(Reading time: 12 - 24 minutes)

வள் பேசி முடித்தாள் போதும்,மறுபக்கம்  என்ன சொல்லுவாங்கன்னு கேக்க மாட்டா. அவ வேற கூப்பிடா போனும் இல்லான அவ்வளவுதான்.

மீண்டும் பழயை நினைவுகளுக்கு சென்றான். இதுபோல் தான், ஒருமுறை அவள் சொல்லியும் கேட்காமல், அவள் பிறந்தநாளுக்கு அவன் இல்லாமல் ஊருக்கு கிளம்பிவிட்டான்.

அதனால், அவனை அவன் பின்னே துரத்திச்சென்றவள். அவனது பேருந்தை நிறுத்தி தனது பிறந்தநாளைக் கொண்டடினாள்.

இன்னைக்கு போலன்னா அவ்வளவுதான்.

பல யோசனைகளில் இருந்தவன்.மணி4.00யைத் தொட்டதும்.அவள் சொன்ன இட்டதிற்கு செல்ல தயாரானான்.

போகும் போதெல்லாம் அவன் தன் மனைவியையும், காதலியையும் அவன் பல விஷயங்களில் முரண்படுவதை உணர்ந்தான்.(சரிங்க..,தயவுசெய்து இதுவரைக்கும் என் மைன்ட்ல ஒடுனத என்னோட மனைவிக்கிட்ட..,சொல்லிடாதிங்க....)

ஒரு வழியாக அவள் சொன்ன hotelக்கு சென்றான்.அங்கு அவள் அவன் தன் முதல் மாத சம்பளத்தில் வாங்கி தந்த பிங்க் கலர் புடவையில் தேவதையாக இருந்தாள்.

அப்புறம் சொல்லவா வேணும், சாதாரணமாகவே நம்ப பசங்க பே....னு  பார்ப்பாங்க. இதுல அவனோட லவர்,அவன் வாங்கி தந்த புடவை சொல்லவா வேணும்...

“வண்ண வண்ண பெண்ணே வட்டமிடும் நதியே

 வளைவுகள் அழகு,உங்கள் வளைவுகள் அழகு...,

ஹோ....,மெல்லிசைகள் படித்தல்  மேடு பள்ளம் மறைத்தல்

நதிகளின் குணமே அது நங்கையின் குணமே...”

பல நிமிடம் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் அர்னவ்.

அனு தொண்டையை செருமியவுடன் நிஜ உலகத்திற்கு வந்தான்.

“ஹாய், அர்னவ்...,வா உட்கார்..”

அவளுக்கு  எதிரில் அமர்ந்தான்.

“தென்..,உன்னோட மனைவி எப்படி இருகாங்க....”

அவள் கேட்டவுடன் சிரித்தவன்,பிறகு தன்னை சமாளித்துக்கொண்டு பதில் கூறினான்.

“ ம், நல்லா இருகாங்க...,எதுக்கு வர சொன்னா..”

“ என்னடா இப்படி சொல்லுற...,நான்தான் சொன்னனே...,இன்னைக்கு லவர்ஸ் டே., 9 years….”

“அதுக்கு இப்ப என்னப் பண்ணனும்...”

“என்னப்பா சொல்லுற...,சரி  இது என்னோட கிப்ட் ..” என்றுக் கூறி ,  ஒரு பார்சலை எடுத்துக் கொண்டு அவன் அருகில் வந்தாள்.

அவள் அருகில் வந்ததும் எழுந்தான் அர்னவ்.அவன் முன்னே ஒரு காலால் மண்டியிட்டவள், அவன் கைகளில் அந்த பார்சலை வைத்துவிட்டு ,” ஐ லவ் யு அர்னவ்...”என்று கூறி அவன்  அவளை  பார்க்கும்பொழுதே  அவனது கன்னத்தில் ஒரு முத்தத்தை வைத்துவிட்டு தனது இருக்கையில் சென்று அமர்ந்துக் கொண்டாள்.

இவள் தான் அனு,எனது காதலி ,என்று அவனது மனது சொல்லியது.யார் இருப்பதையும் யோசிக்கமாட்டள். தனக்கு சரியெனப் பட்டதை செய்துவிடுவாள். இப்பொழுது கூட அங்கு இருந்த யாரையும் பொருட்படுத்தாது,அவளுக்கு சரியெனப் படுவதை செய்வாள்.ஆனால்...

அடுத்த நிமிடம் அவன் அந்த இடத்தை விட்டு வெளியேறியிருந்தான். அவனது, காதலி கூப்பிடதைக் கூட காதில் வாங்காமல்..

“தாயருகே சேயாகி தலைவனிடம் பாயாகி

சேயருகே தாயாகும் பெண்ணே

பூங்குயிலேபூங்குயிலே பெண்ணும் ஆறும்

வடிவம் மாறக்கூடும்”

அர்னவ் சென்றது,ஒரு நகைக்கடைக்கு.அங்கிருந்து நேராக வீட்டுக்கு சென்றான்.

( சாரி அர்னவ்,நீங்க சொன்னதயெல்லாம் நான் போட்டுக் கொடுத்துட்டேன்...,bye..)

வீட்டுகுள்..,அவன் செல்லும்பொழுதே வீடு அமைதியாக இருந்தது. அவன் காலிங் பெல்லை அழுத்தவும் அவனது மனைவி பாமா வந்துக் கதவைத் திறந்தாள்.

அப்பொழுதுதான்  குளித்துவிட்டு அவளுக்கு பிடித்த லவேண்டர்  நிற டிசைனர்  புடவையில் அழகாக இருந்தாள் பாமா.

அவளை மெய்மறந்து பார்த்துக்கொண்டு இருந்தான் அர்னவ்.

(நீங்க என்ன நினைகிறிங்கனு புரியுது, லவரையும் சைட் அடிக்குறான், மனைவியையும் சைட் அடிக்குறான் இவன் நல்லவனா, இல்ல கெட்டவனா.. அதான, கொஞ்சம் நேரம் என்ன நடக்குதுன்னு  பார்போம்,அப்புறம் உங்க டவுட்ட கேக்கலாம்.)

என்ன என்று கண்களால் அவனிடம் கேட்டாள் பாமா.

கண்களால் ஒன்றும் இல்லை என்றுக் கூறியவன் “ எங்க ஆதர்ஷும், அனிருனியாவும் “ என்றுக் கேட்டான்.

“அவங்கள அம்மா வந்து அழைச்சுட்டுப் போய்ட்டாங்க..”

“ஓ...,சரி நான் fresh ஆகிட்டு வரேன்” என்றுக் கூறிக்கொண்டு தங்கள் அறைக்குச் சென்றான்.

அவன் சென்ற 20 நிமிடம் கழித்து,

“ பாமா....”என்றுக் கூபிட்டான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.