(Reading time: 10 - 19 minutes)

நல்லவனுக்கு நல்லவன் - தாயிக்

nallavan

கிளாசிக் மெந்தால் சிகரெட் கையை சுடும் வரை கருகி இருந்தது. கடைசி பஃபில் கசப்பு தொண்டை வரை படர்ந்ததால் அதை தனது ஹய் ஹீல்ஸால் கொன்று விட்டு, 570 குளிர்சாதன பேருந்து வரும் வழி நோக்கி காத்திருந்தாள் ஷ்ருதி.

 பட்டாம்பூச்சி ஐ.டி. வளாகத்துக்கும் தனது எம்.ம்.டி.ஏ வீட்டிற்கும் என்றுமே இடையில் இறங்கும் வழக்கம் கிடையாது தான், ஆனால் இன்று, கல்லூரியில் அவளுடன் படித்த வசந்த் அவளை  சந்திக்க  ஃபிலைட் பிடித்து வந்து, கிண்டியில் காத்திருக்கிறான் .

வாட்ஸப்பில் "ஐ அம் கமிங் டு ஹோம் லேட்" என்று ரூம்மேட் வினிதாவிற்கு அனுப்பும் வேளையில் ஒய்யாரமாக வந்து நின்றது 570.

ஏறி "மே ஐ சிட் ஹியர்?" என்று காதில் இயர்போன் மாட்டிய அவனிடம் கேட்டு உட்கார்ந்து கொண்டாள். அவனை பக்கமாக எங்கேயோ பார்த்த ஞாபகம். தனது அலுவலக கட்டிடத்தில் சுமார் 1800 ஆண்கள் வேலை செய்வார்கள், அதில் பார்த்த ஞாபகம் இல்லை. வேறு எங்கேயோ?, குழப்பிகொண்டு இருந்த வேளையில், "இட்ஸ் எ சமால் வேர்ல்ட், இஸண்ட் இட்? ஸ்ருதி?ரைட்?" என்று அவளிடம் தன் கைபேசியை திரையைக் காட்டிய படி கேட்டான், மர்ம புன்னகையுடன். இப்பொது பொறி தட்டியது அவளுக்கு, ஓர் இரு வாரம் இருக்கும், "டிண்டரில் " அறிமுகமாகி இருந்தான்.

ஸ்மார்ட் போன் வாங்கியதிலிருந்து டேட்டிங் ஆப்ஸில் விளையாட்டாக நேரம் கழிப்பதுண்டு ஸ்ருதி . வித்யா கூட அதில்தான் அருணை  மீட் பண்ணாலாம் , அவள் சொல்லித்தான் டிண்டர் அறிமுகம். அதன் காரணமாக இப்படி ஒரு நிலமை வரும் என எள் அளவும் எதிர் பார்த்ததில்லை. வசமாக சிகிக்கொண்டதாக எண்ணினாள்.

"ஐ கேன் வெயிட், பட் தேங்க்ஸ், அக்ஸ்ப்ட் பண்ணத்துக்கு, யு நோ, யு ஆர் மை பெஸ்ட் மேட்ச்" என்று வழிந்தான்.

"இங்க தான் வேலை செய்யரியா?" என்று நிறுத்தாமல் பேசியவனை, "ஏன் நீ உன் கம்பெனில வேற வேலை போட்டு தர போறியா?" என்று வெட்டி விட முயன்றாள்.

 "செஞ்சாலும் செய்வேன் சொல்ல முடியாது, நான் கம்பெனி நடத்தறேன்னு , ஓ, பிரோபைல் பாத்தியோ, ஸ்மார்ட்" என்று சொல்லி முடிக்கும்முன், பேருந்து எப்பொழுதும் நிற்கும் துரைப்பக்கம் டோல் கேட்டிற்க்கு சிறிது முன்பே நின்றது. அவன் பின்னல் இருந்தவன் இவன் தோளை தட்டி ஒரு சிக்னல் கொடுத்தான்.

