(Reading time: 12 - 23 minutes)

திகாலை 6 மணி

.வ்ர்ர்ர்ரூரூரூம்ம்….டப் டப் டப்…..

புல்லட் ஸ்டார்ட் ஆகும் சவ்ண்ட் ரிங்க் டோனாய் ஒலிக்க……தன் மொபைலை துள்ளலாய் எடுத்து காதில் வைத்தாள் ரெஜினா….

“ஹ…” இவள் முழுதாய் சொல்லி முடிக்கும் முன்பும் கூட…

“ஹலோங்க…… உங்களுக்கு புல்லட் ஓட்ட வரும்னு சொன்னாங்க…அதான் நான் உங்களையே கண்ணாலம் செய்துகலாம்னு முடிவு செய்துட்டேங்கோ….” என்றது ஒரு ஆண் குரல்….

சும்மா ஒரு புள்ளி கமா மாத்தி பேசினாலே பேசுறவன்ட்டயே சப்புன்னு அறஞ்ச எஃபெக்டல பதில் சொல்ற வர்க்கம் நம்ம ரெஜினா.... இதுல இப்டி பேசினா….?

“டேய் யார்டா நீ…..? பல்ல தட்டி கைல கொடுத்துடுவேன்….” பல்லைக் கடித்துக் கொண்டு இவள் எகிற…….

“அம்மணி  ஐ லவ் யுவர் பல் ஆல்சோ….அதனால அதை விட்டுடுங்கோ….இப்ப என்ன உங்களுக்கு இந்த ஐத்தான் பேர் தெரியனும் அவளவுதானுங்க….?” அந்த குரல் இன்னுமாய் எல்லை தாண்ட….

“போடா உன் பேரு இங்க யாருக்கு வேணும்  பொறுக்கி….” இவள் இணைப்பை துண்டித்தாள்….

அடுத்து இவள் குளித்து முடித்து மீண்டுமாய் தன் அறைக்குள் வர …… இவள் அறை ட்ரெஸிங் டேபிள் கண்ணாடியில்….

ஐ லவ் யூங்க அம்மிணி…..--- இப்டிக்கு உங்க புல்லட் பாண்டி என லிப்ஸ்டிக்கால் எழுதப் பட்டிருந்தது…..

அரண்டுதான் போனாள் ரெஜி….. பின்னே வீட்டுக்குள்ள இவ ரூம் வரைக்கும் வரனும்னா….

ஆனால் அம்மாவிடம் சொல்லி பயம் காட்டவும் இவளுக்கு விருப்பம் இல்லை…… ஆக தன் ஃப்ரெண்ட்ஸ் நிலவினியிடமும் பவிஷ்யாவிடமும் தான்  ஃபோனில் புலம்பி வைத்தாள்….

“இங்க பாரு இப்டி வீடு வரைக்கும் வர்றதுல்லாம் சின்ன விஷயமில்ல….கண்டிப்பா எதாவது செய்தாகனும்…..வெளிய சொல்ல வேண்டாம்…..நமக்கு தெரிஞ்ச போலீஸ் ஆஃபீஸர்ட்ட சொல்லி  வைக்கலாம்….உனக்கு தான் பெரியத்தான் ஃப்ரெண்ட் சசிபால் தெரியும்ல….அவங்கட்டயே ஹெல்ப் கேட்போம்…” என்ற வினியின் வார்த்தைகள் இவளுக்கு சரியாய் பட….

அடுத்து அந்த சசிபாலிடம் இவளே விஷயம் சொன்னாள். பவிஷ்யா திருமணத்தில் நடந்த சில கலாட்டாக்களில் பவிக்கு உதவ சென்றபோது இவளுக்கு சசிபால் அறிமுகம்….அண்ட் அப்படியே பழக்கம்.

