“ஏய் லூசு எல்லாத்தையும் சீரியஸாதான் எடுப்பியா…?” அக்கா தலையில் கை வைத்து சின்னதாய் ஒரு ஆட்டு அத்தான் வேலை.
“உனக்கு அவங்க பிள்ளைங்கன்னா எனக்கு இல்லையா….அவங்க நேரத்துக்கு தூங்கனும்னு எனக்கும் இருக்கும்ல…” என்ற வார்த்தையில் அக்காவை முழு சமாதானத்துக்கு கூட்டிப் போய்விட்டு
இப்போது சீரியஃஸாகவே ரிதாவை பார்த்துக் கேட்டான் ஆதவ்
“ஏன் ரிதா நான் உன் அக்காவ நல்லா ட்ரீட் பண்ணலைனு நினைக்கியோ…?”
இந்த கேள்வியை இவள் எதிர் பார்த்திருக்கவில்லை… சற்று அதிர்ந்து போய் பார்த்தாள்….
“இல்ல கல்யாண பேச்சை எடுத்தாலே காயுறியே அதான் கேட்டேன்… அக்கா மாட்டின மாதிரி நாமளும் மாட்டிப்பமோன்னு நினச்சுட்டியோ….?”
அவளது அத்தானை மாதிரி அக்காவைப் பார்த்துக்கொள்ள ஆண்டவனால் தான் முடியுமாய் இருக்கலாம்… தன் குடும்பத்தை அச்சாக கொண்டு சுழலும் குணம் அத்தானுடையது…
என்னவென சொல்வதென்று தெரியாமல் ரிதா திருக்க திருக்க முழித்துக் கொண்டிருக்கும்போது
“ஹாய்டா ஹாய் அண்ணி “ என்றபடி தரிசனம் கொடுத்தது சாத்சாத் அந்த பிஸ்டல் ப்ராந்து ரூபனேதான்…
இங்கயுமா….? என இவள் முறைக்க…. அவனும் ஒரு அம்சமாய் இவளை லுக்விட்டான்… இவர்கள் டேபிளில் காலியாய் இருந்த அடுத்த சேரில் வந்து அமர்ந்தான்.
“என்னடா தனியா வந்திறுக்க ரஞ்சி எங்க….?” ஆதவ் கேட்டான்.
“மாப்ள அவளுக்கு மன்டே ட்யூஸ்டே எக்ஸாம் இருக்குடா….நேத்து கூட ஒன்னு…. சின்ன கழுத எங்கயும் வரமாட்டேன்டு…. உனக்குதான் அவளப் பத்தி தெரியுமே ….நேத்து மதியம் மட்டும் அவ ஃப்ரெண்ட்ஸுக்கும் சேர்த்து லன்ச் அரேஞ்ச் செய்தால ஹோட்டல்க்கு வந்தா…. மிட்நைட் விஷ் சர்ப்ரைஸா அவ ஹாஸ்டல்ல போய் செய்துட்டு வந்தேன்….பெர்மிஷன் வாங்குறதுக்குள்ள பெரிய பாடா போச்சு…. அவ என் தங்ச்சிங்கதுக்கு ஏகப்பட்ட எவிடென்ஸ் காமிச்சு உள்ள போனேன்… புது ஹாஸ்டல்ல அவங்களுக்கு என்னை தெரியலை….ஆனா அவ்ளவு எஃபெர்ட் எடுத்து செய்துறுக்கேன்…கழுத ஒரு தேங்க்ஸ் சொன்னதோட சரி…. நைட் போனை வச்சுட்டு….படிக்கிற டைம் வேஸ்ட்டாகுதாம்…காலைல சர்ச்சுக்கு கூப்டேன் அங்க கூட வரலை… நைட் அவ ஹாஸ்டல் பக்கம் இருக்ற ஹோம்ல தான் டின்னர் அரேஞ்ச் செய்திறுந்தேன் அதுக்கும் வரலை….” புலம்பலாய் பொறிந்தான் அவன்.