இரண்டு போலீஸ் கையில் லட்டியுடன்  பஸ்சில் ஏறினார்கள். மித்ரனின் புன்னகை மாறியது. புருவம் சுருக்கி, மெல்லாமாக அவள் பையை பிடித்து இழுத்தான். "என்ன ஆனாலும் இப்போ என்னை தெரியாத மாறி காட்டிக்க, அண்ட் யு ஆர் ரீ்யலி பியுட்டிபுள் " என்றான்  தன்வசமிழந்த குரலில்.

பொதுவாக யாராவது இரண்டாம் வாக்கியம் மட்டும் சொல்லி இருந்தால் கேட்க ஆசையாகத் தான் இருந்திருக்கும். இவன் சொன்ன முதல் வாக்கியத்தில் இருந்து இன்னும் மனம் மாறவில்லை. ஏன், என்ன பிரச்சனை என்று கேட்க வேண்டும் போல் இருந்தது ஸ்ருதிக்கு.

 ஒரு பெரிய உருவம் அவனை இழுத்துச் செல்வது மட்டும் கண்ணுக்குத் தெரிந்தது. இரண்டாவது போலீஸ் "உங்களுக்கெல்லா வேற வேலையே கிடையாதா டா, " என்று பாதியில் நிறுத்தி, "சரி , நீ மட்டும் தானா இல்ல அந்த பொண்ணும்  உன் கூட்டாளியா ??" என்று சிரித்து கொண்டு அவனை பேருத்தில் இருந்து இறக்கி சென்றனர்.

ஸ்ருதி திகைப்பில் இருந்து மீளவில்லை. இப்படி ஒரு விடியலா? ஏன் இப்படி விடிய வேண்டும், உண்மையில் யார் இவன்?  நடத்துனர் ஓட்டுனரிடம் பேசிக் கொண்டது மெல்ல கேட்டது, "ஏதோ அரசியல் சமாச்சாரம்பா, கூட இருந்தவனே இவன காட்டி கொடுத்துட்டான்னு அந்த பீசி சொன்னான் ".

"இதுக்கு தான் பெரிய இடத்துல வம்பு வெச்சிக்க கூடாதுங்கறது, லாவகமா மாட்டிக்கிட்டான்" என்று எல்லாம் தெரிந்தது போல்  பேசிக்கொண்டு இருந்தவர்களின் வார்த்தைகள் செவிக்கு மட்டுமே எட்டியது. மூளை ஏனோ நம்ப மறுத்தது.

பின்னாடி இருந்து தகவல் கொடுத்த ஆசாமியை கேட்கலாமா? வேண்டாமா? தேவை இல்லாமல்  ஏன் ஊர் வம்பில்  மாட்டுவாணேன் , மாலைக்குள்  செய்தியில் வர தான் போகிறது என்று எண்ணிக்கொண்டு அமைதி ஆனாள் உள்ளுக்குள் ஆர்வம் அரித்தாலும்.

பின் சீட்டில் அமர்ந்தவன் வேளச்சேரியில் இறங்கும் முன், அவள் கண்ணில் படும் படி ஒரு துண்டு சீட்டை மித்ரன் உட்கார்ந்திருந்த சீட்டில் வைத்து விட்டு போனான். இறங்கிக் கொண்டவன் அங்கேயே நின்று கொண்டு அவளைப் பார்த்த வண்ணம் சிரித்தான். ஆர்வ மிகுதியில் அதை எடுக்க விரைந்த கைகள் கிர்ர் என்று வைப்ரேட் ஆன தொல்லைபேசி  காரணமாக பாதியில் திரும்பியது.

 வசந்த். "எங்க இருக்க??? , எவ்ளோ நேரம், கிண்டி பஸ் ஸ்டாண்ட்க்கு காவல் காத்திட்டு இருக்கேன் . இன்னிக்கி வந்துருவியா?" என்று கேட்டான்.

"பைவ் மினிட்ஸ்" என்று பேசிக்கொண்டு அந்த துண்டு சீட்டை எடுத்து பிரித்துக் பார்த்தாள். அதில் ஏதோ எழுதி இருந்தது, ஹிந்தியாக இருக்கலாம், வேற மொழியாகவும் இருக்கலாம்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.