(Reading time: 2 - 4 minutes)

மஞ்சு விரட்டு - கிருத்திகா

Manju virattu

வன் மதுரைக்காரன் நமக்கு  மல்லிகையும் மீனாட்சி அம்மன் கோவிலும் ..தெரியும் கூடவே வீரம் விளைஞ்ச மண்ணு தெரியும் ... 

இப்போ சில நாட்க்களாக மஞ்சு விரட்டு அதாங்க ஜல்லிக்கட்டு பத்தி ஒரே பேச்சு வந்ததுல்ல அப்போ இவன் வீரத்தையும் ஜல்லிக்கட்டு இல்லைனாலும் மஞ்சுவிரட்டில் கலந்துகிட்ட அனுபவத்த சொன்னதுல ஆபீஸ் ல இருக்க நல்ல பிகர் எல்லாம் அவன் பக்கமா சாய ஆரம்பிச்சிடுச்சி ..

நானே ரெண்டு வருஷமா ரொம்ப நல்ல பிள்ளை மாதிரி கஷ்ட பட்டு ஓரளவுக்கு செட் பண்ணி வச்சா இவன் ஒரு நாள்ல ஹீரோ ஆகிட்டான் .. அப்புறம் என்ன எப்போ பார் மதுரை பத்தி இவங்க டவுட் கேக்கறதும் அத இவர் சொல்லறதும் எனக்கு தான் ஸ்டமக் பர்னிங் ....

நானும் பிள்ளையார்கிட்ட டெய்லி ஒரு விசிட் அடிச்சி மனு போட்டுகிட்டே இருந்தேன் ..

கடைசில அவரும் அதை கன்டிசெர் பண்ணி ஒரு சான்ஸ் குடுத்தார் பாருங்க நம்ம மதுரக்காரன் நொந்து போய்ட்டான் ( அவன் என்னை துவைச்சது தனி கதை)

அன்னைக்கு என்ன ஆச்சின்ன .. நம்ம டீம்க்கு புதுசா ஒரு பொண்ணு வந்துச்சி சூப்பர் பிகர் இல்லைனாலும் நாங்க ஜொள்ளு விடமாதிரியான பிகர் .. 

அட அந்த பொன்னும் வந்ததில இருந்து இவன பாத்து பாத்து சிரிக்குது எனக்கு ஒரே டென்ஷன் நம்ம லார்ட் கனேசன போட்டு திட்டி தீர்திட்டேன் ..

பிரேக் ல டி குடிக்க அந்த பொன்னும் எங்க பின்னாடியே வந்தா .....

எங்க பக்கத்துல வந்ததும் அவன பாத்து ஹே என்னை தெரியலயாடா .. நான் தான்டா மஞ்சுளா நம்ம ரெண்டு பேரும் 5வது வரைக்கும் ஒன்னா படிச்சோம் உங்கவீட்டுக்கு ரெண்டு தெரு தள்ளிதான் என்வீடு .. ஒரு 10 வருஷம் பாக்கலன்னா இப்படியா மறந்து போவ ..

இப்படி இவ கத்த எங்க டீம் மொத்தமும் கூடிட்டாங்க ......

இவன் அமைதியா இருக்க அவ தொடர்ந்து அட என்ன நீ சின்ன வயசுல மஞ்சு மஞ்சு நு ஏன் பின்னாடியே சுத்துவ ரெண்டுபேரும் சேந்துதான் விளையாடுவோம் இப்படி மறந்துடாயே அப்படீங்க ....

சும்மா இருக்குமா என் வாயி ... மச்சி நீ விரட்டுநேனு சொன்ன மஞ்சு இதுவான்னு கேட்க ... அவன் முறைக்க 

அங்க எழுந்த சிரிப்பொலி அடங்க அரைமணி நேரம் ஆச்சு...

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.