‘அடப் பாவி அந்த அடுத்த ரூம் நியூகம்மர் உன் தங்கச்சியா…சொல்லவே இல்லையே’ ரிதா பல்ப்பை பதமாய் பக்குவமாய் பார்த்து வாங்கினாள். ‘செஞ்சது எல்லாம் உன் தங்கச்சிக்காக தானா…’ இவள் ஏகமாய் இஞ்சி சாப்ட பாவனையில் முழிக்க
“ரியா இது ப்ரியன்” இப்போது அறிமுக படலம். ஆக தன் முகத்தை கெத்தாக வைத்துக் கொண்டவள் இந்த ப்ரியனில் முறைத்தாள். இவட்ட ரூபன்னு தானே சொன்னான்.
“சொன்னேன்ல…என் க்ளோஸ் ஃப்ரெண்ட்… சின்னதுல இருந்தே எங்க வீட்டுக்கு பக்கத்து வீடு….இப்ப யூஎஸ்ல இருக்கான்னு…. நேத்து தான் வந்தான்….. “ ஆதவ் தொடர
ரூபனோ இவள் பார்வை அறிந்து இடையிட்டான்…. “க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸுக்கு மட்டும் நான் ப்ரியன்….மத்தவங்களுக்கு ரூபன்…” என விளக்கம் சொன்னான். “என் நேம் ப்ரியரூபன்.”
இப்போதும் இவள் முறைத்தாள்…
அத்தனையும் பார்த்துக் கொண்டிருந்த ஆதவ்க்கு ஏதோ புரிந்தும் புரியாமலுமாய்….
“எங்கயும் அஃபீஷியலா மீட் பண்ணிகிட்டீங்களாடா…? எங்க வெட்டிங் அப்ப கூட நீ அவட்ட பேசுனது இல்லைனு சொன்னியே…”
என்று ஆரம்பித்த ஆதவ்… என்ன நினைத்தானோ
“ரிதா ப்ரியனை நீ மீட் பண்ணனும்னுதான் இன்னைக்கு இங்க டின்னர்….” என ஆரம்பிக்க
அதன் மொத்த அர்த்தமும் அந்த நொடியே இவளுக்குப் புரிய….
இப்பொழுது மொத்தமாய் அந்த ப்ரிய ரூபனைப் பார்த்து முறைத்தாள் இவள்.
இவளையே பார்த்திருந்த ப்ரியன் “இது எதுக்கு?” என்ற பாவத்தில் பார்க்க….
“பின்னே க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ் ப்ரியன்னு கூப்டுவாங்க….மத்தவங்க ரூபன்….நான் என்னனு கூப்டவாம்…? வைஃப் கூப்டன்னு ஒரு நேமை சேஃபா சேவ் பண்ணி வச்சிறுக்கனும்ல நீங்க…”
என ஒன் ஷாட்டில் அத்தனை பேரையும் ஆ சொல்ல வைத்துவிட்டு பொண்ணு அப்ஸ்காண்ட்…
அதுக்கப்புறம் அவன் முகத்தைப் பார்க்க வெட்க வெட்கமாய் இருக்கே…எழுந்து வந்துவிட்டாள் ரியா.
அன்று இரவு ப்ரியனும் ரிதாவும் தேவையான அளவு அராசிஸ் வறுத்து அவிச்ச பிறகு…. “என்ன ரிது இப்டி ஒன் ஷாட்ல ஒத்துகிட்ட….நீ பயங்கரமா இழுத்தடிப்பன்னு ஆதவ் சொன்னான்….” ப்ரியன் கேட்க…
“அது…. உங்க தங்கசிக்காக இவ்ளவு பார்க்கிறவங்க….. நாளைக்கு என் அக்காகாக நீங்க பார்ப்பீங்களோ இல்லையோ…. ஆனா நான் எதுவும் பார்த்தா அதைப் புரிஞ்சுப்பீங்கன்னு தோணிச்சு….அதான்….எனக்கு ஃபேமிலி முக்கியம்….நீங்களும் என்னை மாதிரியேன்னு தோணிச்சா….”
அடுத்த வருடம்
அதே ஜூன் 26 நைட் 12 மணி…
“ஹேப்பி பெர்த் டே ரிது….” தன் கை அணைப்பில் சுருண்டிருந்த மனைவியின் காதில் முனங்கினான் ப்ரியன்….
{kunena_discuss:785}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.