(Reading time: 22 - 44 minutes)

ட்சுமி பாட்டி அதை எதையும் காதில் வங்கிக் கொள்ளவில்லை. “என்னால் கைநாட்டு போட முடியாது.. அந்த வீட்டையும் நிலத்தையும் நான் இந்த இல்லத்தின் பெயரில் எழுதி வைக்க போறேன். எனக்கு பிறகு இங்கு இருப்பவர்களுக்கு அது தேவை படும்.”

"என்னைப்போல் பிள்ளைகளால் கைவிடப் படுபவர்களுக்கு தேவைப் படும். அதை வித்து அதன் பணத்தில் நல்ல வழியில் செலவு செய்ய நான் விரும்பறேன். அதை தட்டி கேட்க உனக்கு உரிமை இல்லை. "

“நான் இருக்கும் போதே மகன் எனும் கடமையை நீ எனக்கு செய்யவில்லை, நான் இறந்த பின்னர் எதற்கு நீ செய்ய வேண்டும்..???? தேவையில்லை அதனால் நான் இறந்தால்  எனக்கு நீ கொல்லி வைக்க தேவையில்லை.”

“இதோ நிற்கிறானே குணா இவன் எனக்கு வைப்பான். நீ என்னை எப்படி கவனித்துக் கொள்ளனுன்னு நினைத்தேனோ அதை விட பத்து மடங்கு அதிகமா இவன் எங்களை பார்த்துக் கொள்கிறான்”

“இன்றைய வரைக்கும் என் பெயரில் எவ்வளவு சொத்து இருக்கிறதுன்னு இவனுக்கு தெரியாது.. ஆனா உனக்கு தெரியும்.. நான் உன்னிடம் கேட்டது பணத்தை அல்ல, பாசத்தை!! உனக்கு அதை கொடுக்க மனமில்லை... எனக்கு இதை உன்னிடம் கொடுக்க விருப்பமில்லை..”

“என்னை போல் கைவிடப் பட்ட பெற்றோருக்கு இந்த சொத்தில் வரும் பணம் தேவைப் படும்...”

“நான் செத்தால் எனக்காக நீ கண்ணீர் வடிக்க தேவை இல்லை... உனக்கு பயன் இல்லாதற்கு நீ எதற்கு கண்ணீர் வடிக்க வேண்டும்..” பாட்டியின் அவரின் கேட்விகளையும் வலிகளையும் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே அவரின் மகன் அவ்விடத்தை விட்டு கிளம்பிவிட்டனர்..

கார் சென்ற திசையை பார்த்துக் கொண்டு இருந்தார் லட்சுமி பாட்டி..

“கீர்த்தனா பார்த்து பணம் மட்டும் தான் வாழ்க்கையா? வயது ஆனவர்களை பார்த்துக் கொள்ள முடியாதவனால் என் பெயரில் இருக்கும் சொத்து மட்டும் வேணும்.. அது என்னை போல் இருப்பவர்களுக்கு தேவை படட்டும்” சொல்லி விட்டு பூக் கடையை நோக்கி சென்றார்.

அவரின் முகத்திலும் குரலும் வருத்தமோ சோகமோ இல்லை... கீர்த்தனாவிற்கே ஆச்சர்யம் தான்  அவள் முதல் முதலில் பார்த்த லட்சுமி பாட்டிக்கும் இப்போது அவருக்கும் இருக்கும் வித்தியாசத்தை நினைத்து..!

ஆனால் அவரின் முடிவை நினைத்துக் கவலையாக இருந்தது அவளுக்கு…

அவரின் முடிவு சரிதானா?

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.