(Reading time: 7 - 13 minutes)

நேர்க்காணல் - ஆர்த்தி N
Heart smile

ரியா ரியா… இப்ப எந்திரிக்க போறியா இல்லையா.. ” என்று ரியாவுடைய தாயார் கத்திக்கொண்டு இருந்தார் அந்த அதிகாலை வேளையில். (அதிகாலை’னா எட்டு மணிக்கு தாங்க.. ஹிஹி )ஆனால் நம்ம மேடம் இன்னும் எந்திரித்த பாடில்லை.

அன்னை நடந்து வரும் காலடி ஓசை கேட்டு அரக்க பரக்க எந்திரிதாள் ரியா..”அம்மா நா அப்போவே எந்திருச்சுட்ட மா.. பாருங்க பெட்ஷீட் கூட மடிச்சு வெச்சுட்டேன்.”

“யேஹ் கழுதை..நா வர சத்தம் கேட்டு எந்திருச்சுட்டு பொய்யா சொல்ர.. சரி சரி இன்னிக்கி எங்க போகனும்னு தெரியும்ல..சீக்கிரம் ஃப்ரெஷ் ஆயிட்டு வா டா..”

“அத என்னால மறக்க முடியுமா மிஸ்ஸர்ஸ் சரோஜா தேவி”என்று கூறி விட்டு அன்னையின் அடியில் இருந்து தப்பி குளியலரையினுள் நுழைந்தாள்.

குளித்து முடித்து வந்து நேராக பூஜை அறையில் போய் அவளுக்கு இஷ்ட தெய்வமான பிள்ளையாரிடம் ஒரு அட்டெண்டன்ஸை போட்டு விட்டு

சமையல் அறை நோக்கி “மாஆஆஆஆ எனக்கு பசிக்குது சீக்கிரம் டிஃபன் எடுத்து வெய்ங்க.. லேட் ஆச்சுல.. கிளம்பனும்.எஸ் டி”(சரோஜா தேவி’ங்க)

“இப்போ எதுக்கு இப்படி கத்தர.. டைனிங் டேபிள்ள  வெச்சுருக்கேன் பாரு எல்லாம்..

எடுத்து போட்டுக்கோ டி”.. “எஸ் டி நு கூப்ட்ட வாயிலையே ரெண்டு அடி போடறேன் பாரு”..ரியா,”விட்ரா விட்ரா நமக்கு அம்மா கிட்ட திட்டு வாங்கறது என்ன புதுசா.. வா நம்ம போயி சாப்பிடலாம்”என்று தனக்கு தானே பேசிக்கொண்டு தனது முக்கியமான வேலையை பார்க்க சென்றாள்.. சரோஜா இதை பார்த்துத் தலையில் அடித்துக்கொண்டு சென்றார்.. வேரென்ன செய்ய முடியும் :D

ரியா தனது ஸ்கூட்டியை அந்த பிரபல மென்பொருள் நிறுவனதின் பார்க்கிங் இடத்தில் நிறுத்தி விட்டு நேர்க்காணல் நடக்கும் தளத்தை நோக்கி சென்றாள்..

ஆம்.. ரியா இன்று நேர்காணலின் கடைசித் தேர்வுக்காக வந்திருந்தாள்..(ஹெச் ஆர் ரௌண்ட்).

நேர்முகத்தேர்வு நடக்கும் தளத்தில் candidates’காக போடப்பட்ட இருக்கையில் அமர்ந்து அன்றைய தேர்வுக்காக தன்னை தயார்ப்படுத்திக் கொண்டாள்..

