(Reading time: 11 - 22 minutes)

உலக மஹா நடிப்பு டா!! - லேகா

love

ரு பொண்ணுக்கு சந்தோசம் தரக்கூடிய விஷயங்கள் நிறைய. சிறு வாழ்த்து கூட அவளை மகிழ்ச்சி அடையச் செய்யும். ஆனால், வாழ்வில் மறக்க முடியாத தருணங்கள் மிகச் சில. அதில் திருமணத்திற்கு அடுத்து மகிழ்ச்சியுடன் நினைத்துப் பார்ப்பது, தன் கணவன் தன்னை பெண் பார்க்க வருவது. அது எப்போது நினைத்துப் பார்த்தாலும் மெய் சிலிர்க்க வைக்கும். அதுவே காதலித்தவனே பெண் பார்க்க வருவதென்றால்? அந்த சந்தோசம் தான் எனக்கும். என் பெயர் மைதிலி. இன்று என் காதலன் என்னை அவன் குடும்பத்தோட என்னைப் பெண் பார்க்க வர்றான். எனக்கு அப்படியே “என் ஆளை பாக்க போறேன்”ன்னு பாடனும் போல இருக்கு. ஆனா, அத பாடி என் ஆளை பாக்க லேட் ஆனா? சோ, நான் போய் ரெடி ஆகுறேன். நாம அப்புறமாக பேசலாம்.”

இவ்வாறு எல்லாம் தனக்குத்தானே பேசிக் கொள்பவள் பெயர் மைதிலி; வயது 24; போத்தீஸ் விளம்பரத்தில் சொல்வது போல் சர்வ லக்ஷனங்களும் பொருந்தியவள். தன்னை சேர்ந்தவர்கள் அனைவரையும் மிகவும் நேசிப்பவள். இன்று இவளது இந்த சந்தோசத்துக்கு காரணம், தனக்கு நடைபெற இருக்கும் பெண் பார்க்கும் வைபோகம்.

ஒரு மணி நேரத்திற்கு பின், மைதிலி ரெடி.

“எப்படியோ over-makeup போட்டு அவன பயப்படுத்தாத அளவுக்கு இருக்கேன். எத்தனையோ முறை பார்த்திருக்கிறேன். ஆனால், இன்று மட்டும் ஏன் இப்படி விரல் typerwriting பன்னுது? மைத்தி, அவன் வர்றதுக்குல்ல உனக்கு ஜன்னி வந்துரும் போலவே? ம்ம்ம். பயம் போக எப்பவும் செய்யுற மாதிரி எதையாவது நினைச்சு பார்க்கலாம். எதைப்பத்தி நினைக்க? லூசு! இவன தவிர என்ன நினைப்ப? நீங்களும் வாங்க. எப்ப அவன பாத்தேன்?”

ஆறு மாதங்களுக்கு முன்னால்,

தன்னுடன் வர மறுத்த தோழியை திட்டிக்கொண்டே அந்த புத்தக கடையை பதினெட்டாவது முறையாக (!!!!) அலசிக் கொண்டிருந்தாள் மைதிலி. ஆனால், அவள் எதிர்பார்த்த புத்தகம் மட்டும் கிடைக்கவே இல்லை. சரி, இன்னொரு நாள் பார்த்துக்கொள்ளலாம் என்று வாங்கிய அரை dozen புத்தகங்களை விலை போட கொடுத்த போது தான் பார்த்தாள் அந்த புத்தகத்தை; பல நாட்களாக அவள் தேடி அலைந்த புத்தகம். வாங்க நினைத்து கேட்டால், வேறு ஒருவர் வாங்கியதாக சொன்னார்கள். விட்டுவிட மனம் இல்லாமல், அந்த நபரைப் பற்றி அடையாளங்களை கேட்டறிந்து, ஆங்கில புதினங்களை ஆராய்ந்து கொண்டிருந்தவனைக் கண்டுபிடித்தாள்.

“Excuse me, Sir. நீங்க தான் ‘கள்வனின் காதலி’ counter-ல் எடுத்து வச்சுருக்கீங்களா?”

