(Reading time: 10 - 19 minutes)

ல மொழிக்கு ஸ்கிரிப்ட் ஒரு சாயலாக இருக்கும். ஒரு ஹிந்தி காரனுக்கு தமிழ், தெலுகு, கன்னட எழுத்தில் வித்யாசம் தெரியுமா என்ன? முதல் முறையாக  அவள் அப்பா அவளை ஹிந்தி டியூஷன் போக சொன்னதை செய்திருக்கலாம் என்று எண்ணிக் கொண்டாள்.

அவள் வரும் பேருந்தை எதிர்பார்த்து நின்றிருந்தான் வசந்த். அவனை பார்த்து நான்கு ஆண்டுகள் இருக்கும். கல்லூரியில் எப்போதும் ஒன்றாகத்தான் இருப்பார்கள். படிப்பு முடித்த கையுடன் கனடா கிளம்பியவன்.

பஸ் கிண்டியில் அடைந்தது. வசந்த் அவளை பார்த்துவிட்டான்

"ஹாய், லாங் டைம், ஐ அம் சோ எஸ்சைடாட் டு சி யு" என்றான். இருவரும் கேப் பிடித்து பின் சீட்டில் அமர்ந்தார்கள்.

"ஐ எம் கெட்டிங் எங்கேஜ்ட் நெஸ்ட் வீக்" என உற்சாகமாய் பேச துவங்கினாள்.

கேப் ஏர்போர்ட் நோக்கி செல்ல துவங்கியது, அவன் கோவைக்கு  பிலைட் பிடிக்க வேண்டும்.

"இதை  சொல்லத் தான் ஐந்தே நிமிடங்கள் ஆனாலும் சரி, என்னை பார்த்துவிட்டு வீட்டுக்கு போ என்று  சொன்னாயோ ?" என்றான் ஏமாற்றத்தை காட்டாமல் காட்டி

தொடர்ந்து "காங்ராட்ஸ்! சோ யு ஆர் கோயின் டு கெட் செட்டில்ட், என்ன பன்றார் உன் அவர், பேச ஆரமிச்சிட்டியா?, பேசினா உன்னை பிடிக்காமல் போகாதே " என்று பேசிக்கொண்டே சகல கலா ஸ்ட்ரெஸ் நிவாரணி சிகரெட்டை பற்ற வைத்தான்.

"எப்பாவும் அவரே தான் போன்  பண்ணி பேசுவார், டெக்ஸ்ட் பண்ணறதுக்கு எல்லாம் சோம்பேறி தனம்மாம்" என்றாள் தகவலாய் அவன் டன்ஹில் சிகரெட்டின் வாசனையை உள்வாங்கிய படி..

"டெக்ஸ்ட் பண்ண மட்டும் தான் சோம்பேறி தனமா? உறுதியா கேட்டுக்கோ" என்று அவன் முடிக்கும்முன் இருவரும் சிரித்துக் கொண்டனர்.

தூரத்தில் ஒரு ஆம்புலன்ஸ் விரைந்து செல்வதை பார்த்த அவள், கண்மூடி இஷ்ட  தெய்வத்தை வேண்டிக்கொண்டாள்.கண் மூடியதும் ஆம்புலன்ஸ் சைறன் அவளுக்கு மித்திரனை பிடித்து சென்ற போலீசை நியாபகபடுத்தியது.

வசந்திடம் "ஹே, உனக்கு  ஹிந்தி தெரியும்  தானே ? ரீட் திஸ் டு மீ" என்று அவளது பையில் இருந்த சீட்டை எடுத்து நீட்டினாள்.

