செல்வத்திற்கு கால்கள் தரையில் படவேயில்லை. அவர் மகள் இந்த மாநிலமே திரும்பி பார்க்கவைக்கும் சாதனையை படைத்ததில் அவருக்கு நெஞ்சு கொள்ளா பெருமை. செல்வத்தின் தாயே இந்த செய்தி கேட்டு இவ்வளவு நாள் இவ்வளவு அறிவாளி பிள்ளையவா திட்டிக் கொண்டு இருந்தேன் என நினைத்தார். அவரே பேத்தியிடம் "மகராசி எங்க இருந்தாலும் நல்லா இருக்கணும்.நீ ஆசைப் பட்டதெல்லாம் நடக்கணும்" முதல் முதலாக தன் நல்வாழ்த்தை கூறினார்.
மேற்கொண்டு என்ன படிக்க ஆசைப்படுகிறீர்கள் என நிருபர்கள் கேட்டதற்கு அவள் “மருத்துவம் படிக்க ஆசை” என தெரிவித்தாள்.
அவனீஷும் நல்ல மதிப்பெண்கள் தான் வாங்கியிருந்தான்.ஆனால் அவனுக்கு ஸ்ரீமதியின் மேல் இருந்த பொறாமை அதிகரித்தது. ருத்ர மூர்த்தி அப்பொழுது கூட தன் மகனிடம் "சாப்பாடு ஆக்க போற பொம்பளை பிள்ளையே டாக்டர்க்கு படிக்க போறேங்குது. உனக்கென்ன நீ ராஜா உன்னை நான் படிக்க வைக்கிறேன்" என்றார்.
அவனோ அதை மறுத்து பொறியியல் படிப்பை தேர்ந்தெடுத்தான்.
அவள் மெட்ராஸ் மெடிக்கல் காலேஜ்(MMC)-யில் மருத்துவ படிப்பை தொடர, அவன் அண்ணா யூனிவர்சிட்டி-யில் சேர்ந்தான்.
நாட்கள் நகர அவனீஷ் முதலில் படிப்பை முடித்தான். அவனுக்கு அமெரிக்கா-வில் சென்று மேல் படிப்பை தொடர ஆசை.அவன் தந்தையிடம் தெரிவிக்க அவரோ மிக சந்தோசமாக தலையாட்டினார்.
அவனீஷ் அமெரிக்காவிற்கு மேல் படிப்பிற்க்காக பறந்து சென்றான்.
ஸ்ரீமதியும் படிப்பை முடித்த நேரம் அவளுக்கு பல நாடுகளில் இருந்த மருத்துவ கல்லூரிகள் மேல் படிப்பை தொடர அழைப்பு விடுத்தன.ஆனால் அவளோ அவள் படிப்பு அவள் நாட்டிற்கு தான் எனக் கூறி, டெல்லியில் மேற்படிப்பை முடித்து எய்ம்ஸ்(AIIMS)-ல் பணியில் அமர்ந்தாள்.
அவனீஷ் படிப்பை முடித்து அந்த சொர்க்கபுரி நாட்டை விட்டு வரமாட்டேன் எனக் கூறி, அவனுக்கு அங்கேயே கிடைத்த வேலையை ஏற்றான்.
ஸ்ரீமதிக்கு அவளின் அழகுக்கும் அறிவுக்கும் ஏற்ற மணமகனை கண்டுபிடித்து, ஊர் மெச்ச திருமணத்தை நடத்தி முடித்தார் செல்வம்.
அவனீஷ் அவன் கல்லூரியிலே படித்த இந்தியா வம்சாவளியை சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டான்.ருத்ர மூர்த்திக்கும் அவர் மனைவிக்கும் இது பிடிக்கவில்லையென்றாலும், அவனின் ஆசையை நிறைவேற்ற திருமணத்திற்க்காக அமெரிக்கா சென்றனர்.அங்கே சிறிது காலம் இருந்துவிட்டு அந்த ஊரும் பிடிக்காமல், மருமகளுக்கும் பிடிக்காமல் எவ்வளவு காலம் அந்த வீட்டில் தங்க முடியும் என எண்ணி அதனால் "இந்த ஊர் எங்களுக்கு பிடிக்கவில்லை" என மகனிடம் கூறிவிட்டு தாயகம் திரும்பினர்.
ஸ்ரீமதியின் கணவர் மாமனாரையும் மாமியாரையும் தன் பெற்றோராக எண்ணி, அவர்கள் அங்கே தனியாக இருந்து கஷ்ட்டப்பட வேண்டாம் என்று கூறி டெல்லி வரவைத்து அவர்களுடனே வைத்து கொண்டான். அவர்களும் மீதியிருக்கும் காலத்தை அவர்களின் பேரகுழந்தைகளுடன் செலவிடலாம் என எண்ணி மகிழ்ச்சியுடன் சம்மதித்தனர். தன் பெற்றோரையும், தன மனைவியின் பெற்றோரையும் சமமாக பாவித்தான்.
