(Reading time: 9 - 18 minutes)

தே காதலர்கள், ஏதாவது ஒரு காரணத்துக்காக பிரிஞ்சுட்டாங்கன்னா அப்போ அவங்களுடைய உலகம் சோகமாய் இருக்கும். விரக்தி நிறைஞ்சிருக்கும். அதிக கோபமும் வரும். பொதுவாக இந்த காதல் தரும் வலியை தாண்டி போறதுக்காக, நாம ப்ரண்ட்ஸ் கூட அதிக நேரம் செலவளிப்போம், பொழுபோக்குகளுக்கு நேரம் ஒதுக்குவோம், எங்கயாச்சும் தொலைதூர பயணம் போவோம்! சில நேரம், வேறு ஒரு காதலை தேடியும் போவோம்!”

“உண்மைதான்!” என்று ஆமோதித்தாள் சாதனா.

“ ஒரு வலியை மறைக்க இன்னொரு வலியையோ அல்லது சந்தோஷத்தையோ தேடி போறோம். வலின்னு சொல்றது, ஜிம்முக்கு போறது மாதிரி உடல் வலி கொடுக்குற வேலைகளை தேடி செய்யுறதுன்னு சொல்ல வரேன்!” என்று விளக்கியவள்,

“எல்லாருமே, காதல் கொடுத்த வலியை மறைக்க முயற்சி பண்ணுறோமே தவிர மறக்க முயற்சி பண்ணுறதில்லை!”

“ரெண்டுக்கும் என்ன வித்தியாசம் தேனு?”

“ நிறையவே இருக்கு! உண்மையில் அந்த வலியையும் ஏமாற்றத்தையும் மறந்திட்டா,  நம்ம முன்னால் காதலன் அல்லது காதலி மேல கோபமோ வெறுப்போ இருக்காது. எதை மறக்குறோமோ, அதை மன்னிச்சிடுவோம்! ஆனால், காதலைப் பொறுத்தவரை அந்த பெரிய மனசு யாருக்கும் இல்லை! மறக்குறது ஈசியும் இல்லை. அதனாலத்தான் காதல் தரும் வலியை மறைக்கிறோம்!”

“ஹ்ம்ம்”

“இதை நான் நுண்ணுணர்வுகள்ன்னு சொல்லிப்பேன்! சின்ன வலி தானே ? சின்ன எதிர்ப்பாப்பு தானேன்னு மனசுல ஒரு ஓரத்துல சேர்த்து வைக்கிற விஷயங்கள் தான் வன்மமாக மாறும்! எடுத்துக்காட்டுக்கு “முன்னால் காதலர்கள் “ பத்தி நாம பேசுற ஜோக்ஸ் எல்லாத்தையும் எடுத்துக்கோயேன்!

 Nothing Is better than seeing your ex with someone uglier than you!

Your ex asking to be friends after breaking up is like, kidnappers asking to keep in touch after letting you go!

You’re dating my ex? Cool! I’m eating a sandwich.. want those leftovers too?”

“..”

“இந்த மாதிரி கேவலமான ஜோக்ஸ்  நிறைய இருக்கு.! ஒரு விஷயம் யோசிச்சு பாரேன்! பிரியுறதுக்கு முன்னாடி நம்மளோட உலகமாய் உயிராய் இருந்த ஒருத்தரை, பிரிஞ்சதும் இந்த அளவுக்கு ஏன் விமர்சிக்கிறோம்? எந்த முகத்தை ரசிச்சோமோ அதே முகத்தை கேலி பண்ணுறோம்.. எந்த குறைகளை சேர்ந்து சரி பண்ணலாம்ன்னு பேசினோமோ அதே குறைகளை மத்தவங்க கிட்ட சொல்லி சிரிக்கிறோம்!”

“..”

“அடிப்படையில் நாம நல்லவங்களா இருந்தாலுமே, முன்னால் காதலைப் பத்தி பேசும்போது வேற மாதிரி மாறிடுறோம்! அவங்க காதலை இழிவா பேசும்போது, அந்த காதலில் நமக்கும் பங்கு இருந்ததேன்னு யோசிக்கிறது இல்லை! இதுக்கு காரணம் என்ன தெரியுமா? நமக்கு எதையும் மனசார மறக்க தெரியல! மன்னிக்கவும் தெரியல..!”

“ நீ அவனை மன்னிச்சிட்டியா?”

“ மன்னிக்கணும்னு ஆசைப்படுறேன். அதுக்குத்தான் இந்த டைரியை எடுத்தேன்”. ஏதேதோ சித்தாந்தம் பேசும் தோழியை கேள்வியாய் பார்த்தாள் சாதனா.

“ புரியல!”

“ அதாவது சாது.. நானும் மித்ரனும் கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணி பிரியல. எங்க ரெண்டு பேருக்குமே ஒருவித ஈகோ இருந்தது. ஒருத்தரால் இன்னொருத்தரை சரிக்கட்ட முடியாதுன்னு நம்பினோம். அந்த நம்பிக்கையில் எங்களோட காதல் காணாம போச்சு. பிரிஞ்சிடலாம்னு சேர்ந்து முடிவெடுத்து தான் பிரிஞ்சோம். எனக்கு அவன் மேல பெரிய கோபம்ன்னு எதுவும் இல்லை.. ஒவ்வொரு மனுஷங்களுக்கும் ஒவ்வொரு குணம் . எனக்கு பிடிச்ச மாதிரி அவன் இல்லை என்பதுக்காக அவன் மேல நான் ஏன் கோபப்படனும்? அதே நேரம், அவன் விஷயத்தில் எனக்கு ஒரே ஒரு எதிர்ப்பார்ப்பு இருந்தது.!”

“என்ன அது?”

“ கொஞ்ச வருஷம் கழிச்சு அவனை நான் பார்க்கும்போது, அவனுடைய வாழ்க்கையில இன்னொரு பெண் இருக்கணும். அது அவனுடைய மனைவியாக இருந்தாலும் சரி.. காதலியாக இருந்தாலும் சரி. என்னுடைய பிரிவினால், அவன் ஒட்டுமொத்த பெண்களையும் அல்லது காதலையும் வெறுக்க கூடாது. அவன் முன்னேறி என்னை கடந்து போனால்தான் என் மனசுல எந்தவொரு சங்கடமும் இருக்காது. அப்போத்தான் நான் என் வாழ்க்கையைப் பத்தி யோசிக்க முடியும்! நான் அப்போதுதான் எங்களை மன்னிக்க முடியும்.”

“அப்போ எதுக்கு அழுத நீ?” துளைக்கும் பார்வையுடன் கேட்டாள் தேனருவியை!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.