வசந்த் அதை பிரித்து பார்த்தான், ஹிந்தி தான், ஆனால் கையெழுத்து மிகவும் மோசம். "உன் பையில் உள்ள. .  மெமரி கார்டில் உள்ள . . . வீடியோ வை யூட்டுப்பில் அப்லோட் செய், அன்ட் தென் கிவ் இட் டு டிவீ... இதை நீ படிக்கும் வேளையில் என்னையும் பிடித்து இருப்பார்கள், நாங்கள் செய்ததும் ஒர் புரட்சி, நீ நல்லா இருப்ப, உன்னை போல பலரும்" என்றதன் அர்த்தம் விளங்கும் முன் "வாட் ஷிட் ஆர் யு இன்? என்ன வீடியோ?" என்றான், கையில் இருந்த சிகரெட் நழுவியது.

"ஐயோ நான் ஏற்கனவே பயந்து போயிருக்கேன், டோண்ட் ரைஸ் யுவர் வாய்ஸ்" பதறினாள் அவள்.

  கலங்கி இருந்த பைக்குள் இருந்து அந்த மெமரி கார்டு எடுத்தாள். "இதெப்படி என்கிட்ட?" நடுங்கினாள்.

"குடு அத இங்க" என்று வாங்கி தன் போனில் போட்டு கடைசியாக எடுத்த விடியோவை தேடினான் வசந்த் . வீடியோவில், மெட்ரோ ரயில் கட்டுமான வேலை மும்முரமாக நடைபெற்று கொண்டு இருந்தது. அதன் இடுக்குகளில் கேமரா ஜூம் ஆகிக்கொண்டே போனது அதில் ஒரு ஆண்  கத்தியால் இன்னொருவனை குத்தி குத்தி கொலை செய்துக்கொண்டிருந்தான்.

எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த ஸ்ருதி கத்தி அழ ஆரம்பித்து இருந்தாள். "டிரைவர் ஸ்டாப் தி கார், ட்ரிப் முடிச்சுக்கங்க, ஆன்லைன்ல பணம் உங்களுக்கு வந்துருக்கும்" என்றான் பதறியபடி வசந்த் நடுங்கிய குரலில்.

 டிரைவர் நிறுத்தவில்லை.

"கோல்ட் ப்லெடட் மர்டர்!!,டோண்ட் கெட் இன்வால்வுட் இன் திஸ்" என்றான். கேபிள் டிரைவர் இருந்ததை மறந்து.

கொலை வீடியோ பார்த்ததில் அவனும் பயந்திருந்தான். துணைக்கு ரெமி மார்டின் இருந்தால் தேவலை என்பது போல இருந்தது.

குழப்பத்தில் இருந்த ஸ்ருதி "இன்வால்வு ஆகம எப்படி வசந்த் . . ." ஒரு முறை தேம்பி, "கொள்வது அருண், எனக்கு பார்த்த மாப்பிளை".

அவள் அப்படி சொன்னதும் டாஸ்மாக் மொத்தமும் குடித்து முடித்த அளவிற்கு தலைசுற்றியது. உலகில் இப்படியும் நடக்குமா என்ன? என்பது போல் இருந்தது.

அவள் அழுகை அதிகமானது. அதிர்ச்சியும் பயமும் அவள் அழுகையை விட பலமடங்கு பெருகிக் கொண்டே போனது.

சந்தேகப் பட்ட டிரைவர், தனது கம்பெனி ட்ரைனிங்கில் சொல்லிக் கொடுத்தது போல, தன் போனில் 'SOS' எமெர்ஜென்சி பட்டனை அழுத்தி இருந்தான். அது மிக அருகில் இருந்த காவல் நிலையத்துக்கு அவனை வழி காட்டிக் கொண்டு இருந்தது.

"ஷிட், டிரைவர் கார நிறுத்து யா" என்று அவளது அழுகைக்கு மேல் அவன் கத்தினான். கார் ஒரு பல்லத்தின் உல் சென்று வெளி வர, எல்லோரும் மேலாக தூக்கி எறியப் பட்டனர். குழப்பம் ஸ்வாசிக்கும் காற்றில் கூட கலந்து இருந்தது போல் உணர்ந்தாள் ஸ்ருதி.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.