(Reading time: 22 - 44 minutes)

ங்க பணத்தை எடுத்து போனவர் இன்றைக்கு வரைக்கும் உங்களை வந்து பார்க்கவே இல்ல பாட்டி..  அவரின் தொலைபேசி எண்கள் கூட உங்களிடம் இல்லை..  சரி உங்களுக்கே உடல் முடியாமல் போனால் எப்படி அவருக்கு தெரிவிப்பிங்க? இன்று நான் உங்க வீடுக்கு வாராமல் இருந்தால் என்ன செய்து இருப்பீங்க …” கேள்வி கேட்ட லட்சுமி பாட்டியிடம் இருந்து எந்த பதிலும் இல்லாமல் இருக்க கீர்த்தனா மேலும் தொடர்ந்தாள்.  

“உங்களை இப்படி பார்க்க ரொம்ப கஷ்டமா இருக்கு பாட்டி... இதுக்கு

மேல எனக்கு சுத்தி வளைத்து கேட்க வரலை அதனால நேரடியாகவே  கேட்குறேன்..”

“நீங்க இந்த இல்லத்துல தங்குறிங்களா? இங்க உங்களை நல்ல பார்த்துக் கொள்வார்கள்.. இங்க நிறைய பேர் இருக்காங்க .. உங்களுக்கு பேச்சு துணைக்கு ஆள் இருக்கும், நீங்க தனியா இருக்க வேண்டியது இல்ல... உங்க வயதுக்கு ரொம்ப ஓய்வு வேண்டும் பாட்டி..”

".."

“நான் இந்த இல்லத்துக்கு மாத மாதம் வருவேன். எனக்கு இங்கு உள்ளவர்கள் அனைவரையும்  தெரியும்.”  

“இந்த இல்லம் கொஞ்சம் சிறப்புன்னு சொல்லலாம்... இல்லத்துக்கு வெளியே பார்த்திங்களா? பல பூக்கடைகள், பலகார கடைகள்.. எல்லாம் இங்கு தங்கி இருபவர்களின் கடைகள்.. யாருக்கு என்ன வேலை செய்யணும் தோணுதோ அதை செய்வார்கள்.. சிலர் சமையல் செய்ய உதவு செய்வாங்க, சிலர் தோட்டம் போடுவாங்க, சிலர் மல்லிகை பூ தொடுப்பார்கள்”

“இவர்களின் மனதிலும் நாங்கள் யாருக்கும் உபத்திரம்ன்னு நினைக்க கூடாதுன்னு தான் இப்படி பல வழிகளின் இந்த இல்லத்தின் நிர்வாகி அவர்களுக்கு செய்யறாங்க..”

லட்சுமி பாட்டியின் கன்னங்களில் கண்ணீர் உருண்டோடியது. அவர் என்ன மனநிலையில் இருக்கிறார் என்பதை கீர்த்தனாவால் உணர முடியவில்லை..

“உங்களுக்கு இங்க வர விருப்பம் இல்லனா பரவாயில்லை பாட்டி. வாரத்தில் இருமுறை உங்களை நான் வந்து பார்ப்பேன்.” என்று  சொன்னவள் அவரின் கையை பிடித்துக்கொண்டு அவரின் அருகில் அமர்ந்து இருந்தாள்.

அங்கே எல்லோரும் மதிய உணவிற்கு செல்ல கீர்த்தனா லட்சுமி பாட்டியையும்  அங்கு அழைத்து சென்றாள்.. அங்கே அனைவரும் ஒன்றாக அமர்ந்து அரட்டையடித்து  அவர்களின் உணவை முடித்தனர்..

கீர்த்தனா பாட்டியுடன் பேசி முடித்த பின்பும், உணவு உண்ணும் போதும் சரி, அதன் பின்பும் அவர் கீர்த்தனாவுடன் பேசவில்லை...பாட்டியை பத்திரமா வீட்டில் விட்டவள் நாளை அவரை வந்து பார்ப்பதாக சொல்லி சென்றுவிட்டாள்.