ருத்ர மூர்த்தியின் மனைவிக்கு உடல் நிலை சரியில்லாமல் போனது.மகனை பார்க்க வேண்டும் என ஆசை பட்டார். ருத்ர மூர்த்தி இந்த தகவலை மகனுக்கு தெரியப்படுத்த அவனோ "அந்த பொல்லுயுஷன் (Pollution)லேலா என்னால வந்து இருக்க முடியாது.எதாவது தேவைன்னா சொல்லுங்க பணம் அனுப்பறேன்" எனக் கூறி போனை வைத்து விட்டான்.
எப்படியோ ருத்ர மூர்த்தி மனைவி உடல் நலம் தேறி வந்தாள்.ஆனால் அதற்குள் ருத்ர மூர்த்தி தான் இளைத்து விட்டார்.
அவர்கள் இருவரின் மனமும் உடலும் சோர்ந்து போக தனிமையின் கொடுமையை அனுபவித்தனர். இதற்குமேலும் இருவராலும் தனியாக இருக்க முடியாத காரணத்தால் மறுமடியும் மகனை தொடர்புகொள்ள அவனோ "உங்களால தனியா இருக்க முடிலேன்னா ஆசிரமத்துல போய் சேர்த்துக்கோங்க.என்னை டார்ச்சர் பண்ணாதீங்க" என முகத்தில் அடித்தபடி கூறி விட்டான்.
பின் அவனே அவனின் நண்பனின் ஆசிரமத்தில் பணம் கட்டி சேர்த்து விட்டான்.
என்னதான் ஆசிரமத்தில் நன்றாக கவனித்து கொண்டாலும் தன் மகன் பேரகுழந்தைகளோடு இருப்பது போல் ஆகுமா? ஏதோ இங்கு இருப்பதால் தன் வயதினரோடு பேசிக்கொண்டிருந்து அவர்கள் நாட்களை கடத்தினர்.
இன்று:
இந்த அதிகாலை நேரத்தில் அவர்கள் காத்திருப்பது மாதத்திற்கு ஒரு முறை தொலைபேசியில் ஒலிக்கும் மகன் மற்றும் பேத்தி குரலை கேட்க மட்டுமே.
பேத்தியிடம் செல்லம் கொஞ்சி முடித்து போனை வைத்தபிறகு "பொண்ணை பெத்துருக்கான்னு இளக்காரமா அன்னைக்கு செல்வத்தை சொன்னேன்.ஆனால் இன்னைக்கு அவன் அவன் பொண்ணு,மருமகன்,பேத்தி,பேரன்னு சந்தோசமா அவங்க கூட வாழ்ந்துட்டிருக்கான். பையனை பெத்துருக்கேன்னு திமிரா சுத்திட்ருந்த நான் தான் 'நல்லாயிருக்கீங்களா அப்பா' என என் பையன் கேக்க மாட்டானான்னு ஏங்கிட்ருக்கேன்" என எண்ணி கொண்டிருந்த வேளையில் அவர் மௌனத்தை அவர் மனைவி கலைத்தார்.
“என்னங்க யோசிச்சிடிருக்கிங்க?”
"எனக்கு பொண்ணு பொறந்திருக்கலாமோ என ஏங்கிட்ருக்கேன்” என அவர் நினைத்ததை வெளியிட்டார். அவர் மனைவியின் முகம் ஆச்சரியத்தால் விரிந்தது.
“இக்கதையின் மூலமாக ஆண்கள் அனைவருமே இப்படி என்று கூறவில்லை.வெளிநாட்டு மோகத்தால் தன் பெற்றோரை கவனிக்காதவர்களை மட்டுமே சொல்கிறேன். வயதான காலத்தில் அவர்களை தனிமையில் வாடவிடாதீர்கள்.
பெண் குழந்தைகளை சாபம் என்று கூறி கொண்டிருந்த உலகம், இப்பொழுது அவர்களை வரங்களாக பார்க்க ஆரம்பித்து விட்டனர்.
தாய் தந்தையை கண்ணின் மணியாக பார்த்து கொள்ளும் அனைவருக்கும் இக்கதை சமர்ப்பணம்."
This is entry #03 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest
போட்டி பிரிவு - தலைப்பு சார்ந்த கதை - நலம் நலமறிய ஆவல்
எழுத்தாளர் - கீர்த்தனா
{kunena_discuss:1083}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.