(Reading time: 3 - 5 minutes)

ஒரு நாள் ஒரு கனவு - கிருஷ்ண பாபு

Kanavu

 'புதுசா ஒரு device ரெடி பண்ணிருக்கேன்... டெஸ்ட் பண்ணி நீ ஓகே சொன்னா patent வாங்கணும் மாப்பு!'

'இந்த ஜீனியஸோட உதவி தேவைப்படுற அளவு அப்டி என்னடா special அதுல?'

'நமக்குப் பிடிச்ச கனவு வந்தா காலைல சந்தோஷமா ஃபீல் பண்றோம். ஆனா கெட்ட கனவு வந்தா மூடே மாறிடுது இல்லையா?!'

'மொக்கை போடாம மேட்டருக்கு வா மச்சான்!'

'சிம்பிள்.. நம்ம மூடுக்கேத்த கனவுகளை அமைக்க முடிஞ்சா எப்டி இருக்கும்?அதைதான் ட்ரை பண்ணிருக்கேன்!'

'இதுக்கு device எதுக்கு? குவார்ட்டர் போதுமே! ஹன்சிகா கூடவே டூயட் பாடுவேன் மச்சி! டார்லிங்கு டம்பக்கு டார்லி……'

வாயைப் பொத்தினான்.

'அங்கேதான் ஒரு புதுமை வச்சிருக்கேன். கனவை எல்லாம் 3D effectல உணரலாம்!'

'அட!சூப்பர்!எப்படிடா?'

'மூளையின் நியூரான்ஸை IR மூலம் கட்டுப்படுத்தி magic பண்ற technology இது!'

'சரி,என்னை ஏன் செலக்ட் பண்ணின? எனக்கு மூளை அதிகம்கிறதாலா மச்சான்?'

'துருப்பிடிச்ச மூளைலயும் இது வேலை செய்யுமானு ஒரு டவுட்! so u r selected!'

'சரி சரி திட்டாதே! இதுல love,action,adventure, sentiment, puzzle,fantasy, fiction,comedy,horror னு நிறைய catagory இருக்கு! தினம் ஒண்ணை choose பண்ணி அனுபவத்தை சொல்லு! குறை இருந்தா rectify பண்ணிடுறேன்!

'ம்ம்ம்… action முதல்ல  

'Ok. I set that. Good night maaps!'

சார்,கொஞ்சம் நெருப்பு தர்றீங்களா?'

சத்தம் கேட்டு விழித்தேன்.

பள்ளிச் சிறுவன்.

பூத்த சாம்பலை தட்டிவிட்டு பூவாய் நீட்டினேன் என் சிகரெட்டை.

ஸ்கூல் அருகிலுள்ள பெட்டிக்கடையின் பின்புற புகையும் புகை சார்ந்த இடமும் அது.

'இந்த வயசுலயே 'தம்'மா?'

எரிச்சலாய் கேட்டேன்.

'மனசே சரியில்ல சார்.'

ஏக் தம்மில் மூன்று வளையம் விட்டபடி சொன்னான்.

'ஏன்?உனக்கென்ன கேடு?'

'நான் டென்த் படிக்கிறேன். identification mark சொல்ல என் உடம்புல ஒரு மச்சமோ தழும்போ இல்ல..ரொம்ப வருத்தமா இருக்கு!'

என் நெற்றித் தழும்பை உற்றுப் பார்த்தபடி தொடர்ந்தான்.

'இதைப் போல தழும்பு எனக்கும் இருந்தா நல்லாருக்கும்!'

'இது உனக்கு வேணுமா?'

'விளையாடுறீங்களா? அதென்ன ஸ்டிக்கரா சார் கிழிச்சு ஒட்ட?'

அவன் பேசி முடிக்குமுன் சப்பென அறைந்தேன்.

இருவர் சிகரெட்டும் பறந்தன.

'முளைச்சு மூணு இலை விடல, அதுக்குள்ள சிகரெட்! அதுக்கொரு காரணம் வேற!' நறநறத்தேன்.

நண்பர்கள் முன்னால் அடிபட்டது அவனுக்கு அவமானமாக இருந்திருக்கலாம்.

பாய்ந்து சண்டைக்கு வந்தான்.

என் வயிற்றில் ஓங்கி ஒரு குத்து! செம பஞ்ச்…

சரியான முரடனாக இருப்பான் போல.

தலைமுடியை கொத்தாய் பிடித்து கீழே தள்ளினேன். சோடா கிரேடுகளின் மேல் மோதினான்.

நெற்றியின் இரு பக்கங்களிலும் ஆழமான காயம். ரத்தம் சொட்டியது.

'ஒரு தழும்புக்கு ஆசைப்பட்டல்ல… ரெண்டு கொடுத்துட்டேன்.… வச்சுக்க…'

அழத்தொடங்கினான்.

கூட்டம் கூடத் தொடங்கியதும் பட்டென விலகி நடக்கத் தொடங்கினேன்.

எனது இளவயது ஏக்கத்தை நானே தீர்த்த திருப்தியில் நிகழ்காலத்துக்கு கிளம்பினேன் கால எந்திரத்தில்.

'ன்னிக்கு எப்படி இருந்தது கனவு?'

'என் சின்ன வயசுல இதே போல சம்பவம் நடந்ததாப்ல லேசா ஞாபகம்! amazing realistic!'

'அப்ப இதில் ஏதும் பிரச்னை இல்ல?'

'கண்டிப்பா இல்லடா மச்சி! good excitement!'

'ஒரு நிமிஷம் திரும்பு! என்னடா உன் நெற்றியின் இந்தப் பக்கமும் ஒரு தழும்பு இருக்கு புதுசா?'

தடவிப் பார்த்தேன்.

ஆமாம்!

அப்படீனா உண்மையில் கனவு இல்லையா அது?!!!!

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.