(Reading time: 22 - 44 minutes)

பாரம் ஆகினால் வியாபாரமோ? - வளர்மதி

Old age

திய உணவு வேளையில் அவரசமாக வங்கியினுள் நுழையும்போது கீர்த்தனா வங்கிக்கு வெளியே சாலையோரம் கண்ணில் கண்ணீர் துளிகளுடன் கையில் இருந்த வங்கி கணக்கு புத்தகத்தை பார்த்துக் கொண்டு இருந்த மூதாட்டியை பார்த்தாள்.

ஏனோ அவரின் அந்த தோற்றம் மனதை தொட, அந்த பாட்டியை நோக்கி நடந்தாள் அவள்.

அவரின் அருகில் சென்று அமர்ந்தவள் அவரிடம் மெல்ல பேச்சு கொடுத்தாள்.

“பாட்டி ஏன் இங்கே உற்காந்து இருக்கீங்க.. யாருக்காக காத்துட்டு இருக்கீங்க?”

“இங்கே பஸ் வருமா பாப்பா” கவலையாக அவளிடம் கேட்க

“இது டாக்சி நிற்கும் இடம், பஸ் வராது பாட்டி.. இன்னும் கொஞ்சம் தூரம் நடந்து போனால் அங்கே தான் பஸ் ஸ்டாப் இருக்கு..”

அவளை பாவமாக பார்த்தார் அவர்.. அந்த பாட்டியால் பஸ் ஸ்டாப் வரைக்கும் நடக்க முடியாது என்று அவளுக்கு புரிந்தது.

“சரி நீங்க எப்படி இங்கே வந்திங்க? உங்களை யார் அழைத்து வந்தது..?”

“பக்கத்து வீட்டில் உள்ள பையன் இங்கே வந்து விட்டான்.. நான் பாங்கில் பணம் எடுக்க போனேன்.. ஆனா அவுங்க காசு குடுக்க மாட்டேன் சொல்லிட்டாங்க...”

“ஏன் பாட்டி…”

“தெரியல அந்த பொண்ணு என்னென்னமோ சொல்லுது.. எனக்கு புரியலே பாப்பா” பேசிக் கொண்டு இருந்தவரின் நா தழு தழுத்தது..

உடனே அந்த வங்கியில் வேலை செய்பவருக்கு தமிழ் தெரியவில்லை. பாட்டிக்கும்  அவர்கள் பேசுவது புரியில்லை என்பதை புரிந்துக்கொண்டாள் கீர்த்தனா.

அந்த பாட்டியின் கண்களின் இருந்து வழிந்த கண்ணீரை கண்டதும் முதலில் அவருக்கு உதவு செய்ய வேண்டும் என நினைத்தவள்,

“நான் பேங்க்கு தான் போறேன்.. என்னுடன் வாங்க நான் அவர்களிடம் பேசறேன்” சொன்னவள் அந்த பாட்டியை அழைத்து சென்றாள் அவள்.

பாட்டியின் கண்களில் தெரிந்த நட்பாசையும் அவருக்கு பணம் கிடைக்கும் என்பதை புரிந்துக்கொண்டாள் கீர்த்தனா.

வங்கினுள் சென்று உரியவரிடம் பேசியவளுக்கு புரிந்தது அந்த பாட்டியின் மகன் வங்கி கணக்கை முடக்கிவிட்டான் என்று!

“பாட்டி உங்க மகன் வந்து அக்கௌன்த்ஸ் க்ளோஸ் செய்துவிட்டார்...”

பாவம் அவருக்கு கீர்த்தனா சொல்ல வருவது புரியவில்லை

“அவன் வீடுக்கு வந்து ரெண்டு மாசம் ஆச்சு.. எப்போ வருவான்னு  தெரியலியே... அவன் வந்தாள் தான் காசு எடுக்க முடியுமா பாப்பா...?” பரிதாமாக கேட்டவரின் பார்க்க அவளுக்கு மனம் வலித்து.. இவர் யாரோ எவரோ என நினைத்து செல்ல முடியவில்லை அவளால்..

“ம்ம்ம்ம் பாட்டி உங்களுக்கு எவ்வளவு பணம் வேணும்?”

“முன்னுறு எடுக்கணும் பாப்பா..”

“சரி நீங்க இங்கயே இருங்க... நான் என் வேலையை முடித்து உங்களுக்கு வேண்டிய பணத்தை எடுத்து வரேன்” சொல்லி எழுந்தவளை

“இது இல்லாமல் காசு எப்படி குடுப்பாங்க?” கேட்டவரை பார்த்து அழுவாத சிரிப்பதா புரியவில்லை அவளுக்கு... மௌனமாக அதை வாங்கிக் கொண்டவள்..

அவளின் வேலையை முடித்துக் கொண்டு, பாட்டிக்கு தேவையான பணத்தையும் ATMமில் எடுத்துக் கொண்டு அவரிடம் வந்தாள் அவள்.

பணத்தை பார்த்த மகிழ்ச்சியில் அவளிடம் “ரொம்ப நன்றி பாப்பா.. அந்த பொண்ணு என்னமோ தஸ் புஸ்ஸுன்னு சொன்னுச்சி எனக்கு அது பேசறது புரியலே...”

“பாட்டி நான் உங்கள் பஸ் ஸ்டாப்பில் இறக்கி விடறேன் என்னுடன் வருவிங்களா?” கேட்க

அவர் சரியென்று தலை அசைத்தார்..

வங்கியை விட்டு வெளியே வந்தவரிடம் “பாட்டி நீங்க சாப்டிங்களா” கேட்க

“இல்லேம்மா காலையில் வர காப்பி மட்டும் குடிச்சேன்” என்றார் அவர்

“எனக்கு பசிக்குது என்னுடன் சாப்பிட வருவிங்களா?”

அவருக்கும் பசி என்பதால் சரி என்றார்..

ஹோடேலில் உணவு ஆர்டர் செய்து காத்து இருக்கும் வேளையில் அந்த பாட்டியின் வங்கிக் கணக்கு புத்தகத்தை பார்த்துக்கொண்டு இருந்தாள் கீர்த்தனா...

அதில் பாட்டியின் பெயர் லட்சுமி எனவும் அவரின் மகனின் பெயர் சுரேஷ் என்று இருந்தது.

இரண்டு மாதத்திற்கு முன் அவரின் அக்கௌன்ட் மூடப்பட்டுள்ளது.. வங்கியில் இருக்கும்போது பாட்டி அவரின் மகனைப் பார்த்து இரண்டு மாதம் ஆகிவிட்டது சொன்னது நினைவில் வந்தது..

“உங்க மகன் இரண்டு மாதம் முன் இங்க வந்து பணம் எடுத்தாரா பாட்டி?” மெல்ல பேச்சி கொடுத்தாள் அவரிடம்

“ஆமா பாப்பா எனக்கு கண்ணு ஆபரேஷன் செஞ்சாங்க.. எனக்கு 68 வயசு பாப்பா அதனால ஆஸ்பத்திரியில  முழுப் காசு கட்ட வேண்டாம்.. கொஞ்சம் மட்டும் கட்ட சொன்னங்க... அதுக்கு என் மகன் இந்த புக்கை கேட்டான்” என்றார்...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.