(Reading time: 10 - 20 minutes)

இது ஒன்றும் இருளும் இல்லை!! - தாயிக்

Lights

கல் முடிந்தால் இரவின் வாசம். இருளில் வெளிச்சத்தின் ஏக்கம், பகலில் இரவுக்கு ஏக்கம்.

நாள் முடிந்தது. இனி வராது. அந்த நாளில் தொடங்கிய பிரச்சனைகள் முடியாது தொடரும்.வாழ்கை ஓடும்.

சிலருக்கு தூக்கம் வரம்! சிலருக்கு தூக்கம் சாபம்,எனக்கு சாபம்.வயிற்றுக்கு சாப்பாடு வேண்டும் மூளைக்கு தூக்கம் வேண்டும் எப்போதும் என் அம்மா சொல்வது. 

இன்றைய என் நிலைமை இரண்டிற்கும் வழி இல்லை. கூடிய சீக்கிரம் என் நிலைமை மாறும்.பழையப்படி அம்மாவிற்கு காசு அனுப்புவேன், தங்கை கேட்டதெல்லாம் பிலிப்கார்டில் ஆர்டர் செய்வேன்.

ஆண் என்பவன் அழுகிறான்  என்றால் அது அவன் கோபமும் கர்வமும் தரும் பரிசே!! அகங்காரம் தலைக்கு ஏறி பேசிய வார்த்தைகள் ஒரு நாள் என் மொத்த சந்தோஷத்திற்கும் முற்றுபுள்ளி வைத்தது தனி கதை.

சென்னை மாநகரம் என்னை ஒரு மானேஜிங் ஹெட்டாக வரவேற்று கொண்டாட்டங்களை அனுபவிக்க வைத்து அழகு படுத்தி வேலை போனதும் வறுமையை காட்டி சுயபரிதாபத்தில் ஆழ்த்தி  கொள்கிறது.

இருபது பேர் எச்,ஆர் அறை முன் அமர்ந்திருந்தோம். உள்ளுக்குள்ளே அசரிர் கிடைத்துவிடும் வேலை என்று சொல்லிக்கொண்டே இருந்தது.

செல்வகணபதி என்று பெயர் பலகை அறையின் கதவில்.காலை நான் கும்பிட்ட விநாயகரை துணைக்கு அழைத்தேன் "புள்ளையாரப்பா இந்த வேலை எனக்கு கெடைக்கணும் "

பக்கம் இருந்தவர்களை ஆராய்ந்தேன் அவர்களில் பலரும் என்னை போல் சட்டென்று முன்பின் அறிவிப்பின்றி வேலை நீக்கம் செய்யப்பட்டவர்கள் போல் தெரியவில்லை, ஆனால் என்னைப்போல் இந்த மாநகரில் வேலையின் அவசியத்தை அறிந்தவர்களாக  இருந்தனர் என்று சொல்லலாம்.

என் எதிரே ரெட் கலர் சுடிதார் பெண் ஒருத்தி அமர்ந்திருந்தாள்  வெளிபடையாக நடுக்கத்தை காட்டி.

அழகாய் இருந்தாள்.அழகை எடுத்து காட்டி இன்னமும் அழகாய் தெரிந்தாள்.மணமானவள் என்பது கழுத்தில் இரண்டு செயின் காட்டியது. என் கவனமெல்லாம் தன் வசப்படுத்திக் கொண்டிருந்தாள்.

ராகவன் என்று அழைத்ததும் இதயம் ஒரு தலுக் என்று ஆட்டம் கொடுத்து வேகமாக பந்தயத்தில் ஓடும் குதிரை ஆனது. அவள் பார்வை நல்லா பேசிறாத,எனக்கு அந்த வேலை வேணும் என்பது போல் பார்த்தது.

உள்ளே சென்றேன்.

எச்.ஆர் : சிரித்த முகமாய் ஹலோ ராகவன் 

நான் : ஹலோ என்றேன் கை நீட்டி 

எச்.ஆர்(சுட்டுவிடும் தோரணையில் ) :அவுட் ஆப் க்யுரியாசிட்டி நீங்க ஏன் அந்த கம்பெனியில் வேலையை விட்டிங்க ?? அவளோ நல்ல பே!!

எச்.ஆர் கேள்வி என்னை உலுக்கியது."இவன் தெரிஞ்சிட்டே கேக்கிறான் டா ராகவா சமாளி " என்றது மனம்.

நான்(பாவமாக ) : என் கல்யாணம் ஏற்பாடு பிரேக் ஆகிடுச்சு, அந்த டிப்ரசனில் வேலையை  விட்டுட்டேன். 

எச்.ஆர் (சந்தேகமாக ): அதுல இருந்து வெளியே வந்துட்டீங்களா? உங்களால் இனி வேலை செய்ய முடியுமா ?? உங்க டெக்னிகள் மற்றும் அனலிடிகல் ஸ்கில் நல்லா இருக்கு.

நான்(தன்நம்பிக்கையுடன் ) : கண்டீப்பாக சார்,என்னால் முடியும்.இட் வாஸ் ஜஸ்ட் எ ஸ்லிப். ஐஅம் ஓகே.

எச்.ஆர் : சாலரி எவளோ எதிர்பார்க்கறீங்க  

நான் (உள்ளுக்குள் உற்சாகமாக) : என்னோடைய லாஸ்ட் பே விட டென் டு பிப்டீன் பெர்சென்ட் ஹைக் எதிர்பார்கிறேன் 

எச் ஆர் தலை மேலும் கீழும் ஆட்டி யோசித்தார். சிறிது நேரம் கழித்து "வெய்ட் பண்ணுங்க,கூப்பிடுறோம் " என்றார்.

எப்போதும் போல் மந்தகாசம் தொற்றியது மனதில். எனக்கு அடுத்து அந்த சிகப்பு சுடிதார் பெண் எச்.ஆர் அறைக்குள் சென்றாள்.

அவள் நடந்து சென்று அறையுள் நுழையும் வரை என்னால் வேறு எங்குமே பார்க்க முடியவில்லை.அழகு, கவர்ச்சி,வசீகரம் அப்படிப்பட்ட தமிழில் எல்லா வார்த்தைக்கும்  அர்த்தமாக தெரிந்தாள். 

காத்திருப்பது உலகிலே கொடுமையான இன்னொரு சிட்சை. என் வாலோடு நாக்கையும் கை கால்களையும் வெட்டி குருமா வெக்குது வாழ்க்கை. 

அவள் பேர் தெரிந்து கொள்ளும் ஆவல் தொற்றியது எனக்கான முடிவு ஆராயும் என் மனதிற்கு. ஆணுக்கு மிக முக்கியமான தேவை பெண் மட்டுமே.அவளின் கவனம் மட்டுமே. 

அரை மணி நேரம் கழித்து வெளியே வந்தவள் முகம் கருத்திருந்தது. என் மனம் அவள் வெற்றிக்கு ஏங்கியது.கற்பனை குதிரையில் இருவரும் சேர்ந்து வேலை செய்வது போல் ஓடிகொண்டிருந்தேன்.

அடுத்து இரண்டு மணிநேரத்தில் அத்தனை பேருக்கும் இண்டர்வியு முடிந்து நான்கு பேர் எஞ்சியிருந்தோம்.

என்னையும் அந்த பெண்ணையும் அழைத்தனர்.எச்.ஆர் செல்வகணபதி மற்ற இருவருடன் அமர்ந்திருந்தார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.