(Reading time: 2 - 4 minutes)

போ நீ போ - கிருஷ்ண பாபு

broken heart

ங்கேதான் வேலை செய்றியா?'

கால்மேல் கால் போட்டபடி உட்கார்ந்தாள்.

'ஆமா,இன்னிலிருந்துதான்… part time job!' மெல்ல எதிர் சீட் நுனியில் அமர்ந்தபடி சொன்னான்.

'எத்தனை பவர்?'அவனது கண்ணாடியை கழற்றி(பிடுங்கி)யபடி கேட்டாள்.

'4.5'மிரண்டு போய் இமைக்காமல் சொன்னான்.

'கொஞ்சம் அதிகம்தான்..இல்ல? அந்த போர்டுல cheese pizza என்ன ரேட் போட்ருக்குனு சொல்லு!'

'எந்த போர்டு?'அப்பாவியாய் கேட்டான்.

'ஹஹஹஹா! சரி விடு! உன் மொபைலை கொடேன்!'

'ஐயோ! மாட்டேன்!'

'இதோ பார்!ஒண்ணும் நோண்ட மாட்டேன்,ஒழுங்கா கொடு!'

அரைமனதோடு தந்தான்.

'மைக்ரோமேக்ஸ்! இந்த டப்பா செல்லை வச்சுகிட்டுதான் இவ்ளோ நாள் சீன் போட்டியா?'

'இதுல எல்லா ஆப்ஷனும் இருக்கு! 3G,5 MP front cam,1.3 MP rear cam,1.5GB RAM,email……' நீட்டி முழக்க ஆரம்பித்தான்.

'stop!stop!'காதுகளை பொத்தினாள்.

'உங்க தாத்தாவோட போன்தானே?' நக்கலாய் கேட்டாள்.

'என்னுதுதான்…ஆனா செகண்ட் ஹேன்ட்!'பிசிறடித்தது குரல்.

'என்னோட போன் பார்க்கிறியா?' iphone 6ஐ நீட்டினாள்.

கையில் வாங்காமலேயே பார்த்தான்.

'நல்லா பளபளனு அழகா இருக்கு!'

பீட்ஸாவின் நான்காவது பீஸை நாசூக்காய் மென்றபடி கேட்டாள்.

'ஒரு போனில் கூட இவ்வளவு distanceல இருக்குற நாம லைஃப்ல எப்டி ஒண்ணா சேர முடியும்?'

'…………'பதிலின்றி நின்றான்.

'புரிஞ்சுக்க..இது சினிமா இல்ல.. ஒரே பாட்டுல பணக்காரனா ஆகுறதுக்கு!வாழ்க்கை!'

'ஆனா……'

'என்ன ஆனா? ஆறு மாசமா நாம லவ் பண்ணினோம்தான்.. ஆனா அதெல்லாம் timepassமா! கல்யாணம்னு வரும்போது இதெல்லாம் செட்டாகாதுனு மறந்துடணும்! புரியுதா?'

விக்ரமன் பட வில்லி போல பேசினாள்.

கண்கள் பனிக்க நின்றான்.

iphone ரிங்கியது.

'ஹலோ! காபி ஷாப்ல இருக்கேன் டார்லிங்! நோ நோ! marriage வரைக்கும் தனியா உங்க கூட எங்கேயும் போகக்கூடாதுனு வீட்ல ஸ்ட்ரிக்ட் உத்தரவு!'

பேசியபடி காரில் ஏறினாள்.

கண்ணீரைத் துடைத்தபடி திரும்பியவன்  சட்டையின் உள்பாக்கெட்டில் இருந்து அந்த குட்டியூண்டு அழகான போனை எடுத்து டயலினான்.

'ஹலோ! இந்த கிரகத்திலும் பொண்ணுங்க அப்படித்தான் இருக்காங்க மாப்ள! நான் இன்னிக்கு நைட்டே கிளம்பி அங்கே வந்துடுறேன்! பேச்சிலர் லைப்தான் நமக்கு எப்பவும் ஜாலி மாமே……!'

உற்சாகமாய் சிரிக்க ஆரம்பித்தான் கண்களை இடவலமாக இமைத்தபடி.

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.