(Reading time: 12 - 24 minutes)

வன் அழைத்ததும் அறைக்குள் வந்தவளை பின்னிருந்து அணைத்தான் அர்னவ். அணைத்தவன், அவளது கண்களை துணிக்கொண்டு மூடினான்.

அவளை கட்டிலில் அமரவைத்தவன்.அவளது கழுத்திலும், கைகளிலும் எதையோ அணிவித்தான். பிறகு, அவனது கண்கட்டை அவிழ்த்து விட்டான்.

கண்ணைத் திறந்தவள், அவன் அணிவிதிருந்த வளையலையும்,ஜெயினையும் பார்த்து மெய்மறந்து விட்டாள்.ஏனென்றால், அது அவள் வடிவமைத்தது.அவனது மற்றும் அவளது முதலெழுத்தையும் கொண்டும் வடிவமைத்தது.

“என்னப் பாக்குற ,நீ இத வரைஞ்ச உடனே,நான் செய்ய சொல்லிட்டேன்.., இது எதுக்குனு பாக்குறியா ,லவர்ஸ் டேக்கு. I love u டீ பொண்டாட்டி…” என்றுக் கூறிக்கொண்டு அவள் இதழ் நோக்கிக் குனிந்தவனை தள்ளிவிட்டாள் பாமா.

“எதுக்குடீ தள்ளிவிடுற..,வலிக்குது டி..,காலையிலிருந்து என்னை பாடப்படித்திட்டு....”

“நான் கொடுத்த கிப்ட் எங்கடா..” அப்பொழுதுதான் அவன் உணர்ந்தான் அவள் தந்த கிப்டை எட்டுகாமல் வந்ததை.(எங்க அத எடுக்குறது ,நீ தானடி காலையிலயிருந்து என்ன கொன்னுட்டு..)

“நீர் நினைத்தால் பெண் நினைத்தால்

கரைகள் யாவும் கரைந்து போக கூடும்”

“சாரி அனும்மா..” என்று அனுபாமாவை பார்த்துக் கூறினான்.தனது காதலி கம் மனைவியிடம்.

“ அது சரி, சார் என்ன நினைச்சா தானா..,அப்டியே விட்டுட்டு போய்ட..”

“இவ்வளவு பெரிய surprise அ  4 வருஷம் கழிச்சு தந்தா...,நம்ம  கல்யாணத்துக்கு அப்புறம் வந்த ஒரு  லவர்ஸ் டேக்காவது விஷ் பண்ணி இருக்கியாடி...”

“கல்யாணத்துக்கு முன்னாடிதான் 5  வருஷம் நான் தானா விஷ் பண்ணேன்..”

“அது...” என்ன சொல்லுவது என்று யோசித்துக்கொண்டு இருந்தான்.வாங்க அந்த கேப்புல நம்ப இவர்களைப்பத்தி பார்த்துட்டு வந்துடலாம்.

அர்னவ்-அனுபாமா ரெண்டுபேரும் கல்லூரிலப் படிக்கும்போது லவ்ல விழுந்து,அதுக்கு அப்புறம் கல்யாணம் பண்ணிகிட்டு வாழ்ந்துக்கிட்டு இருப்பவங்க.

உங்க கெஸ் கரெக்ட் ,காலையில் அர்னவுக்கு விஷ் பண்ணதும்,அப்புறம் கிப்ட் கொடுத்ததும் இதே அனு என்ற அனுபாமா தாங்க.

இவங்க கல்யாணம் பண்றதுக்கு முன்பு அர்னவ் அவன் வாய வச்சிகிட்டு சும்மா இல்லாம ஒண்ணு சொல்லிட்டான்.

அதாவது அவன் அனுன்னு எப்பக் கூப்பிடுறனோ,அப்ப இவன் லவ் பண்றப்போ எப்படி அவளோட குணம் இருந்ததோ அப்படியே இருக்குமா,அவன் பாமானு கூப்பிட்டா அது அவன் லவ் பண்ணப்ப பார்த்த குணம் இருந்த அனு இல்லையாம். இதுதாங்க நம்ப குழபத்துக்கு காரணம்.

“ டேய் , என்னடா யோசிக்குற...”

“ அத விடுடீ, இப்ப என்ன டா போட்டுக்கூப்பிட..”

“அதுக்கு இப்ப என்னடா..”

“நீ என்ன அப்படி கூப்பிட்டு  எவ்வளவு நாள் ஆகிடுச்சு தெரியுமா...மா,எதுக்குடி இப்பலாம் அப்படி கூப்பிடறது இல்ல”

“ அத மறக்க முடியுமா,உங்க பெரியம்மா என்னோட சீமந்ததுக்கு வந்தப்ப அவங்க முன்னாடி நான் உன்ன டா போட்டு கூப்பிட்டு நான் பட்ட பாடு போதுமப்பா சாமி..”

“நீ எதுக்கு அவங்க முன்னாடி அப்படி கூப்பிட்ட..”

“ உன்ன எப்பொழுதும் அப்படி கூப்பிடறதும் ,அப்படியே வந்துச்சு..அதான் அதுக்கு அப்புறம் நான் உன்ன அப்படி கூப்பிடறது இல்ல..,நீ என்ன கடந்த 3 வருஷமா அனுன்னு கூப்பிடறது இல்ல...”

“ நீ  என்ன டா போட்டுக் கூப்பிடாததும் நானும்  உன்ன என் லவரோட பெயர் சொல்லிக் கூப்பிடுல..,ஆனா,காலையில நான் எதிர் பார்கவே இல்லடி அப்படியே இன்னைக்கி என்னோட பழைய அனுவப் பார்த்தேன்...”

“ உன்கூட முன்ன மாதிரி டைம் ஸ்பென் பண்ண முடியல ,அதான் ஒரு இன்ப அதிர்ச்சி தரலானு, நீயும், நாலு வருஷமா எனக்கு லவர்ஸ்டேக்கு விஷ் பண்ணல,அதான்..”

அவளை அமர்த்தி அவளது மடியில் படுத்துக்கொண்டான் அர்னவ்.

“ இப்படிலாம், இப்ப உன்னோட மடியில படுக்க முடியறது இல்ல...”

“உன்ன யாரு படுக்க வேணான்னு சொன்னா..”

“எங்க உன்னோட பசங்க என்ன படுக்க விட்டதானா..”

“ அதுக்கு என்ன பண்ண முடியும்...”என்றுக் கூறிக்கொண்டே அவனது மூக்கை பிடித்து இழுத்தாள் அனு.

“ஆ..,வலிக்குது விடுடி..,நான் என்னோட அனுவ இழந்துட்டனு நினைச்சேன்...”

“ டேய், இது தண்டா நம்ப பண்ற தப்பு...,நீ என்ன எப்படி கம்பேர் பண்ணி பாத்தனு சொன்னாங்க..”

“சொல்லிடாங்களா...,ஏன் பாஸ் இப்படி பண்ணிங்க”

“ டேய்,அவங்கள  திட்டாத, என்னமோ நான் உன்ன பைக் ஓட்டக்கூடாதுனு சொன்னா மாதிரி சொல்லியிருக்க..”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.