(Reading time: 2 - 4 minutes)

இதுவரை உன்னுடன் வாழ்ந்த என் வாழ்கை மறுமுறை வாழ்ந்திட வழி இல்லயா - கிருஷ்ண பாபு

Question

'ன்னைப் பிரிவதுன்னு முடிவே பண்ணீட்டீங்களா?'

'ஆமா! என்னால் இனிமேலும் உன் டார்ச்சரை பொறுத்துக்க முடியும்னு தோணல!'

கோபத்தில் பல்லைக் கடித்தபடி பதிலளித்தான்.

'அப்டி உங்களுக்கு என்னதான் குறை வச்சேன்? கூச்சப்படாம சொல்லுங்க!'

'எனக்கென்ன கூச்சம்? உனக்குதான் அது!யார் உள்ளே வந்தாலும் ஒளிஞ்சுக்கிட்டு அநியாயத்துக்கு கூச்சப்படுற!'

'என்ன செய்ய? என் சுபாவம் அது!'

'hmm… நான் செஞ்ச பாவம் அது! அது போகட்டும்,எனக்குப் பிடிச்ச எதையாவது சாப்பிட விடுறியா நீ?'

'கண்டதைச் சாப்பிட்டு உடம்பைக் கெடுத்துக்க கூடாதுல்ல?'

'சமாளிக்காதே! அதுவுமில்லாம முன்ன மாதிரி உன்னாலே வேலை பார்க்க முடியல!'

'ஆமா,வயசாயிடுச்சு இல்லையா?'

'வயசு? பொல்லாத வயசு! இந்த வயசுலயும் என்னா ஆட்டம் போடுற நீ?'

'சரி,நீங்க மட்டும் ஒழுக்கமா? ஊர்வம்பு பூராம் இழுத்துட்டு வர்றீங்க! சொல்லி வச்சாப்ல அத்தனை பேருக்கும் என் மேலே ஒரு கண்ணு! என்னை தூக்கிடுவோம்னு இதுவரை எத்தனை பேர் உங்ககிட்டயே நேர்ல சொல்லிருக்காங்க?! மானங்கெட்டுப் போய் சும்மாதானே நின்னீங்க?'

'அது உன் சேப்டிக்காகத்தானே டியர்!'

'இப்ப, நீங்க சமாளிக்காதீங்க! சரி…, நான் இனி சமாதானம் பேசல!ஆனா உங்களைப் பிரிந்து நிச்சயமா என்னாலே வாழ முடியாது..நம்ம வீட்டுக்கு பக்கத்துலயே என்னை புதைச்சிடுங்க!'

மௌனமாய் நின்றான்.

'நீங்க என்னை விட்டுட்டு இருந்திடுவீங்களா? என் இடத்துல யாரையாவது நினைச்சுப் பார்க்க உங்களால் முடியுமா?'

அந்தக் கேள்வி அவனை அசைத்தது.

கண்ணீருடன் சொன்னான்.

'நிஜம்தான்,உன்னைப் பிரிய எனக்கும் மனசே இல்ல! ஆனா எனக்காக உன்னை கொஞ்சம் திருத்திக்க ஒத்துக்கிறியா?'

'நானென்ன முடியாதுன்னா சொல்றேன்? நீங்க வேற நா வேற இல்ல...எதுவானாலும் சொல்லுங்க! செய்யுறேன்.'

'ஒண்ணுமில்லை, கொஞ்சம் வலிக்கும். அதை மட்டும் பொறுத்துக்கோ! போதும்!'

'சரி'

றுநாள் டாக்டரிடம் சென்றான்.

'டாக்டர்,நேற்று முழுக்க யோசிச்சேன். என் கடைவாய்ப் பல்லை பிடுங்க வேண்டாம்! அதோட கூச்சத்தை போக்கி, ஆட்டத்தை நிறுத்தி cavityஐ பூசினா போதும்!'

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.