(Reading time: 9 - 18 minutes)

2017 போட்டி சிறுகதை 02 - அன்று வந்ததும் இதே நிலா! – புவனேஸ்வரி கலைசெல்வி

This is entry #02 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - தலைப்பு சார்ந்த கதை - நலம் நலமறிய ஆவல்

எழுத்தாளர் - புவனேஸ்வரி கலைசெல்வி

Moon 

சைமித்ரன்!”

நான்கு வருடங்களுக்கு முன்பு தனது டைரியில்  எழுதி வைத்திருந்த பெயரை வருடித் தந்தாள் தேனருவி. அவளது அனுமதியின்றியே விழிகளிலிருந்து தப்பித்து அவன் பெயரை கட்டி அணைத்துக் கொண்டன கண்ணீர்த்துளிகள்!

எங்கிருந்து வந்ததாம் இந்த கண்ணீர்த்துளிகள் ? இந்த நான்கு வருடங்களில் அனேக தினங்கள் அவள் தனியாகத்தான் இருந்திருக்கிறாள். தனிமையை உணர்தல் என்பது அவளுக்கு ஸ்வாசிப்பதை போல மாறியிருந்தது. தன்னுடன் படித்த தோழிகளில் சிலர் திருமணம் செய்து கொண்டுவிட்டிருந்தனர். சிலர் தாயாகி வாழ்வின் அடுத்த கட்டத்தில் காலடி எடுத்து வைத்தனர்.

ஆனால் இவள் மட்டும் யாரோ, “பவுஸ் பட்டன்” அழுத்தியது போல தனது வாழ்க்கையிலிருந்து முன்னேறாமல் ஸ்தம்பித்து போயிருந்தாள்! முதல் காதல்! அத்தனை எளிதாக மறக்க கூடியதா என்ன ? புரியவில்லை அவளுக்கு! ஒருவேளை, தான் மட்டும்தான் காவியங்களில் வாழும் காதலி போல பத்தாம்பசலித்தனமாய் இருக்கிறோமோ? என்று மீண்டும் கேட்டு கொண்டாள் அவள்.

அவளது கைகளில் இருந்த டைரியை பிடுங்கி மூடி வைத்தாள் சாதனா. தேனருவியுடன் ஒரே வாடகை வீட்டில் குடியிருக்கும் தோழி . ஓரளவிற்கு, அவளைப் பற்றி நன்கு அறிந்தும் வைத்திருப்பவள். அவள் தன் கையில் இருந்து டைரியை பிடுங்கவும் கோபமாய் முறைக்க முயன்று தோற்றுப் போயிருந்தாள் தேனருவி.

“லுக்கு விடாதே தேனு! இன்னைக்கு ஹாஸ்பிட்டலுக்கு வந்த அவன் உன் இசைமித்ரன் தான்னு எப்படி சொல்லுற?” .  அன்று மாலையிலிருந்தே தேனருவி புலம்பியதை வைத்து கேள்வி கேட்டாள் சாதனா.

ஒரு பிரபலமான மருத்துவ மனையில், ரிசப்ஷனிஸ்ட்டாக பணிபுரிகிறாள் தேனருவி. அவளுக்கு எப்போதும் வேலை ஒரே நேரத்தில் இருக்காது. சில நாட்கள் அவள் காலையிலேயே வேலையை தொடங்க வேண்டும். சில நாட்கள் மதிய நேர வேலை.

அன்று மதியம் வேலைக்கு வந்தவள், புதிதாய் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளின் பெயரில் “இசைமித்ரன்” என்று தனது முன்னால் காதலனின் பெயரைப் பார்த்ததும் அதிர்ச்சியாகினாள். நடுங்கும் விரல்களுடன் அவனது விவரங்களைத் தேட, ஏதோ சாலை விபத்தினால் அவன் தற்பொழுது ஐ சீ யூவில் இருப்பது அவளுக்கு தெரிய வந்தது.