குரல் கேட்டு திரும்பியவனைப் பார்த்து ஒரு நொடி பிரமித்து தான் போனாள். (அவனைப் பற்றி சொல்ல ஆரம்பித்தால், புராணம் பாட ஆரம்பித்துவிடுவாள் மைதிலி என்பதால், அவ்விடம் அகற்றப்படுகிறது) வெகுவாக பிரயத்தனப்பட்டு நின்று விட்ட சுவாசத்தையும் குரலையும் அவள் தேடிப் பிடிப்பதற்குள் அவன் பல முறை விளித்துவிட்டான்.

“இப்படியா புரட்டாசி முடிச்சு சிக்கன் பிரியாணியை பாக்குற மாதிரி பார்ப்ப? சமாளி மைத்தி” என்று தனக்குள் சொல்லிக்கொண்டே தனக்கு அவன் எடுத்த புத்தகம் வேண்டும் என்றும், தான் அதனை எங்கெங்கோ தேடி அலைந்ததையும் கூறினாள் (கூட எக்ஸ்ட்ரா bit சேர்த்துதான்). முதலில் அவன் மறுத்தாலும் மைதிலியின் இடைவிடாத கெஞ்சல்களினால் கொடுத்துவிட்டான். அந்த நல்லவனுக்கு (உனக்கு புக் குடுக்கற எல்லாரும் நல்லவங்களா தான் தெரிவாங்க) நன்றி கூறிவிட்டு அவ்விடத்தை விட்டு நகர்ந்தாள், தன்னைப் பின்தொடரும் பார்வையைப் பற்றி அறியாமல்.

அடுத்து இருவரும் சந்தித்தது, இரு வாரங்கள் கழித்து கடற்கரையில். அப்பாவிடம் திட்டு வாங்கி அன்று தான் வாக்கிங் ஆரம்பித்திருந்தாள் மைதிலி. காலை தூக்கம் கெட்டதற்காக மிகுந்த துயரத்தோடு நடந்து கொண்டிருந்த போது எதிரே அவன் வருவதைக் கண்டாள். “ஏற்கனவே அவன அன்னைக்கு பாத்ததுக்கு என்னன்னு நினைக்கிறானோ? பாக்காதே மைத்தி” என்று தனக்குள் சொல்லிக் கொண்டே இருந்தாள். அது வேலை செய்தது என்னவோ, அவன் அருகில் வரும்வரை தான்.

முதலில் பேச ஆரம்பித்தது அவனே தான். அன்று வாங்கிய புத்தகத்தைப் பற்றி தான் முதலில் கேட்டான். “ஏன்டா, இங்க ஒருத்தி உன்ன பாத்து வழியாத குறையா நிக்கிறா. அவள விட்டுட்டு புக்-ஐ பத்தி கேக்குற. லூசாப்பா நீ?” எனக் கேட்கத்தோன்றிய நாவை அடக்கினாள். பின் இருவரும் தங்களைப்பற்றி பேசிக்கொண்டே நடந்தனர்.

அவன் பெயர் ராஜேஷ். பிறந்தது, வளர்ந்தது எல்லாமே சென்னையில்தான். ஒரு பெயர்பெற்ற MNC கம்பெனியில் வேலை. அவர்களது குடும்பத்தில் அப்பா, அம்மா, அண்ணன், அண்ணி, அவன், தம்பி மற்றும் தங்கைகள் உள்ளனர் என்றும், அவன் வீட்டில் இரண்டாவது என்றும் அறிந்துகொண்டாள்; மேலும், ராஜேஷ் தினமும் வாக்கிங்க் வருவான் என்று தெரிந்தும் கொண்டாள். அதன்பிறகு, தினமும் காலை அவர்கள் சந்திப்பு இனிதே நடந்தது என சொல்லவும் வேண்டுமா?

ஆறு மாதங்களுக்கு முன் தான் இருவரும் தங்கள் காதலைப் பகிர்ந்துகொண்டார்கள்; அதற்கு முன் இருவரும் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்துகொள்ளவும் தவறவில்லை. பிறகு அனைத்தும் வேகமாகவே நடந்தேறியது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.