவளும்?

“அச்சு டார்லிங் இட்லி ரெடி” என்று அவள் துள்ளலுடன் கூற அதுவரை புன்னகைத்து கொண்டு இருந்தவன் இப்போது அதற்கு எதிர்மாறாய்  முகத்தில் எள்ளும்கொள்ளும் வெடிக்கமுறைத்தான்..கிட்டதட்ட அந்த காலத்து வில்லன்கள் போல முகமே சிவப்பாகிவிட “ அடியே, நேத்து நைட் தானே பூரி செய்யுறேன்னு சொன்ன ? மவளே ஓடிரூ.. போடீ நீயும் நீ சுட்ட இட்லியும் ” என்று எரிந்து விழுந்தான் ஏமாற்றத்துடன். அவன் கோபதிற்கு கொஞ்சமும் மதிப்பளிக்காமல் இன்னமும் இறுக அவனை அணைத்தபடி கொஞ்சும் குரலில் பேசினாள் அவள்.

Merasalayiten“சாரி டார்லிங் பூரிக்கு மாவு இல்ல, போன வாரம் பண்ணின இட்லி மாவு ஃப்ரிட்ஜ்ல இருந்துச்சா அதான்” குறும்பாய் சிரித்துக் கொண்டே கூறினாள் அவள் பக்கமாய் திரும்பியவன் அனல் கக்கும் பார்வையுடன் அவளை முறைக்க, அவன் பேசுவதற்கு முன்பே, அனன்யாவின் செல்ஃபோன் அலற வரவேற்பறைக்கு ஓடினாள் அவள்.

“Every night in my dreams, I see you, I feel you'..”ரிங் டோனுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை..பூரி கேட்டா,இட்லி கொடுக்குறா..என்ன கொடுமை சரவணன்” வாய்விட்டே முணுமுணுத்தான் அஷ்வின்.

சில நிமிடங்களிலேயே எதுவுமே நடக்காதது போல இயல்பாய் அறைக்குள் நுழைந்தாள் அனன்யா.. குறும்பு சிரிப்புடன்

“ டார்லிங் சாரி ..இந்தா பூரி “ என்றாள். உடனே சமாதானம் அடைந்து விட்டால், அவனது கௌரவம் என்னாவது ? அவள் கெஞ்சி இருந்தால் உடனே சமாதானம் ஆகி இருப்பான் போலும்..இவளோ கொஞ்சமும் கெஞ்சல் இன்றி சிரிக்கவும்,நிஜமாகவே லேசாய் கோபம் கொண்டான் அஷ்வின்.

“ ஒன்னும் வேணாம்..எல்லாத்தையும் எடுத்துகிட்டு ஓடிரு..” என்றான் சுள்ளென.. அவனது செல்ல கோபங்கள் அவளுக்கென்ன புதிதா? உணவை மெத்தை மீது வைத்து விட்டு, அவன் தோளில் இரு கைகளையும் பூமாலையாய் கோர்த்து நெருங்கினாள் அனன்யா.. “டேய் அஷ்வின்,இவ பக்கம் வந்தாலே டேஞ்சர்.. கண்ட்ரோல் மச்சான்” என்று அவனுக்குள் அபாயமணி ஒலித்தது.. அதை பொருட்படுத்தாமல் அவ்வளது தீண்டலில் சிலிர்த்து போனான் அஷ்வின்..  இன்னும் கொஞ்சம் மிச்சம் இருந்த கோபத்தை இழுத்து பிடித்து வைத்துகொண்டு வேறெங்கோ பார்ப்பது போல முகத்தை திருப்பி கொண்டான் அவன்.

“ ஹேய் அச்சு…”

“..”

“அஸ்வின்….அச்சுகுட்டி…”

“…”

“பூரி வேணாமா?”..

வேண்டாம் என்பதுபோல தலையை இடதும் வலதும் ஆட்டினான் அவன்..

“ சரி வேணாம்… அப்போ நானு?” என்று கேட்டு அவன் விழியோடு விழி கலந்தாள்..

“என்ன கண்ணுடீ உனக்கு?: என்று மனதிற்குள்மயங்கி போனவன் வெளியில் மௌனமாகவே இருந்தான்..

“சொல்லு நான் வேணாமா?”

“வே….ணு…” என்று அவன் முடிப்பதற்குள் அவன் இதழோடு இதழ் பதித்திருந்தாள் அனன்யா.. வினாடிகளை நிமிடங்களாய், நிமிடங்களாய் நீங்காத முத்தங்களாய் மொழி பெயர்த்து கொண்டிருந்தவளை மெல்ல நிமிர்த்தினான் அஷ்வின்…

“ஹேய், என்னடீ பண்ணுற?” என்றான் பயந்தவன் போல.

“நீ வேணாம்னு சொல்லுறத, என்னால கேட்க முடியாது டா” என்று விளக்கம் அளித்த மனைவியை வேகமாய் இழுத்து அணைத்து கொண்டான் அஷ்வின்..  “ லூசு, அது எப்படிடீ  நான் வேணாம்னு சொல்லுவேன்?”

 அவளது இதழ்களில் சற்றுமுன் நிறுத்திய கதையை தொடர்ந்தான் அஷ்வின்.. யுத்தத்தில் தொடங்கிய தினத்தை முத்தங்களால் சமாதானம் செய்து வைத்தான் அவளின் அன்பு கணவன்.. “பூரி இல்லை” என்று சொன்னதற்கு தண்டனையாய் அவளையே தனக்கு ஊட்டிவிடும்படி உத்தரவிட்டான் அவன்..ஏதோ பெரிய தண்டனை கிடைத்து விட்டது போல சிணுங்கி கொண்டே அவனுக்கு ஊட்டி விட்டாள் அனன்யா.. ஒருவழியாய் வேலைக்கு புறப்பட்டான் அஷ்வின் .. தினமும் இதுபோன்ற நாடங்களில் தங்களது காதலை இனிதாய் வளர்த்து வருவதில் அவர்களுக்கு ஆனந்தம்.. ஆனால் இந்த ஆனந்தத்தின் ஆயுட்காலம் எத்தனை நாட்களோ ? !

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.