(Reading time: 3 - 5 minutes)

நட்புக்குள்ளே என் காதல் சிக்கிக்கொள்ள - கிருஷ்ண பாபு

Whats app

ந்த வீடுதானா?நல்லா தெரியுமா?' zero டெசிபலில் கிசுகிசுத்தான்.

'தினம் follow பண்றேன்!எனக்கு தெரியாதா?'

'என்ன எழவு வீடு கட்டிருக்கான்? மாடியேற ஒரு பைப் கூட இல்லாம!'

'Snapdealல ஏணி ஆர்டர் பண்ணுவமா?மூடிக்கிட்டு வாடா!'

செகண்ட்ஷோ விட்டு சைலன்ட்டாக சுவரேறி ஹாஸ்டலில் நுழைந்த அனுபவம் அவர்களுக்கு இப்போது (வாழ்க்)கைகொடுத்தது. ஒருவழியாக ஹாலில் புகுந்தனர்.

அதிக சிரமமின்றி அவளது பெட்ரூமை(கதவில் 70mm ஹிரித்திக் ரோஷன்) கண்டுபிடித்தனர். மெ…ல்…ல செ.மீ. மேல் செ.மீ. வைத்து நெருங்கினான் அவள் அருகே.

இதழோரம் சிறு பிறை போல் குறும்புன்னகையோடு sleeping angel ஆக உறங்கிய அவளைக் கண்டதும் கொஞ்சம்… இல்லை… ரொம்பவே கிறங்கிப்போனான்.

'போதும் மயங்குனது! வந்த வேலையை கவனிப்போம்!'

'எவ்ளோ அழகு என் ஆளு! அனுப்புனது அப்டியே இருக்கட்டுமேடா!'

'புரிஞ்சுக்க! அவளுக்கு பிடிக்கலனா பிறகு நீ அவளோட friendஆகக் கூட இருக்க முடியாது!'

'yes,you may correct!'

'காலேஜ் சேர்ந்து one month கூட ஆகல,அதுக்குள்ள இப்டி மெசேஜ் அனுப்புனது உன் தப்பு மாப்ள!இப்போ வரைக்கும் அதை அவ பார்க்காம இருந்ததே உன் luckதான்!'

'அதோ அவ மொபைல்!'

நல்லவேளை பாஸ்வேர்ட் எதுவும் போடலை.நெட் ஆன் செய்து whatsapp திறந்ததும் ரூமில் அலைந்து கொண்டிருந்த இவனது மெசேஜ் உயிர் கிடைத்த சந்தோசத்தில் 'ஙீஙீ' கத்தியது. லேசாக அவள் சிணுங்கியதும் தரையில் புரண்டு பதுங்கினர்.

மீண்டும் அவளது மெல்லிய zzzzzzzz கேட்டதும் எழுந்து மெசேஜை அவிழ்த்தான்.

'எதையோ இழந்தேன்.

எதையோ உணர்ந்தேன்.

தொலைந்தது தேடி

தொடர்ந்தேன் ஒரு விசாரணை.

…………………………

blah blah blah blah

blah blah blah blah

…………………………

…………………………

உனக்குப் பிடிக்காதது

எனக்கு மட்டும் எதற்கு?

அது

என்னுயிராய் இருப்பினும்……

Dear, I Love You

please reply whatever u think'

'என்னமா உருகி எழுதிருக்க மாப்ள! டெலிட் பண்ணாம விட்டுடவா? '

'வேணாம்! டெலிட் பண்ணிடு!'

'ஏன்?'

'மனசே சரியில்லடா!'

'விடுறா மாப்ள! அது சரி, last seen நைட் ரெண்டு மணினு தெரிஞ்சுடாதா?'

'அவ அஞ்சு மணிக்கே ஆன்லைன்ல வந்துடுவா! அதனால probably யாருக்கும் தெரிய வாய்ப்பில்ல!'

'பார்ரா! பக்காவா டீடெய்ல் வச்சிருக்க!'

'சரி, இனி எப்போதான் அனுப்ப?'

'இன்னும் ரெண்டு மாசம் ஆகட்டும்! அதுக்குள்ள க்ளோஸா பழகிக்க! ஓகே?'

'ஓகே'

வந்த சுவடின்றி கிளம்பினர்.

ரண்டு மாதத்திற்கு பின்.

அதே மெசேஜை அனுப்பினான்.

single tick.

double tick.

ஒரு மணி நேரம் கழித்து bluetick.

'typing…'

நகம் கடிக்க ஆரம்பித்தான்.

'typing…'

'நகம் அவ்ளோதான்' சொன்னது விரல் நுனி ரத்தம்.

'typing…'

அரைமணி நேரமாவா?

தூங்கிட்டாளா?

நெட் hang ஆகிடுச்சா?

இல்லனா

இவளும் ஏதாவது கவிதை எழுதுறாளா?

இனி அந்தக் கொடுமைய வேற தாங்கணுமோ?

வேர்த்தபோது வந்தது ரிப்ளை.

'இது யார் எழுதுனது?'

படபடவென டைப்பினான்.

'நான்தான்'

'பொய்!இந்த மொக்கை கவிதை உன் ஃப்ரெண்டு எனக்கு எழுதி திட்டு வாங்கினது! இதுலயே பொய் சொல்ற உன்னை……உன்னை…? sorry, bye'

அதுக்கப்புறம் ரிப்ளை பண்ண முடியவில்லை.

blocked.

மிகச்சரியாக அதே நேரம் நண்பனின் மெசேஜ்.

'நண்பர்கள் தின வாழ்த்துக்கள் ப்ரோ'

எரிமலையில் ஏழெட்டு ஆர்டிஎக்ஸ் விழுந்தது போல மனது கொதித்தாலும் 'மாப்ள'யை 'ப்ரோ' ஆக்கிய நண்பனின் சாமர்த்தியம் அவனை ரசித்து சிரிக்க வைத்தது.

'இவன் எப்பவுமே இப்டிதானா?'

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.