ரியா ..அவளைப் பத்தி ஒரு சின்ன இன்ட்ரொ.. ஷிவா மற்றும் சரோஜா தம்பதியாரின் ஒரே செல்ல+செல்வ மகள்.. ஷிவா பஹ்ரைனில் வேலைப் பார்த்து வருகிறார்.. வருடத்திருக்கு மூன்று அல்லது நான்கு முறை கோயம்புத்தூர் வருவார்.அன்னை சரோஜா கொஞ்சம் கண்டிப்பு மிகுந்த பாசம் என்னும் அக்மார்க் தாயார்.. ரியா csc engineering முடித்திருகிறாள்.. (அவ்ளோதாங்க ரியா ஓட இன்ட்ரொ.. ரொம்ப சொல்லி உங்கள போரடிக்க விரும்பல:D)

ரியா அழைப்புக்காக காத்துக்கொண்டு இருந்தாள்.. முதலிரண்டுப் பேர் முடித்து இவளை அழைத்தனர்.கொஞ்சம் பயத்தோட உள்ளே சென்றாள்.

நேர்முகத்தேர்வு நடத்த இரண்டு பேர் இருந்தார்கள்.. அதில் ஒருவனைக் கண்டு அதிர்ந்தாலும் எதையும் காட்டிக் கொள்ளாமல் அவர்களிருவருக்கும் வணக்கம் தெரிவித்து விட்டு அவர்கள் காட்டிய இருக்கையில் அமர்ந்தாள்..

கேட்ட அணைத்து கேள்விகளுக்கும் மிகச்சிறப்பாக பதிலளித்து வெற்றிகரமாக நேர்முகத்தேர்வை முடித்து வீட்டுக்கு சென்றாள்.போகும் வழியாவும் அந்த தேர்வு நடத்திய இருவரில் அந்த ஒருவனை பத்தியே சிந்தித்து கொண்டுச் சென்றாள்.அவன் பெயர் ரித்விக் ஆம்.. அவன் தன்னை தெரிந்த மாதிரியே காமித்துக் கொள்ளவில்லையே.. ஒருவேளை மறந்து இருப்பானோ என பலவாறு யோசிச்சிட்டு இருந்தாள்.

ரண்டு நாட்களுக்கு முன்…

ரியா தனது தோழியை சந்தித்து விட்டு வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தாள்.வரும் வழியில் சிக்னலை கவனிக்காமல் அவள் பாட்டுக்கு கடந்து விட்டாள். ஒரு நிமிடம் தான் எதிரில் வந்து கொண்டிருந்த வண்டியில் மொதி இருவரும் கிழே விழுந்தனர்.

(சும்மா ஒரு சின்ன விஷயம் நடந்தாலே கூட்டம் கூடிரும் இதுல இவளோப் பெரிய அக்சிடென்ட் நடந்துருக்கு சும்மாவா இருப்பாங்க நம் மக்கள்:D(not to offend anyone..jus for fun)இப்போ என்ன நடக்குதுனு பாக்கலாம் வாங்க)

இரண்டுப் பேருக்கும் பெரிதாக அடி படவில்லை..ஏனெனில் எதிரில் வந்தவன் கடைசி நொடியில் சுதாரித்து வாகனத்தை திருப்பி நிலைகொல்லாமல் கிழே விழுந்திருந்தான்.. ரியாவோ பயத்தில் விழுந்திருந்தாள்.. இருவரும் ஒருவழியாக எந்திரித்து சண்டைகோழிகளாக முறைத்துக் கொண்டு சண்டைக்கு தயாராயினர்.

“யேஹ் கண்ணு என்ன பின்னாடியா இருக்கு..சிக்னல் போட்டிருக்கு நீ பாட்டுக்கு வர.. கத்துக்குட்டி எல்லாம் வண்டி எடுத்துட்டு வந்துருது..சை”என உச்சக் கட்ட கோபத்தில் கத்தினான் அந்த புதியவன்.இருவரும் தங்களது வண்டியை தள்ளிக்கொண்டு சாலையோரம் வந்திருந்தனர்.. கூட்டமும் கொஞ்சம் கலைந்திருந்தது.. பெரிதாக இருவருக்கும் அடி இல்லாததால்.. ரியா தன் பெயரில் தான் தப்பு ஆதலால் மண்ணிப்புக் கேட்க வேண்டும் என்பதை அவனின் கத்துக்குட்டி என்கிற வார்த்தையில் அதை டீலில் விட்டுட்டு சிலிர்த்துக் கொண்டு சண்டைப் போடச் சென்றாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.