(Reading time: 22 - 44 minutes)

பாட்டியின் முகத்தில் தெரிந்த ஒரு எதிர்பார்ப்பு கீர்த்தனாவிற்கு  கவலையை  கொடுத்தது.. ஒருவேளை அவரின் மகனை எதிர்பார்த்து இருப்பார் போல அவள் நினைக்கையில் அது உண்மை என்பதை போல

“என் மகனோ நினைத்து கதவை திறந்தேன் பாப்பா” என்றார் அவர்.

“ம்ம்ம் ஏன் பாட்டி ஏதும் பிரச்சனையா?”

“காலையில் இருந்து பைப்பில் தண்ணி வரல, வெளியே எட்டி பார்த்த எல்லாரும் லோரில தண்ணி எடுக்கிறாங்க” பாவமா அவர் சொல்ல...

“நான் அங்கே சென்று எடுத்து வரேன்.. நீங்க தண்ணீரை நிரப்ப தேவையான பக்கெட் எடுத்து வைங்க” சொல்லியவள் ஒரு பக்கெட் எடுத்து தண்ணீர் லோரி இருக்கும் இடம் நோக்கி நடந்தாள்... அடுத்த ஒரு மணி நேரத்திற்கு லட்சுமி பாட்டிக்கு தேவையான தண்ணீரை பிடித்துக் கொடுத்தாள்..

அதன் பின் லட்சுமி பாட்டி அவரின் காலை கடன்களை முடித்துக் கொண்டு வரும் நேரத்தில் கீர்த்தனா அவருக்கு சுடச் சுட தோசையும் தொட்டுக் கொள்ள சட்டினியும் செய்துக் கொடுத்தாள்..

அதை பார்த்து அந்த முதியவரின் கண்ணில் கண்ணீர் வந்தது..

“பாட்டி மெயின் பைப்பு உடைந்து ரெண்டு நாட்களுக்கு தண்ணீர் வராதுன்னு தான் லோரில வந்து தண்ணீர் குடுக்கறாங்க... நீங்க இப்போ டாம் திறந்துவிட்டால் அங்கே இருக்கிற கூட்டம் இங்க வந்துவிடும்” அவள் கேலியாக சொன்னாள்..

அவளின் கேலியை புரிந்துக் கொண்டது போல் அவரின் முகத்தில் சிறு புன்னகை இருந்தது.

அவர் சாப்பிடு முடிக்கும் வரை அமைதியாக அவரின் முகத்தையே பார்த்துக் கொண்டு இருந்தாள் கீர்த்தனா..

இந்த தள்ளாத வயதில் அவரே சமைத்து சாப்பிட வேண்டிய நிலை.. இவள் தோசை வார்த்து கொடுத்ததில் அவரின் முகத்தில் தான் எத்தனை சந்தோஷம்..

“பாட்டி நான் ஓர் இடத்துக்கு போறேன் நீங்க என்னுடன் வருவிங்களா?” அவள் கேட்க அவரோ சந்தோசமாய் தலை அசைத்தார்...

காரின் செல்லும் வழி முழுக்க லட்சுமி பாட்டி வெளியே எட்டி பார்த்துக் கொண்டு வந்தார்.. அன்று அவர் முகத்தில் தெரிந்த தவிப்பு இன்று இல்லை.. ஆனால் அவள் சொல்ல போவதை இவர் எப்படி ஏற்றுக் கொள்வர் என்று தெரியவில்லை.

ஒருவேளை  அவருக்கு அவளின் முடிவில் விருப்பம் இல்லையெனில் வாரத்தில் இரு முறையாவது அவரை சென்று பார்க்க வேண்டும் என நினைத்துக் கொண்டாள்.

அவள் சென்று காரை நிறுத்திய இடத்தை பார்த்தார் லட்சுமி பாட்டி.. அங்கே நிறைய முதியோர்கள் இருந்தனர்.. ஆனால் அவர்களின் முகத்தில் கவலை கோடுகள் தெரியவில்லை.. அமைதியாக அவ்விடத்தையே பார்த்துக் கொண்டு கீர்த்தனாவின் பின்னால் சென்றார் அவர்..

அவர்களின் எதிரே வந்த நடுத்தர வயது ஒருவர் இவர்களை பார்த்து “வணக்கம் கீர்த்தனா, வணக்கம் அம்மா” என்று  சொல்ல

“வணக்கம் குணா.. நீங்க உள்ள போங்க நான் இவர்களை அழைத்து வரேன்” சொன்னதை கேட்டு பாட்டியோ மனதில் இது என்ன இடம் புரிந்துக் கொண்டதுக் அடையாளமாக அவரின் முகத்தில் கோப ரேகைகள்...

“பாட்டி என்னை திட்டாதிங்க.. இன்னும் ஒருவாரத்தில் என் பெற்றோருக்கு திருமண நாள் வருது.. அன்று இங்க இருப்பவர்களுக்கு மதிய உணவு குடுக்கிறோம், அதான் இங்கு எத்தனர் பேர் இங்க இருக்காங்கன்னு கேட்க தான் நான் இங்கு வந்தேன்". அவர் இவளிடம் கேட்கும் முன்பே விளக்கம் சொல்லிவிட்டாள்...

அதன் பின் அவரை அங்கு இருந்து நாட்களியில் இருக்கையில் அமர வைத்து அவள் குணாவை பார்க்க சென்று விட்டாள்..

கீர்த்தனா அவளின் வேலையை முடித்துக் கொண்டு வரும் பொது லட்சுமி பாட்டி அங்கு இருப்பவரிடம்  பேசிக் கொண்டு இருந்தார்..

அவரிடம் பேசிக் கொண்டு இருந்த சுமதி பாட்டியிடம் நலம் விசாரித்தாள் கீர்த்தனா..

அவர் சென்ற பின்னரும் அங்கேயே அமர்ந்து ஒரு பெருமுச்சி விட்டவள் இவரிடம் தான் இங்கு அழைத்து வந்த காரணத்தை சொன்னாள் ..

“பாட்டி நான் சொல்வதை நீங்க எப்படி எடுத்துப்பிங்கன்னு எனக்கு தெரியலை ஆனா நீங்க கண்டிப்பா தெரிந்துக் கொள்ளனும்.. உங்க மகன் உங்க அக்கௌட் உள்ள பணத்தை அனைத்தும் எடுத்து விட்டார்.” மருத்துவமனையில் அவர்கள் குடுத்த பில்லையும் லட்சுமி பாட்டியின் மகன் எடுத்த மொத்த பணத்தின் தொகையும் சொன்னாள்.

அவரின் முகத்தில் தெரிந்த அதிர்ச்சியும் கண்கள் கலங்கி இருப்பதை பார்த்தவளுக்கு என்றாவது ஒரு நாள் அவருக்கு தெரிந்து ஆக வேண்டும்,  இன்று தெரிந்துக் கொள்ளட்டும் நினைத்து மேலும் தொடர்ந்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.