(Reading time: 24 - 47 minutes)

வனுக்குள் நடுக்கும் பிறந்தது .. எனினும் முன்னோக்கி எட்டு வைத்து கூர்ந்து நோக்கினான் .. நீண்ட கரிய நிற கூந்தல் விரித்திருக்க, நெற்றியில் குருதி பெருக ,  ஆடையிலும் அங்கங்கு ரத்தம் வழிய அகோரமாய் தலை குனிந்தப்படி சோபாவின் சொகுசாய் அமர்ந்திருந்தது ஓர் உருவம் .. திரைப்படத்தில் காட்டுவது போல , கத்தி கூச்சல் இடாமல் செயல்பட்டான் அஷ்வின் ..

உடனே, தனது பெற்றோரின் அறையை வெளியில் இருந்து பூட்டினான் .. அதே போல தங்களது அறையையும் பூட்டி இருந்தான் அவன் .. இரு அறைகளையும் பூட்டியவன் , தன்னை தற்காத்து கொள்வதற்காக ஸ்டோர் ரூமில் இருந்து  ஒரு இரும்பு கம்பியை கொண்டு வந்தான் .. தான் கையில் பிடித்திருந்த இரும்பு கம்பியால் தரையில் " படார்' என்று சத்தம் எழுப்பும்படி அடித்தான் அஷ்வின் .. அந்த கோரமான உருவம் இப்போது அவனை உருத்துவிழித்தது .. அந்த கண்கள் .. ! கண்டனத சில நாட்களாய் அவனை அச்சுறுத்திய அதே பூனையின் கண்கள் .. ஆம் அந்த பூனையில் மஞ்சள் நிற கண்டாலும் இந்த உருவத்தின் கண்களும் ஒரேபோல் தான் இருந்தது ..

அந்த குரோதம் நிறைந்த பார்வையில் அஷ்வினின் கைகளில் இருந்த இரும்பு கம்பியே தூள் தூளாய் ஆனது .. அதிர்ச்சியில் அவன் விக்கித்து போன நேரம் , அனன்யா , அப்பா , அம்மா மூவரும் அங்கு வந்திருந்தனர் ..

" அஷ்வின் "

" டேய் அஷ்வின் என்னடா இது "

" இந்த பக்கம் வா " என்று மூவரும் கூச்சல் இட அவனின் பயம் பல மடங்கு பெருகியது ..

" அப்பா அம்மா எப்படி வந்திங்க ? நான் தான் கதவை பூட்டினேனே ? உள்ள போங்க எல்லாரும் .. நான் இதை பார்த்துக்குறேன் "  அன்று அவன் அவர்களை தள்ள, அவர்கள் உள்ளே போகாமல் அசையாமல்  அங்கேயே நின்றனர் .. அதை கண்டு சிரித்த அந்த கோரமான உருவம் அவர்களை நோக்கி கை நீட்டி மூவருமே கீழே விழுந்து மயங்கினர் .. "அய்யயோ அம்மா " என்று பதரியப்படி அஷ்வின் ஓட முயற்சிக்க அவனால் இம்மியளவும் நகர முடியாமல் போனது ..

நகர முடியாமல் இருந்த அஷ்வினின் அருகில் அந்த உருவும் நெருங்கிட அதன் மஞ்சள் விழிகள் இப்போது பச்சை நிறமாய் மாறியது ..அதனிடம் இருந்து விடுபட முயன்றவனுக்கு சட்டென வலிப்பு வந்துவிட்டது .. வலிப்பில் தலையும் கைகளும் அசைக்க சுயநினைவை அவன் இழந்து கொண்டிருந்த நேரம் பதறியடித்து எழுந்தாள்  உறங்கி கொண்டிருந்த அனன்யா ..ஆம் , உறக்கத்தில் கண்ட கனவின் தாக்கத்தில் தான் அவனுக்கு வலிப்பு வந்தது ..

" ஹே அஷ்வின் ..என்னாடா ஆச்சு " என்று அவள் பதற அவளுக்கு பதில் சொல்லும் நிலையில் அவன் இல்லை .. உடனே , அருகில் இருந்த சாவியை அவன் கைகளில் வைத்து இறுக பற்றிக்கொண்டு அவனது பெற்றோரை கூக்குரலிட்டு அழைத்தாள்  அனன்யா ..

" அஷ்வின் .. ஒன்னும் இல்லடா ..எல்லாம் சரி ஆகிடும் " .. அஷ்வின் அப்படியே மயக்க நிலையை அடைந்து விட அவனின் பெற்றோரின் அறைக்கு விரைந்தாள் அனன்யா ..

" என்னம்மா அச்சு ?" இருவரும் அவர்களது அறைக்குள் ஓடிட , மகனின் நிலையை கண்ட தந்தை உடனே காரை எடுத்தார் ... அஷ்வினை காரில் கிடத்தி கொண்டு புறப்பட்டனர் மூவரும்..

" அப்பா இடது பக்கம் போங்க ..அங்கதான் குளோபல் ஹாஸ்பிடல் இருக்கு " என்று அனன்யா உரைக்க , அவரோ இடது பக்கமாய் விரைந்தார் ..

" அப்பா எங்க போறீங்க ?" அதிர்ச்சியாய்  வினவினாள்  அனன்யா .. அவரிடம் பதில் இல்லாமல் போகவும்

" அப்பா சொல்லுங்க எங்க போறீங்க ?" என்று குரல் உயர்த்தினாள்  அனன்யா ..

" அவருக்கு தெரியும்மா .. செட்டிநாடு போறாரு அவரு .. அங்க தான் அஷ்வினுக்கு ட்ரீட்மண்ட்  எடுத்தோம் இதுக்கு முன்னாடி " என்றார் அவனது தாயார் ...

" இதுக்கு முன்னாடியா ? அப்போ அஷ்வினுக்கு என்ன பிரச்சனை சொல்லுங்க "

" ஒன்னும் பெருசா இல்லம்மா ..ஹாஸ்பிடல் வந்தாச்சு .. நான் எல்லாத்தையும் உனக்கு அப்பறமா சொல்லுறேன் " என்று அவர் கூறவும் மறுப்பை ஏதும் பேசாமல் அவர்களை தொடர்ந்தாள் அனன்யா ..

அஷ்வினை அவசர சிகிச்சைக்காக உள்ளே அழைத்து சென்றனர் ..  அப்பாவோ அருகில் இருந்த ரிசப்ஷனிஷ்டிடம் 

" டாக்டர் ராஜேஷ் இருக்காரா ? senior psychiatrist ?”  என்று விசாரித்தார் .. பின்னர் "நீ அனன்யா கூட இரு .. நான் டாக்டரை பார்த்துட்டு வரேன் " என்றுவிட்டு அங்கிருந்து சென்றார் அவர் .. அருகில் இருந்த பிள்ளையார் சிலை முன்பு மண்டியிட்டு வணங்கினாள்  அனன்யா .. அவளது கண்ணீருக்கு பதில் கிடைத்தது போலவே , " அஷ்வின் கண்விழித்துவிட்டான் " என்று தாதி சொல்ல , மூவரும் அவனை காண ஓடினர் ..

அவனை இறுக அணைத்து  முத்த மழை பொழிந்து கண்ணீர் விட்டாள்  அனன்யா ..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.