(Reading time: 11 - 22 minutes)

நீ உன் friend-உடன் பேசியதை கேட்டேன்”

அந்த சம்பந்தத்தை மறுத்த அடுத்த நாள் (ஒரு வருடத்திற்கு முன்பு) தன் தோழி ஸ்வப்னாவுடன் ஒரு காபி ஷாப்பில் பேசியது நினைவுக்கு வந்தது.

“யேய் மைத்தி, நேத்து ஃபோன் பன்னுனப்போ ஏதோ வரன்னு உன் அப்பா சொன்னாருன்னு சொன்ன நேத்து. பையன் ஃபோட்டோ பாத்தியா? என்ன ஆச்சுடி?”

“ஃபோட்டோ பாக்கல டா. அதுக்கு முன்னாடியே வேணாம்னு சொல்லிட்டேன் ஸ்வப்”

“ஏன்டி?”

“அவங்க வீட்டுக்கு அவர்தான் முதல் பையன்டி. அது மட்டும் இல்லாம அவருக்கு ஒரு தம்பி அண்ட் இரு தங்கச்சிங்க இருக்காங்க”

“சூப்பர்டி. இப்படி பெரிய குடும்பம் வேணும்னு தான ஆசபட்ட? அப்பறம் ஏன் வேண்டாம்னு சொன்ன?”

“நான் ஒரே பொண்ணுதான் எங்க வீட்டுல. எங்க அப்பா அம்மாவும் அவங்க வீட்டுல ஒருத்தரா போயிட்டாங்க. சோ, எனக்கு பெரிய குடும்பத்துல நிறைய சொந்தங்களோடு இருக்கணும்னு ஆசை இருக்கு தான். ஆனா, இந்த பையன் வீட்டுல மூத்தவருடி. அப்போ அவருக்கு வரவேண்டிய வைஃப் ரொம்ப பொறுப்பா, பொறுமையா, அனுசரிச்சு போறவளா இருந்தாதா அவங்க குடும்பத்துக்கு கரெக்டா இருக்கும். எனக்கு இது எதுவுமே இல்ல. அதுமட்டுமல்லாது, பெரியவங்க சொல்றத கேட்டு அவங்களுக்கு தேவையான suggestions வேணா என்னால சொல்ல முடியும். பட், இங்க நான் தான் எல்லாத்தையும் முன்ன நின்னு நடத்தனும்” என முடித்தாள்.

‘அவர்கள் குடும்பம் பற்றி இவ்வள்வு தூரம் யோசிப்பது ஒன்றே போதாதா?’ என எழுந்த கேள்வியை கேட்காமல் மௌனமாக அமர்ந்திருந்தாள் அவளது தோழி.

ன்று

‘இதைப்பற்றி என்ன பேசப்போகிறான்?’ என அவனை நோக்கினாள்.

‘உன் பார்வை ஒன்றே போதுமே, உன் மனதை அறிந்திட’ என கவிதை பாட தோன்றிய நாவை அடக்கி கூற ஆரம்பித்தான்.

“நீ அன்னைக்கு உன் ஃப்ரெண்ட் கூட ஷாப்க்குள்ள வரும்போதே உன்ன பாத்துட்டேன். நீ எங்க உக்காருவேன்னு பாத்துட்டு இருந்தப்போதான் நீ எனக்கு நேர் பின்னாடி வந்து உக்காந்த. அப்ப நீ பேசுனது எல்லாமே எனக்கு கேட்டுது. மொதல்ல உன் ஃபோட்டோ பாத்தப்போ உன்ன பிடிச்சிருந்துது. ஆனா அப்போ, உன்ன விட என்னையும் என் குடும்பத்தையும் புரிஞ்சு, நல்லா பாத்துக்குற பொண்ணு கிடைக்காதுன்னு தோணுச்சு. அதான் உன் ஃப்ரெண்ட் ஸ்வப்னா கிட்ட help கேட்டு உன்ன ஃபாலோ பண்ணி அந்த புக் ஷாப்க்கு வந்தேன்.”

எப்பொழுது ராஜேஷை சந்தித்தபோதும் ஸ்வப்னா உடன் இருந்ததில்லை என ஞாபகம் வந்தது மைதிலிக்கு. மீண்டும் ராஜேஷே தொடர்ந்தான்.

“ஒன்னு மட்டும் உண்மைடா. நான் உன்ன எந்த விதத்துலயும் ஏமாத்தல. எனக்கு கூட பொறந்த அண்ணன் இல்லதான். ஆனா, எங்க பெரியம்மாவும் பெரியப்பாவும் அண்ணா சிறுசா இருக்கும்போதே இறந்துட்டாங்க. அதுக்கு அப்புறம் நம்ம வீடுதா அண்ணாக்கு எல்லாமே. எங்ககிட்ட அம்மாவும் அப்பாவும் ‘உங்க அண்ணன் தான் முதல்ல’ன்னு சொல்லி சொல்லி வளத்தாங்க. அண்ணி வந்ததுக்கு அப்புறமும் இப்படி தான். இது எதுவும் தெரியாம தான் நீ அன்னைக்கு வேண்டாம்ன்னு சொல்லிட்ட. பட் இதுல என்னையும் ஸ்வப்னாவையும் தவிர யாருக்கும் சம்பந்தம் இல்லடா. உனக்கு எல்லா விதத்துலயும் நான் துணையாக இருப்பேன்”

எல்லாவற்றையும் சொல்லி முடித்துவிட்டு அவளது பதிலுக்காக அமைதியாக காத்திருந்தான். அவளோ, அனைத்தையும் கேட்டுவிட்டு சிலையாக அமர்ந்திருந்தாள். சில நிமிடங்கள் கழிந்து தான் நடப்புக்கு வந்தாள். “எவ்வளவு நடத்தியிருக்கிறான்? எல்லாவற்றிற்கும் மேலாக இருவரையும் அறிமுகப்படுத்தி வைத்தபோது தெரியாதமாதிரி நடித்த நடிப்பென்ன? அது தான்டா உலக மகா நடிப்பு!”

எப்படியும் அவனை மன்னித்திடுவாள் என்பது அவள் அறிந்ததே; இன்னும் சொல்லப்போனாள், அவனும் அறிந்ததே. ஆனால், அதற்கு முன் ‘என் நடிப்பையும் கொஞ்சம் பார்’ என களத்தில் இறங்கினாள். கணவனது மொபைலை எடுத்துக்கொண்டு அந்த ரூமில் இருந்த changing room-க்குள் சென்று ஸ்வப்னாவை அழைத்து வாங்கு வாங்கு என்று வாங்கினாள். இவளிடம் திட்டு வாங்கிவிட்டு ஸ்வப்னா ‘எனக்கு இவகிட்ட இருந்து விடுதலையே கிடைக்காதா ஆண்டவா!’ என புலம்பியது தனிக்கதை.

ஐந்து நிமிடங்கள் கழித்து வெளியே வந்தவள் எதுவுமே சொல்லாமல் கட்டிலின் வலது பக்கத்தில் படுத்து உறங்க ஆரம்பித்தாள். “இவள….!!!!” என ராஜேஷ் தான் பல்லை கடித்துக்கொண்டிருந்தான். (எழுப்பியும் எழும்பாததால்)

அதன்பின் ஒரு வாரம் ராஜேஷை அலையவிட்டு தான் சமாதானமானாள். அதற்கு அவள் கணவன் பட்ட பாடு இருக்கிறதே! ஐய்யய்யய்யோ!!!

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.