(Reading time: 1 - 2 minutes)

நிலவே கரம் நீட்டு - கிருஷ்ண பாபு

Moon

த்தனை இளவரசர்களும் மிடுக்காக அமர்ந்திருந்தனர்.

மாலையுடன் தோன்றினாள் இளவரசி.

'இவர் மகத நாட்டு இளவரசர்'

'இவர் பவள நாட்டு இளவரசர்'

'இவர் மேகநாட்டு இளவரசர்'

அறிமுகங்கள் தொடர்ந்தன.

ஒவ்வொருவர் கண்களையும் உற்றுப்பார்த்து நடையை தொடர்ந்தாள்.

இறுதியாக ஒருவர்தான் மீதம்.

'இவர்தான் வல்லநாட்டு இளவரசர்'

பார்த்தாள்.

தினமும் கனவில் வந்த அதே கண்கள்.

பரவசமாக மாலையிட கைகளை உயர்த்தியவளிடம் தயங்கி கேட்டான் இளவரசன்.

'ஒரு நிமிடம் உங்கள் கைகளை நீட்டுங்கள் இளவரசி!'

புரியாமல் நீட்டினாள்.

பார்த்ததும் பயந்தோடி புரவியில் பறந்தான்.

தினமும் கனவில் வ(அறை)ந்த அதே கைகள்.

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.