அந்த மருத்துவமனையின் விதிமுறைப்படி, யாரும் அவ்வளவு எளிதாக ஐ சீ யூவில் இருக்கும் நோயாளிகளை பார்த்திட முடியாது. அதனால் அவளால் இசைமித்ரனைப் பார்க்க முடியாமல் போனது. மேலும் அன்று மாலைவரை, அவனது உறவினர்களென்று யாருமே அங்கு வரவில்லை!

தேனருவியால் எதுவும் செய்ய முடியவில்லை. இந்த நான்கு வருடங்களில் ஒருமுறைக் கூட அவனை எதிர்ச்சையாய் சந்தித்தது இல்லை. சந்திக்க முற்பட்டதும் இல்லை. அவனைப் பற்றி நினைக்கவே கூடாது என்பதில் அவள் தீர்மானமாய் இருந்தாள். ஆனால் அவளுக்கென ஒரே ஒரு ஆசை இருந்தது. அவனைப் பற்றி ஒரேஒரு தகவல் மட்டும் அவளுக்கு தெரிய வேண்டும் என்று எண்ணினாள் தேனருவி. அது என்னவென்று அவள் அசைப்போடும் முன் அதட்டல் போட்டாள் சாதனா.

“என்னடீ கண்ணை திறந்து வெச்சுக்கிட்டே கனவா? என் கேள்விக்கு நீ இன்னும் பதில் சொல்லல!”

“ப்ச்ச்.. இசைமித்ரன் என்ற பேருல இந்த உலகத்துல எத்தனை பேரு இருந்திட போறாங்க? அப்படியே நிறைய பேரு இருந்தாலும், இந்த ஊரில் அதே பேரில் ஆயிரம் பேரா இருக்க போறாங்க?” என்று சலிப்பாக கேட்டாள் தேனருவி. கொஞ்சம் இடைவெளியிட்டவள்,

“அது மட்டுமில்ல..! அவனுடைய ப்லட் க்ரூப், வயசு எல்லாமே சரியாகத்தான் இருக்கு! எனக்கு தெரியும்!” என்றாள்.

“சரி, அது அவனாகவே இருக்கட்டுமே! அதனால் உனக்கென்ன வந்தது? என்னடீ கரிசனமா?”

“ என்னைப் பார்த்தால் உனக்கு மதர் தெரெசாவோட பிரதிபிம்பம் மாதிரி இருக்கா சாதனா?”

“ அப்போ என்னத்தான் பிரச்சனை உனக்கு? ஆஃப்டரால் (after all) அவன் உன்னுடைய எக்ஸ் தானே? இதுக்கு ஏன் இவ்வளவு ஃபீலிங்?”

“ பீலிங்ன்னு நான் சொன்னேனா?” என்று தேனு கேட்க, அவளது டைரியை சுட்டிக் காட்டிய சாதனா,

“அப்போ இதுக்கு என்ன அர்த்தம்?” என்று கேட்டாள். சலிப்புடன் பெருமூச்சு விட்டாள் தேனருவி. பதில் சொல்வதற்கு கொஞ்சம் எரிச்சலாக இருந்தாலும், மனதில் இருப்பதை தோழியிடம் சொல்லுவதால் தனக்கும் பாரம் குறையலாம் என்று நினைத்தாள் தேனருவி. மேலும், தனது மனவோட்டங்கள் பிறரால் தவறாக கணிக்கப்படுவதை அவள் விரும்பவில்லை.

“ சாது, நான் சொல்லுறது உனக்கு எந்த அளவுக்கு புரியும்னு எனக்கு தெரியல இருந்தாலும் சொல்லுறேன். பொறுமையா கேளு. ஒரு பொண்ணுக்கும் பையனுக்கு மனசு ஒத்து போச்சுன்னா, அடுத்த ஸ்டேஜ்ன்னு காதலில் இறங்கிடுவாங்க. அவங்களுடைய உலகம் சந்தோஷமாய் இருக்கும். அழகாய் இருக்கும்.. நாம சரியானவங்க கிட்ட தான் இருக்கோம்னு பாதுகாப்பு உணர்வு வரும். பெருமிதமாகவும் இருக்கும்!”

“ம்ம்”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.