றுநாள் லட்சுமி பாட்டியை பார்க்க சென்றாள் கீர்த்தனா... அவள் அங்கே செல்லும் போது வீட்டின் கதவு திறந்து இருக்க பாட்டி ஹாலில் தரையில் இருக்க அவரின் கையில் ஒர் புகைப்படத்தை வைத்து அழுதுக்கொண்டு இருந்தார்...

மெல்ல அவரின் அருகே சென்று கீர்த்தனா அவரின் அருகே அமர்ந்தவள் அவரையே பார்த்தாள்.. லட்சுமி பாட்டி நேற்று இருத்த உடையிலே இன்னும் இருக்க, அவரின் கண்கள் சிவந்தும் முகம் அழுது விங்கி இருந்தது.

“பாட்டி” மெல்ல அழைக்க, அவரின் பார்வையோ அந்த புகைப்படத்திலே நிலைத்து இருந்தது..

“பாட்டி” என மீண்டும் அழைத்து அவரின் தோளை தொட, அவர் அவளை பார்த்து மேலும் கதறி அழுதார்...

“பாட்டி எவ்வளவு நேரமா இப்படி அழுது இருக்கீங்க.. எழுந்திறிங்க வந்து குளிங்க..” அவரை வற்புறத்தி குளிக்க உடை எடுத்துக் கொடுத்து அவரை குளியல் அறையில் சென்று விட்டு வந்தாள்...

அதன் பின் வீட்டை பெருக்கி சுத்தம் செய்து, அவசரமாய் ஒரு குட்டி சமையலை முடித்து, மீண்டும் ஒரு போராட்டம் நடத்தி அவரை சாப்பிடவும் வைத்தாள்.

அழுதுக் கொண்டே சாப்பிட அமர்ந்தவர் உணவு உள்ளே சென்றவுடன் அவரின் அழுகை நின்றது. அதன் பின் சற்று நேரத்துக்கெல்லாம் உறங்கியும் விட்டார். லட்சுமி பாட்டி துங்கி எழும் வரை கீர்த்தனா அங்கேயே இருந்தாள்.

எழுந்தவர் மீண்டும் அழ “ஷ்ஷ் பாட்டி என்னது இது ஏன் இப்படி அழறிங்க ..? நான் உங்க மனம் கஷ்ட படர மாதிரி பேசி இருந்தால் என்னை திட்டுங்க அதை விட்டு ஏன் அழறிங்க ” அவரை அதட்டி குடிக்க தண்ணீர் கொடுத்தாள் . 

“உன் மேல எனக்கு வருத்தம் இல்ல பாப்பா... என் மகன் என்னை அனாதை போல் விட்டுட்டு என்னோட பணத்தையும் எடுத்துகிட்டு என்னை குப்பையிலே போட்டு விட்டானே” என  சொல்லி அழுபவரை என்ன சொல்லி தேற்றுவது தெரியாமல் அவரின் கையை பிடித்துக் கொண்டாள்..

தானே சமாதனம் ஆனவராய் “பாப்பா நேற்று அங்கே என்னை அழைத்து போனியே அங்கே எவ்வளவு காசு கட்டணும்.. என் கிட்ட நீ கொடுத்தது  மட்டும் தான் இருக்கு” அழுதுக்கொண்டு கேட்டவரை ஆச்சரியமாக பார்த்தாள் கீர்த்தனா..

பெரும்பாலும் முதியோர்கள் இப்படி இல்லத்திற்கு வர அவ்வளவு சிக்கிரம் சம்மதம் சொன்னது இல்லை. எத்தனை பேர் பகல் நேரம் முழுக்க வாசல் கேட்டை பார்த்த வண்ணம் அவர்களின் மகன்/ மகளுக்காக எதிர்பார்த்து, இரவில் ஏமாற்றத்தில் அழுது மனம் உடைத்தவர்கள் எத்தனை.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.