(Reading time: 12 - 23 minutes)

கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன்….. - அன்னா ஸ்வீட்டி

Mehndi hands

நீயே கேளு நிலு…..எந்த பையனோட ப்ரொஃபைல காமிச்சாலும் எதாவது ஒன்னு சொல்லி வேண்டாம்னு சொல்லிடுறா இவ……”

ரெஜினாவின் வீட்டிற்கு சென்றிருந்த நிலவினியிடம் புலம்பத் தொடங்கினார் ரெஜியின் அம்மா மெர்சி.

“.இதுல இவளோட அத்தை நேத்து வந்திருந்தாங்க….கூட அவங்க தெரிஞ்சவங்க குடும்பமாம் அவங்களும் குற்றாலம் பார்க்கனும்னு வந்தவங்க போல நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வந்திருந்தாங்க…..அவங்களுக்கு நம்ம ரெஜியப் பார்த்து பிடிச்சுட்டுபோய்ட்டு போல…..அவங்க பையனும் கூட வந்திருந்தாப்ல…..எங்களுக்கும் எல்லோருக்கும் பையனையும் சரி குடும்பத்தையும் சரி பிடிச்சிறுந்துது…..இவ அத்தைக்கு அந்தப் பையன சின்ன வயசிலருந்து தெரியுமாம்….நல்ல பையன் நம்பி கொடுக்கலாம்….இப்டி அமையும்னு நானே கூட எதிர்பார்க்கல இப்பவே கை மாறிடலாம்னு அவங்க அப்டி ஒரு சந்தோஷப்பட்டாங்க…..” அவர் தொடர

நிலவினி இப்போது ரெஜினாவின் முகத்தைப் பார்த்தாள்.

இவள் பார்ப்பதை கவனிக்கவும்…டொட்டடொய்ங் பாவத்துடன் அவள் முகத்தை அவசரமாய் திருப்பி அதுவரை பார்த்தே இராதது போல் அவள் அங்கிருந்த போட்டோவை அவள் ஆர்வமாய் பார்க்க….

வினிக்கு ரெஜி அம்மா சொல்லாமலே அடுத்து என்ன நடந்திருக்கும் என்பது புரிந்து போனது.

“என்ன நடந்துச்சுன்னு தெரியலமா……பையன் இவட்ட தனியா பேசனும்னு சொல்லி சந்தோஶமாத்தான் போனான்….அடுத்த அஞ்சாவது நிமிஷம் வெளிய வந்தவன்…..சாரி ஆன்டி எனக்கு உங்க ஃபேமிலி உங்க பொண்ணோட நேச்சர் எல்லாம் பிடிச்சிறுக்குது…. ஆனாலும் அவங்க சொல்ற கண்டிஷன் எனக்கு ஒத்துவரதுன்னு சொல்லிட்டுப் போய்ட்டான்….”

நிலவினி அவசரமாய் தன் வாயில் கை வைத்துக் கொண்டாள்…..ஆன்டி அவ்ளவு சீரியஸா கவலப் பட்டுட்டு இருக்கப்ப….இவ சிரிச்சுடக் கூடாதுல்ல….

“என்னதுன்னு கேட்டா இது வாய திறக்க மாட்டேங்குது….தெரிஞ்சா அதுக்கு ஒத்துவர்ற மாப்ளய நாங்க பார்ப்போம்லமா…. நீயாவது கேட்டு பாரும்மா….” அவர் சொல்லில் ரெஜியை பார்த்தபடி நிலவினி தலையாட்ட….

ரெஜியோ இல்லை என்பது போல் இட வலமாய் தலையாட்டினாள்.

“உனக்கு பிடிச்ச மட்டன் சுக்கா….இறால் ஃப்ரை செய்றேன் நிலு….நீ சாப்டுட்டுதான் போகனும்….மாப்ள தம்பி உன்னை பிக்கப் செய்ய வர்றப்ப இங்க தான் அவரும் சாப்டனும் சொல்லி வச்சுடுமா….” சொல்லியபடி அவர் அறையை விட்டு வெளியேற….

“அம்மா நிலு இறால் சாப்டமாட்டா…..” இங்கிருந்து கத்திய ரெஜினா….”அதுல கூட லவ்வாம் பொண்ணுக்கு…” என்றாள் குரலை இறக்கி நிலவினிக்கு மட்டுமாய் கேட்க்கும் படி…

சட்டென ஒன்று கிடைத்தது வினியிடம் இருந்து ரெஜிக்கு…..

அதற்குள் “அப்டியாமா…?” என்றபடி ஆச்சர்ய முகபாவமுமாமக திரும்ப வந்திருந்தார் ரெஜியின் அம்மா….. “அப்ப நான் வேற எதாவது செய்றேன்….” அவர் தான்…

“அச்சோ அப்டில்லாம் இல்ல ஆன்டி….. அவங்க பெரும்பாலனா நேரம் அங்க ஃபார்ம்ல இருக்காங்க இல்லையா…. அங்க ஆஃபீஸ் ரூம்ல இருந்தாங்கன்னா ஒன்னும் தெரியாது…..ஆனா ஈவ்னிங் லோடிங் டைம்ல ஸ்பாட்ல இருப்பாங்க…. இந்த ஸ்மெல் இருந்திருக்கும்..…. அடுத்து  வீட்லயும் அதே சமையல்னா கஷ்டமா தோண கூடாதுன்னு இதை அவாய்ட் பண்ணிடுவேன்….” நிலவினி இறால் பண்ணை வைத்திருக்கும் தன் கணவன் யவ்வனை நினைத்துக் கொண்டு விளக்க…

“ ஏய் நிலு…. யவி அண்ணா பேரை சொல்லக் கூடாதுன்னு நீ நினச்சா கூட ஒத்துகலாம் இது என்னடி இறால் பேர கூட சொல்ல மாடேன்ற மாதிரி…” ரெஜி மீண்டுமாய் தன் வேலையைக் காண்பிக்க…

இப்போது மீண்டுமாய் அடுத்த அடி ரெஜினாவுக்கு நிலவினியிடமிருந்து….

“ஆத்தாடி…இவ காதல அடிச்சு அடிச்சு தான் சொல்லுவா போலயே…..இங்கயே இப்டின்னா யவி அண்ணாட்ட எப்டியோ…” நிலு அடித்த இடத்தை தடவிக் கொண்டே ரெஜி தொடர….

“அப்ப நீ அங்க இறால் சாப்ட்றுக்க மாட்ட என்னமா….சரி அப்ப இங்கயாவது சாப்டு…உனக்கு ரொம்ப பிடிக்குமே….. மாப்ள தம்பிக்கு மட்டன் பிடிக்கும் தானே….” கேட்ட ரெஜியின் அம்மாவுக்கு

“அதெல்லாம் சாப்டுவாங்க ஆன்டி….நீங்க ஸ்ட்ரெயின் பண்ணிக்காதீங்க” என சொல்லி அனுப்பி வைத்த வினி….

பெட்டில் தன் அருகில் அமர்ந்திருந்த ரெஜிக்கு இப்போது ஒரு கும்மாங்குத்து……”உங்க அண்ணாட்ட இப்டித்தான்…..முடிஞ்சா அவங்கட்டயே கேட்டுப்பாரு….. வந்துட்டா என் லவ் ஸ்டோரிய கிளற…. இப்ப முதல்ல உன் கதைய சொல்லு….என்னடி சொல்லி துரத்திவிட்ட…”

“ப்ச்..அத விடு….” இப்போது ரெஜியோ வெளியே தெரிந்த அவளது புல்லட்டைப் பார்த்தாள்….

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.