(Reading time: 22 - 44 minutes)

லியை ஏதுக்க முடியாமல் மனநிலை பதிக்க பட்டவர்கள் தான் எத்தனை... அதில் இருந்து சிலர் மட்டுமே வெளியில் வர இன்னும் பலர் அப்படியே இருக்கின்றனர் ..

அவர்களின் மனதின் வலியை போக்க இல்லத்தின் நிர்வாகி செய்த முயற்சிகள் தான் எத்தனை.

இந்த உலகில் வாழும் எந்த மனிதனின் மனதில் தான் காயம் இல்லை.? சிறியவர்கள் முதல் முதுமை வரை மனதில் வாங்கும் காயமும் வலியும் இருக்காதவர்கள் யார்?

கீர்த்தனாவின் யோசைனையான முகத்தை பார்த்தவர் லட்சுமி பாட்டியின் முகத்தில் கவலையின் ரேகைகள்.

“என்ன பாப்பா ரொம்ப காசு வேணுமா?”

“இல்ல பாட்டி அது ஐந்து வக்கீல்கள் சேர்ந்து நடத்தும் இல்லம் மற்றும் அந்த இடம் கூட ஒரு வக்கிலின் சொந்த நிலமுன் கூட. அங்கே தினமும் டோனஷேன் வரும் அதை வைத்தும் இந்த இல்லம் நடக்குது. அங்கே வாரம் ஒரு முறை மருத்துவர்கள் வருவாங்க, யாரிடமும் பணம் வாங்க மாட்டர்கள்… பாட்டி உங்களுக்கு உண்மையிலே அங்க வர விருப்பமா?” சந்தேகத்துடன் கேட்டாள் கீர்த்தனா

“ம்ம்ம் என்னாலே முன்ன போல வேலை செய்ய முடியலே.. துணி அலசி அதை புளிய முடியல.. உடம்புல தெம்பு இல்ல.. என் மகனிடம் என்னை அவனுடன் அழைத்து செல்ல கேட்டேன் அவன் ஒண்ணுமே சொல்லாமல் போய்ட்டான். ஒரு காய்ச்சல் வந்தால்  என்னை பார்த்துக்க யார் இருக்கா..? கண்ணு ஆபரேஷன் பண்ணிட்டு வந்தேன், சமைக்க கொள்ள எவ்வளவு கஷ்டமாய் இருந்தது? உத்து பார்த்து சமைக்கிறதுகுள்ள  கண்ணு ரொம்ப வலி எடுத்திடும்”.

“என் புருஷன் போனதுக்கு அப்பறம் இவன் என்னை பார்த்து கொள்வான்னு நினைச்சேன்.. ஆனா அவன் என்னை பார்க்க வர மாட்டான் . வந்தாலும்  10 நிமிடத்துக்கு மேல இருக்க மாட்டான். எங்கே தங்கி இருக்கான், எப்படி இருக்கான்னு எனக்கு ஏதும் தெரியாது.”

“போன மாசம் தான் எனக்கு தெரிஞ்சவங்க சொன்னங்க அவனுக்கு கல்யாணம் ஆகிவிட்டாதாம், பிள்ளைங்க கூட இருக்காம்... அவனுக்கு கல்யாணம் ஆகினதே யாரோ சொல்லி தெரிய வேண்டி இருக்கு.. நான் என்ன அவ்வளவு பாரமாகவா  இருக்கேன்...” கேட்டு அழுபவரை எப்படி தேற்றுவது  என அவளுக்கு தெரியவில்லை.

“நாம் எப்போ பாப்பா அங்கே போகலாம்” அவரே மீண்டும் கேட்க கீர்த்தனாவால் அவரின் மனநிலையை புரிந்துக் கொள்ள முடிந்தது.

அதன் பின் இருவரும் அவருக்கு தேவையான பொருட்களை எடுத்துகொண்டனர் . வீட்டில் உள்ள இதற பொருட்களை அக்கம் பக்கத்தில் இருபவர்களிடம் கீர்த்தனா கொடுத்து  விட்டாள்.

வீட்டை முழுமையாக சுத்தம் செய்த பின்னர், கீர்த்தனா பக்கத்து வீட்டில் இருப்பவர்களிடம் இல்லத்தின் முகவரியையும் தொலைபேசியின் நம்பரையும் கொடுத்து  விட்டு வந்தாள். லட்சுமி பாட்டியை தேடி அவரின் மகன் வந்தால் கண்டிப்பாக அவரிடம் முகவரியை தந்துவிடும்படி கூறினாள் .

வ்வொரு மாதமும் கீர்த்தனா இல்லத்துக்கு சென்று லட்சுமி பாட்டியை பார்ப்பாள். முன்பு போல் அவரின் முகத்தில் இறுக்கம் இல்லை.. இந்த இல்லத்தின் வாழ்க்கையை மிகவும் சந்தோஷத்துடன் ஏற்துக்கொண்டார் .. இது எல்லாம் தவிர அந்த இல்லத்தை நிர்வகிக்கும்  நிர்வாகி குணா..! குணா லட்சுமி அம்மாவிடம் மிகவும் அன்பாக இருப்பது அவரை நடமாட வைக்கிறது.

குணா அங்கு இருக்கும் அனைவரையும் அம்மா, அப்பா என அழைப்பது அங்கு இருக்கும் அனைவருக்கும் பிடிக்கும். ஏனெனில் அவரின் அந்த அழைப்பு உதட்டில் இருந்து வராமல் மனதில் இருந்தது வருவதால் தான் .

அங்கு வந்த சில நாட்களுக்கு அவர் மிகவும் கவலையில் இருக்க, அதன் பின் அங்கு நடக்கும் சமய வகுப்புக்கு செல்லுவது, தினமும் மாலையில் இல்லத்துக்கு எதிரில் இருக்கும் கோவிலுக்கு போவது, அங்கு உள்ள பூ கடையில் சரம் பூ கோர்ப்பது என அவரின் வாழ்க்கை மாறியது..

ஒரு முறை அவள் அங்கு செல்லும்போது அவர் பூக் கடையில் இருந்தார்.

“என்ன பாட்டி என்னை ஞாபகம் இருக்கா” அவரிடம் வம்பு வளர்க்க

“நான் உன்னை கேட்கணும் பாப்பா.. என்னை இங்கு வந்து விட்டதுல இருந்து  இன்றைக்கு தான் நான் உன்னை பார்க்குறேன்” என்றார்

“பாட்டி பொய் சொல்லுறிங்க ... நான் மாதம் ஒரு முறைதான் இங்கு வருவேன்.. நான் வரும்போது எல்லாம் நீங்க ரொம்ப பிஸியா கோவிலுக்கு சென்றுவிடுவீர்கள் .”

“நான் வர வரைக்கும் நீ ஏன் வெயிட் பண்ணல? “

“நல்ல பேச கத்துகிட்டாங்க”

“நான் பொறந்ததுல இருந்தே பேசறேன் பாப்பா” என்றவர் அவளை பார்த்து சிரித்தார்

கீர்த்தனாவிற்கு மிகவும் ஆச்சர்யம்! இப்படி ஒரு மற்றத்தை அவள் கண்டிப்பாக  எதிர்பார்க்கவில்லை அவள்.. அவரிடம் பேசிவிட்டு அங்கு இருந்து கிளம்ப மாலையானது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.