(Reading time: 7 - 13 minutes)

ஹெல்லோ போனா போகுதுனு அமைதியா இருந்தா என்ன ஓவரா பேசறிங்க.. யாரப் பாத்து கத்துக்குட்டினு சொல்றிங்க.. சிக்னல் ரெட் லைட் விழுக இன்னும் 5 செக்கன்ட்ஸ் இருந்துச்சு.. நீங்க அவசரப்பட்டு வந்துட்டு என்னை சொல்றிங்களா.. வந்துட்டாரு பெருசா பேச..”இருவரும் இப்படி வார்த்தையால் வாயட.. கூடி இருந்த கொஞ்சம் பேர் இவர்களின் சண்டையை நிறுத்தி அனுப்பிவைத்தனர்.

“இருந்தாலும் அவன் கத்துக்குட்டினு எல்லார் முன்னாடியும் சொல்லிற்க கூடாதுடி ரியா..சை மானமேப் போச்சு.. அவனுக்கு கண்டிப்பா ஒரு நாள் இருக்கு” ரியா அவனை அர்ச்சனைச் செய்துக்கொண்டே வீடு போய்ச் சேர்ந்தாள்.

ரியா தன் நினைவலைகளில் இருந்து வெளியே வந்தாள்..

“என்னடி இன்டர்வியு எப்படி பண்ண.? மந்திரிச்சு விட்டக் கோழி மாதிரி இப்படி முழிக்கர.. நான் வந்ததுல இருந்துப் பாத்துட்டு தான் இருக்கேன்”என சரோஜா சந்தேகமாக அவளை பார்த்தார்.

“ஹிஹி அப்படி எல்லாம் இல்ல மம்மி.. நல்லா செஞ்சுருக்கேன்.. ரெண்டு நாள்ள ரிசல்ட் தெரியும்..”

“உன்னோட ஆசைக்காக தான் டா நாங்க இதுக்கு அலோவ் செய்யறோம்”என சரோஜா வாஞ்சையாக சொல்லி விட்டு சென்றார்..

என்னடா இது அதிசயமா இருக்கு என அன்னையை ஓட்டிக்கொண்டு அன்றையை தினத்தை சிறப்பாக களித்தாள்..

ரியாவிற்கு இன்று முதல் தினம் அலுவலகத்தில்.. மிகுந்த உற்ச்சாகத்துடன் படியேறிக் கொண்டிருந்தாள்..அவளுக்கு முன்பு ரித்விக் செல்வதைப் பார்த்து அவசரமாக அவனிடம் விரைந்தாள்.

“எக்ஸ்க்யுஸ் மீ.. ரொம்ப நன்றி சார்.. எங்க அந்த அக்ஸிடென்ட் சம்பவத்த மனசுல வெச்சுட்டு ரிஜெக்ட் பன்னிருவிங்கலோனு நினைச்சேன்.. பட் நிஜம்மா இந்த ட்விஸ்ட எதிர்பார்க்கல..”என்று எவ்வித தயக்கமுமின்றி ‘ஏன் ரியா அவன இன்னொரு தடவப் பார்த்தா உண்டு இல்ல பண்ணிருவன்னு சொல்லிட்டு இப்போ இப்படி நீயாவே போய் பேசற’என எள்ளி நகையாடிய மனதை ஓரங்கட்டி விட்டு அவனிடத்தில் சென்று அவன் தரப்போகும் நிஜம்மான ட்விஸ்டைப் பற்றியறியாமல் பேசினாள்..

“யாருங்க நீங்க ?இதுக்கு முன்னாடி பார்த்திருக்கோம்?யு ஸி.. தினம் நா நிறைய பேர மீட் பன்னுவ.. சோ எனக்கு நியாபகம் இல்லையே..”என கண்களில் குறும்பு மிண்ணக் கூறி அதை நொடியில்  மறைத்து தனது கேபின் நோக்கி சென்றான்..

“ஹாஹா பாவம் .. இப்படி நீயாவே வந்து இம்புட்டு பெரிய பல்ப வாங்கிக்கிட்டியேச் செல்லக் குட்டி.. ஹையொ ஹையொ”என மனதினுள் தனது செல்லத்தை சீராட்டினான். ஆமாங்க அன்றைய சம்பவம் லைட்டா நம்ம சார்’அ டிஸ்டர்ப் செஞ்சுருச்சு.. அதை ஒருவாரு மறப்பதற்க்குள் அவளே அவன் கண் முன் தோன்றி அவ தான்யா உன் எல்லாம் என உறுதியும் எடுக்க வைத்துவிட்டது அவன் மனம்.

அங்கு ரியாவோ பேவென முழித்து கொண்டு அங்கேயே நின்று கொண்டிருந்தாள்..

“இவன் நிஜம்மா தான் மறந்துடானா.. இல்ல சும்மா கலாய்க்கரானா.. ஆனா இப்படி அசிங்கபட்டுடியே ரியா.. பேசாம போயிருக்கலாம் .. அத விட்டுட்டு இப்படி வம்படியா போய் பல்ப் வாங்கிடனே.. பப்பி ஷேம் ரியாக் குட்டி.. நல்ல வேளை யாரும் இல்லை..”என அவன் சென்ற திசையை பார்த்து தனக்கு தானே பேசிகொண்டிருந்தாள்.. அவனைப் பார்த்து இன்னதென்று கூற முடியாத ஒரு உணர்வு எழுவதை அவளாள் தடுக்க முடியவில்லை..

ரித்விக் எப்படியும் ரியாவை விடமாட்டான் ஆதலால் வரும் காலம் இவர்களை ஒன்றாக்கும் என நம்பி வாழ்த்தி விடைப்பெருவோம்!

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.