“வீட்ல அலையன்ஸ் பார்க்க ஆரம்பிக்கிற டைம்ல இப்டிலாம் ப்ரச்சனைனா இன்னும் சீக்கிரமா செய்ய நினைப்பாங்க சசி…..” இவள் குரலில் ஏராளமான வருத்தம் மற்றும் அழுத்தம்…

“அதெல்லாம் பார்த்துகலாம் ரெஜி…..ஆனா கேட்கிறேன்னு தப்பா எடுத்துக்காத…இப்ப சீக்கிரம் மேரேஜ் செய்துக்கிறதுல அப்டி என்ன ப்ரச்சனை ……சீக்கிரம் செய்துகிட்டா எல்லாருக்குமே ஈசியா போய்டுமே…” அவன் சொல்ல சொல்ல இவள் முகம் இன்னுமாய் சிடு சிடு என ஆகிறது….

“கிரிமினல கண்டு பிடிக்க சொன்னேன் நான்…..” அத மட்டும் பார்த்தா போதும் நீ…. என்ற தொனியில் ஒரு பதிலை சொல்லிவிட்டு விடு விடுவென கிளம்பி வீட்டுக்கு வந்துவிட்டாள்.

ன்று இரவு இவள் மொபைல் தடதடத்தது……

“ என்ன அம்மிணி என்ன தேடி போலீஸ் வரைக்கும் போய்ட்டீங்க போலயே…..அவ்ளவு ஏன் மெனக்கெடனும்…..அம்மிணி சொன்னா அடியேன் ஓடோடி வந்துடப் போறேன்….” பேசுவது அந்த புல்லட் பாண்டி லூசு  என புரிய

இவள் “டேய்ய்ய்ய்ய்ய்ய்” என ஆரம்பித்தாள் இருந்த எரிச்சலில்…

“டேய் இல்ல கண்ணா பாண்டி புல்லட் பாண்டி…” அவன் இன்னும் வெறுப்பேத்த….

“கைல மட்டும் கிடச்சா நீ ….” இவள் ஏற…

“அச்சோ அதெல்லாம் கல்யாணத்துக்கு முன்ன பேசலாங்களா அம்மிணி….” அவன் அடுத்த ஸ்டேஜுக்குப் போக……. இவள் என்ன சொல்லவும் முடியாத எரிமலை கோபத்திற்கு மாற

அதற்குள் அவன்….”நாம முதல் ஸ்டேஜ்ல இருந்தே ஆரம்பிப்போம் அம்மிணி…...எல்லாத்திலயும் ஈக்வாலிட்டி பார்க்கிறவன் இந்த புல்லட் பாண்டி….சோ நாளைக்கு நான் பொண்ணு பார்க்க வரேன்…நீங்க மாப்ள பார்க்க வாங்க…..ஓகேங்களா….பீச்ல ஆறு மணிக்கா பார்ப்போம்ங்க…” இணைப்பை துண்டித்திருந்தான் அவன்…..

மறுநாள் மாலை ஆறுமணி…….போலீஸ் ஆஃபீஸர் சசிபாலுடன் பீச்சிற்கு வந்திருந்தாள் ரெஜினா….. அவனோட ஐடியா தான் இது……இவள் அந்த புல்லட் பாண்டி கால் பற்றி சசிபாலிடம் சொல்ல……அவன் இதை யூஃஸ் செய்து அவனை பிடிக்கலாம் என திட்டம் சொன்னான்.

இப்போ அது  இம்ப்ளிமென்ட் ஆகுது….

“அவன் இங்க வரவும் நீங்க வந்துடுவீங்கல்ல சசி…..” சற்று தவிப்பாகவே கேட்டாள் இவள்….

இவள் தவிப்பை பார்த்தவனுக்கு ஒரு மாதிரியாகி விட்டது போலும்…..

“என் கண்ணுக்குள்ள தான் இருப்ப எப்பவும் நீ…” அத்தனை பதட்டத்திலும் அவன் பார்வையும் குரலும் வித்யாசப் படுவது இவளுக்கு புரிகிறதுதான்…

பதில் ஏதும் சொல்லாமல் மௌனமாய் அவனைப் பார்த்தாள்….இயல்பான பார்வை இல்லை அது…. உள்ளுக்குள் இருக்கும் ஏக்கமும் அதை மறைக்க தடுமாறும் மனநிலையுமாய் ஒரு பார்வை…

“கல்யாணத்துக்கு கல்யாணப் பொண்ணு வந்தா போதுங்கோ… எப்டி வந்தாலும்  எனக்கு சம்மதம் தானுங்கோ…” இப்போது  சசிபாலிடம் மொத்த குறும்பும்…..

