(Reading time: 22 - 44 minutes)

ட்சுமி பாட்டி இல்லத்துக்கு வந்து ஒன்பது மாதம் கடந்த நிலையில் பாட்டியின் மகன் சுரேஷ் இல்லத்திற்கு அழைத்து,  வியாழக்கிழமை பாட்டியை பார்க்க வருவதாக சொன்னார். குணா இதை பாட்டியிடமும் கீர்த்தனாவிடமும் தெரிவித்தார்.

பாட்டியின் முகத்தில் எந்த மற்றமும் இல்லாமல் அவர் எப்போதும் போல் அங்கு இருந்தார்.

கீர்த்தனா எதிர் பார்த்த நாளும் வந்தது. லட்சுமி பாட்டியின் மகன் லெப்ட்  அண்ட் ரைட் வாங்கினால் தான் அவளுக்கு மனம் ஆறும் என்பதால் வியாழன் அன்று காலையிலே அங்கு சென்று விட்டாள்.

லட்சுமி பாட்டி எப்போதும் போல் இருக்க கீர்த்தனா தான் பாட்டின் மன நிலையை கணிக்க முடியாமல் இருந்தாள்.

அவள் பாட்டியுடன் வரண்டாவில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தாள். மதியத்தை நெருங்கும் வேளையில் ஓர் கார் அந்த இல்லத்துக்குள் நுழைய, வருவது யார் என்று கீர்த்தனாவிற்கு  புரிந்தது..

அங்கு வந்து நின்ற காரை பார்த்தவளுக்கு அதன் மதிப்பு ஒரு லட்சம் இருக்கும் என்பதை கணித்தாள். கண்டிப்பாக இவர்கள் பண வளம் நிறைந்தவர்கள் என்று  நினைத்தவள், ஏன் லட்சுமி பாட்டியை கவனித்துக் கொள்ள தவறினர் என புரியாமல் சிந்தித்தாள் .

காரில் இருந்து இறங்குபவர்களை பார்த்தாள் அவள்! இரு குழந்தைகள்..  அவர்களை பார்த்தால் சுமார் ஒரு 10 வயது இருக்கும், அவர்களுடன் ஒரு பெண்மணி இருக்க, கண்டிப்பாக அந்த பெண்ணிற்கு முப்பதுக்கு மேல் இருக்கும், அந்த பெண்ணின் பக்கத்தில் இருக்கும் நடுத்தர வயதில் இருப்பவரை பார்த்தாள், அது லட்சுமி பாட்டியின் மகன் என்பது போல் அவரின் முக ஜாடை இருந்தது.

அவர்களின் தோற்றதை பார்த்தால் அவர்கள் அனைவரும் செல்வ செழிப்புடன் இருப்பது  தெரிந்தது. அவர்களின் காருக்குபின்னால் இன்னொரு  காரில் மேலும் ஒருவர் வந்து இறங்க, அது யார் என யோசித்தாள் கீர்த்தனா.

லட்சுமி பாட்டியுடம் கேட்டால் கண்டிப்பாக அவருக்கு தெரியாது என தோன்றியது. சரி என்னதான் நடக்குது என பார்ப்போம் முடிவு செய்தாள் கீர்த்தனா.

காரின் சத்தம் கேட்டு அங்கு வந்த குணா தன்னை அவர்களிடம் அறிமுக படுத்திக் கொண்டார்.

எடுத்தவுடனே “நான் அம்மாவை பார்க்கணும்” சுரேஷ் சொல்ல

லட்சுமி பாட்டி உட்கார்ந்த  இடத்தில இருந்து ஒரு இன்ச் கூட நகராமல்  அங்கு நடப்பதை பார்த்துக் கொண்டு இருந்தார்.

வந்தவர்களை பாட்டி இருக்கும் இடத்திற்கு அழைத்து வர, பாட்டி அதே போல் தான் இருந்தார்.

“அம்மா இது என் லாயர். நீங்க இருந்த வீட்டையும் ஊரில் இருக்கும் நிலத்தையும் என் பேருக்கும் மாத்தனும் அதான்  இவரை அழைத்து வந்தேன்... டாகுமென்ட்ஸ் எல்லாம் ரெடி பண்ணிட்டேன். நீங்க இவர் சொல்லுற  இடத்தில் கையெழுத்து போடுங்க.. நான் இன்னைக்கே இதை என் பேருக்கு ரிஜிஸ்டர்  பண்ணனும்” என்றான் .

கீர்த்தனாவால் அமைதியாக இருக்க பெரும்பாடு பட வேண்டியதாக இருந்தது. வந்தவன் ஒரு வார்த்தை கூட எப்படி இருக்கீங்க, யார் உங்களை இங்கு அழைத்து வந்து விட்டதுன்னு கேட்கவில்லை. சுரேஷின் மனைவியும் மக்களையும் அறிமுக படுத்தவில்லை… பாட்டியின் பெயரில் உள்ள சொத்துக்களை அவனின் பெயருக்கு மாற்ற வந்து இருக்கிறான்.

கீர்த்தனா மீண்டும் பாட்டியின் முகத்தை பார்த்தாள், உணர்ச்சி துடைத்த முகம் போல் இருக்க.. அவளுக்கு பயமாக இருந்தது. அவளின் கைதொலைபேசியை எடுத்தவள், இல்லத்துக்கு வரும் டாக்டரை அழைத்து விபரம் சொல்ல அவர் உடனே அங்கு வருவதாக கூறிவிட்டார்.

அந்த லாயர் ஸ்டாம்ப் பட்டை பாட்டியிடம் வைத்து, “உங்க பேரு விரலை நிட்டுங்கம்மா” சொல்ல

“எதுக்கு” நிதானமாக கேட்க

“அம்மா இப்போதானே சொன்னேன். வீட்டை என் பெயருக்கு மாதனும்ன்னு” அவனின் குரல் சற்று கோவத்துடன் இருக்க

“என் வீட்டை யாருக்கு குடுக்கணும் முடிவு பண்ணவேண்டியது நான்.. நீ இல்லை... நான் இருக்கேன்னா செத்தேனா என்று கூட பார்க்காமல் இன்னைக்கு சொத்தை உன் பேருக்கு மாத்தி எழுத வந்து இருக்க.. நீ கேட்டால் நான் குடுப்பேன்னு நீ எப்படி நினைக்கலாம்?” அதே நிதனத்துடன் கேட்க

“என்ன பேசறிங்க தேவை இல்லாமல் என்னை அவமானம் படுத்தாதிங்க ... எனக்கு பிசினஸ்ல கொஞ்சம் லாஸ்ட். அந்த வீட்டையும் நிலத்தையும் பேங்க்குல அடமானம் வைக்க போறேன்.. சீக்கிரம் கைநாட்டு போடுங்க” என்றான் படு அலட்சியமாக

“முடியாது” என்றார் அழுத்தமாக

“உங்களுக்கு நான் கொல்லி போடணும் நினைத்தால் அதில் கைநாட்டு போடுங்க.. இல்லை என்றால் இதுதான் கடைசி தடவை நீங்க என்னை பார்ப்பது” என அவனின் அடுத்த யுத்தியை கையாண்டான்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.