(Reading time: 2 - 4 minutes)

விடாது காதல் - கிருஷ்ண பாபு

Rose

'ந்த ட்ரெய்ன் சென்னைக்கு எப்போ போகும்?'

'காலை எட்டு மணி!'

'அதுக்குள்ள என் லவ்வ ஓகே பண்ணிடேன்!'

'ஐயோ! மூணு வருசமா காலேஜ்ல உன்மேல வராத லவ் இந்த முக்கால் நாள்ல எப்படி வரும்? இப்படிலாம் யோசிக்காதடடா!'

'ப்ளீஸ்,இதற்கு மேலேயும் நடிக்காதே!எனக்குத் தெரியும்!'

'என்ன தெரியும்?'

'என் போட்டோஸ் புல்லா நீ சேவ் பண்ணி வச்சிருக்குறதா விமலா சொன்னாளே?!'

'பேத்தல்!நம்ம ஃப்ரெண்ட்ஸ் அத்தனை பேரோடதும் இருக்கு!பார்க்கிறியா?'

'அப்போ அன்னிக்கு ப்ரவீன் பைக்ல உட்கார மாட்டேன்னு என் பைக்ல உட்கார்ந்தது?'

'shit!அவன் மோசமானவன்டா ! நீ அப்டி இல்ல!ஆனா நீயும் இப்போ அப்டிதானோனு சந்தேகம் வருது!'

'சரி!நேற்று கடைசிநாள் க்ளாஸ்ல என்னையே பார்த்துகிட்டு இருந்தது?'

'நிஜமா உன்னைப்போல நல்ல ஃப்ரெண்டை பிரியப்போற வருத்தம் ரொம்ப இருந்துச்சு! வேற எதுவுமே இல்லடா!'

'என் காதலை நான் நிரூபிக்க நான் ஏதாவது செய்யணுமே? ஓகே.thats the way!'

'சினிமால வர்றாப்ல குதிச்சுடுவேன்னு பயமுறுத்த போறியா?'

'இல்ல, இது அதுக்கும் மேல……'

'ஐ!நீ விக்ரம் பட டயலாக் பேசுனாலும் சரி, விக்ரமன் பட டயலாக் பேசுனாலும் சரி, என் பதில் BIG NOதான்!'

'ok. பார்க்கலாம்! குட்நைட்!'

டக்தடக் தடக்தடக்…

உறங்க முடியவில்லை அவளால்.

'என்ன செய்யப் போகிறான்?'

'பேசாம சஸ்பென்சை உடைச்சு இப்பவே ஐலவ்யூ சொல்லிடலாமா?'

'அடச்சே!dirtyயா இருக்கும்!இன்னும் ஒரு தடவை கெஞ்சட்டும்!'

செங்கல்பட்டு.

பர்த்தைவிட்டு இறங்கியவன் முகத்தையே பார்த்தாள். சலனமே இல்லை.

ரயில் கிளம்பியும் அவன் வரவில்லை.

இவள் மனம் திக்திக்.

வெளியே தள்ளும் ஆக்ரோஷத்தில் அறைந்த காற்றை அலட்சியப்படுத்தி நுழைகதவை திறந்தாள்.

தூரத்தில் கையில் ரோஜாவுடன் அவன் ஓடி வருவது தெரிந்தது.ஒளித்து வைத்த காதலை சிரிக்கும் கண்களில் தேக்கியபடி கைகளை நீட்டினாள்.

பொங்கிடும் காதலோடு உற்சாகமாய் துரத்தலானான் ரயிலை.

உச்சவேகத்தை எட்டிய ரயிலின் கம்பியைப் பற்றித் தாவி நுழைந்து மண்டியிட்டு ரோஜா நீட்டி மூச்சு வாங்கியபடி சொன்னான்.

'கடைசியா நான்தானே ஜெயிச்சேன்!'

கனத்த மௌனம்.

அனைவர் கண்களும் அவனை நோக்கியபடி!

ஆனால் அவளைக் காணோம்.

'ஸ்பீடா போற ரயில்ல ஏறுறதே இந்தப் பைத்தியக்காரனோட தினசரி வேலையாப் போச்சு! என்னிக்கு அவளாட்டம் இவனும் சாகப்போறானோ தெரியல!'

முணுமுணுத்தார் முறுக்கு விற்கும் தாத்தா.

எங்கோ பாடல் கசிந்தது.

'நினைத்து நினைத்துப் பார்த்தால்

நெருங்கி அருகில் வருவேன்.

உன்னால்தானே நானே வாழ்கிறேன்!'

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.