குரல் அந்த புல்லட் பாண்டியின் குரல்…சொன்னது எதிரில் நிற்கும் சசிபால்

இவள் ஒரு நொடி அதிர்ச்சி ஆனந்தம் பின் அட்லாண்டிக்அ சைஸ் ஆழ  கோபத்திற்கு குடி போனாள்….

“நீ…ங்களா….??? .இதெல்லாம் உங்க வேலை தானா?”

“பின்னே…. எனக்காக இல்லாம உன் ரூம்ல வந்து அப்டி எழுதி வைக்க உன் ஃப்ரெண்ட் ஒத்துப்பாங்களா…?”

“ஹான் ஃப்ரெண்டா?”

“ஆமா உன் ஃப்ரெண்ட்ஸ் நிலவினியும் பவிஷ்யாவும் உன்னைப் பத்தி என்ட வந்து சொல்லவுமே நான் எடுத்த ஆக்க்ஷன் அது…….”

“ஆன்…..அவட்ட கூட யார்ட்டயும் நான் சொல்லையே…..பிறகு எப்டி…” இவள் பேந்த முழிக்க….

“அம்மா தாயே வாழ்க்கைல எத்தனயோ கேஸை நான் பார்த்துறுக்கேன்…..”பரிதாபமாய் மாறியது சசிபாலின் முகம்….

இவளுக்கும் இதற்குள் கொஞ்சம் புரிவது போல் இருந்தது… ஹி ஹி என்று மாறியது இவள் முக பாவம்…..

“என் ஃப்ரெண்ட் ரெஜி கல்யாணத்துக்கு ஒரு கண்டிஷன் போட்றுக்கா….அது என்ன கண்டிஷன்னு எங்களுக்கு தெரியலை….நீங்க தான் கண்டு பிடிச்சு தரனும்னு என்ட்ட வந்து கம்ளெய்ண்ட் குடுத்தாங்க பாரு உன் ஃப்ரெண்ட்ஸ் ரெண்டு பேரும்….” அவன் சொல்லிக் கொண்டு போக…

“ஹி ஹி…அவங்களுக்கு என் மேல பாசம் அதிகம்….” சமாளித்தாள் இவள்.

“ஆமா அப்டி பாசம் உள்ள உன் ஃப்ரெண்ட்ஸ் உன் அம்மா….ஏன் உன்னை லவ் பண்ற என்னைனு எல்லாரையும் சுத்த விட்டல்ல….அதான் கொஞ்சம் சுத்தி வளச்சு காதல சொல்லலாம்னு ஒரு ப்ளான்…… அதோட அப்டி என்னதான் கண்டிஷன் போட்டன்னு தெரிஞ்சு உன்ட்ட அதுக்கு ஒத்துகிட்டுதான் ப்ரபோஸ் செய்யனும்னு ஒரு வைராக்கியம்….” அவன் விளக்க…

“கண்டிஷனை எப்டி கண்டு பிடிச்சீங்க சசி…? “ என குழந்தை குதுகலத்துக்கு மாறி இருந்தாள் ரெஜி ….

“வேற எப்டி நீ யார்ட்ட கண்டிஷன் சொன்னியோ அவனை தேடிப் போய் கேட்டுட்டு வந்துட்டேன்….” ஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ

தலையில் அடித்துக் கொண்டாள் ரெஜி.

“போலீஸ்டி உன் மச்சான்…” அவன் தன் காலரை தூக்கிவிட்டுக் கொள்ள

“பொல்லாத போலீஸ் நான் இத்தனை பேரை சுத்தி தூது விடுற வரைக்கும் ஒன்னும் செய்யாத போலீஸ்….” இப்போது இவள் நொடித்தாள்….

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.