(Reading time: 2 - 3 minutes)

காதல் கடிதம் - கிருஷ்ண பாபு

Love Letter

'க்ஸ்கியூஸ்மீ! இந்த லெட்டரை உங்க ஃப்ரெண்ட் கிட்ட கொடுக்க முடியுமா?'

'இடியட்!என்னை பார்க்க மாமி மாதிரி தெரியுதா?'

'ஐயையோ! நீங்க செம ஜோவியல்னு சொன்னாங்க!இப்டி திட்றீங்க?'

'சரி சரிஆனா எந்தக் காலத்துல இருக்குறபா நீ? இன்னும் லெட்டரு புறா தூதுன்னுகிட்டு? செல்போன் இல்ல?'

'அவளுக்கு செல்போனே பிடிக்காதுன்றது தெரிஞ்சதும் என் செல்போனை குழி தோண்டி புதைச்சுட்டேன்!'

'அடப்பாவி!காதலிக்கு கல்லறைதான் கட்டுவாங்க.நீ 'செல்'லறையே கட்டிட்டியா?சரி,சரி பீட்ஸா சாப்பிடுறியா?'

'சாரிங்க! ஜங்க் புட் அவளுக்கு பிடிக்காததால நானும் சாப்பிடுறதில்ல!'

'அட அட! சரி டீ காபி கூல்டிரிங்ஸ்?'
'எதுவுமே அவளுக்குப் பிடிக்காதுங்க!'

'அட பின்றியேப்பா! என் அடிமையவிட நீ ரொம்பவே பணிவா இருக்குறியே! உனக்காக இதப் பண்றேன்!'
'தேங்க்ஸ்ங்க!'

'ஆமா,கேட்க மறந்துட்டேன். என் ஃப்ரெண்டுனு சொன்ன.ஆனா பேரை சொல்லவே இல்ல.யாருப்பா அந்த லக்கிகேர்ள்?'

'அவ பேரை சொல்லவே எனக்கு கூச்சமா இருக்குங்க!போட்டோ தர்ரேன் பாருங்க!'

'அடப்பாவி,இவ போன வாரம் ஆக்சிடென்ட்ல செத்த ப்ரியால்ல?'

'ஆமாங்க! அவ போன வாரம்!துக்கம் தாங்காம நான் இந்த வாரம்! நீங்க இன்னிக்கு! ப்ளீஸ்!செத்ததும் என் சின்சியர் லவ்வை அவகிட்ட சொல்லுங்க ப்ளீஸ்!'

வாயில் ரத்தம் வடிய ஆரம்பித்தது அவளுக்கு!

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.