(Reading time: 16 - 32 minutes)

டிசம்பர் 31 , 2016  நேரம்: 17:30

ஹெர்குலஸ் லைட்ஹவுஸ்

கலிசியா, ஸ்பெயின்

ஸ்மரணையே இல்லாமல் மழையில் நனைத்து கொண்டு குளிரில் வெடவெடத்துக் கொண்டிருந்தவள் மீது கனமான ஓவர்கோட் போர்த்தப்பட திரும்பி நோக்கியவள் அப்படியே திகைத்து நின்றாள்.

“யாரிவன் குடை பிடித்துக் கொண்டு நிற்பவன். இந்த உயரம் இந்த தேஜஸ்” மனதில் தோன்றிய எண்ணங்களை முகம் பிரதிபலித்தது.

“ஹல்லோ நான் விஸ்வாமித்ரன்” தமிழில் அவன் பேசவும் இவளுக்குள் மகிழ்ச்சியும் நிம்மதியும் கலந்த பிரவாகம்.

ஏனோ அவனை பார்த்ததும் ஓர் நம்பிக்கை சுடர் விடுகிறது.

“ஷால் வி கோ டு எ வார்ம் பிளேஸ். நீங்க முழுசா நனைந்துடீங்க” சிநேகமாய் சிரித்தன அவன் விழிகள். அதில் ஒரு அதீத பிரகாசம் தென்பட்டது அவளுக்கு.

அருகில் இருந்த ஒரு காபி ஷாப்பில் சூடாக காபி பருகிக் கொண்டே அவன் உரையாடலை தொடர்ந்தான்.

“உங்க புக் படிச்சு நான் ரொம்ப இன்ஸ்பைர் ஆனேன். உங்கள மீட் செய்யலாம்னு தான் ஸ்பெயின் வந்தேன்”

“அப்படியா” ப்ரகதி முகத்தில் வியப்பு.

“வி.எம் க்ரூப்ஸ் கேள்விப்பட்டிருப்பீங்களே”

“ஐ ஆம் சாரி”

“டோன்ட் பீ. ப்ரசியஸ் ஸ்டோன்ஸ் (precious stones)  பிஸ்னஸ். இப்போ நேச்சுரல் பவர் ப்ராஜெக்ட்ஸ் ஸ்டார்ட் பண்ணிருக்கோம்” அவன் இயற்கை சக்தி பற்றி சொல்லவும் ஆர்வமானாள்.

“உங்க புக்ல இன்ஸ்பைர் ஆகி தான் இதை ஆரம்பிச்சேன். ஆக்சுவலி மணி இஸ் சர்ப்லஸ். அதை நல்ல வழில உபயோகம் செய்ய விரும்புறேன். உங்க ஹெல்ப் கிடைக்குமா”

கரும்பு தின்ன கூலியா... இதை விட வேறு என்ன வேண்டும் அவளுக்கு. கடவுள் இருக்கிறார் போலும். இவளது குரல் கேட்டு உதவிக்கு உடனேயே ஆள் அனுப்பி விட்டாரே..

நட்புடன் அவன் கரம் நீட்ட அதை உடும்புப் பிடியாக பற்றிக் கொண்டாள்.

தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் (The Wall Street Journal)  ஜூலை 2017

‘வி.எம் க்ரூப் ஆப் நேச்சுரல் பவர்’ பல நாடுகளில் தனது தொழிலை பரப்பி சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் அந்நிறுவனம் மோட்டார் உற்பத்தியிலும் காலடி பதிக்க உள்ளது. முழுக்க முழுக்க இயற்கை சக்தியினால் இயக்கப்படும் உயர்ரக தொழில்நுட்ப கார்கள் மற்றும் பைக்குகளை முதல் கட்டமாக அறிமுகப் படுத்தி இருக்கிறது. அதன் பொது மேலாளர் தெரிவிக்கையில் விரைவில் சூரிய ஒளி மற்றும் காற்றின் சக்தியால் இயங்கும் அதிவேக ரயில்கள் மற்றும் விமானங்களும் அறிமுகம் செய்ய உள்ளதாம்.

இதனால் காற்று மாசு பெருமளவு கட்டுக்குள் வரும் என்று காலநிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

குறைந்த செலவிலான தொழில் நுட்பம் என்று பல நாடுகள் வரவேற்றுள்ளன.

சி.என்.என் நியுஸ் (C.N.N. NEWS ) ஜனவரி 2018

வி.எம் க்ரூப்ஸ் “ரிவைவல் ஆப் வாட்டர்” பெருமளவில் வெற்றிப் பெற்றுள்ளது. கடல் நீரை குடிநீராக்கும் குறைந்த செலவிலான தொழில்நுட்பம் தண்ணீர் பிரச்சனை மட்டுமன்றி வறட்சியால் பாதிக்கப்பட்ட விவாசய நிலங்கள் செழுமை அடையும் முயற்சியாகவும் வெற்றி கண்டுள்ளது.

இதனால் பல பின் தங்கிய நாடுகளின் பசி பட்டினி விரைவில் தீர்ந்து வளர்ச்சி பெரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

வி.எம் க்ரூப்ஸ் ஆப் நேச்சுரல் பார்மிங்( Natural Farming) , வி எம் க்ரூப்ஸ் ஆப் நேச்சுரல் பேப்ரிக்ஸ் ( Natural Fabrics), வி எம் க்ரூப்ஸ் ஆப் நேச்சுரல் புட் ப்ராசசிங்( Food Processing), வி.எம் க்ரூப்ஸ் ஆப் வேஸ்ட் ரிசைகில்( Waste Recycle) ……நீண்டு கொண்டிருந்தது இயற்கை வழிப் பயணம்.

.நா சபை 2019

லாப நோக்கம் இன்றி இயற்கை வழி தொழில் நுட்பங்களை அறிமுகம் செய்து வெற்றி கண்ட  வி.எம் க்ரூப்ஸ்க்கு ஐ.நா சபை நன்றி தெரிவித்துக் கொள்கிறது. இதனால் இயற்கை பேரழிவில் இருந்து காக்கப்பட்டது மட்டும் இல்லாமல் எல்லா நாடுகளும் வளர்ச்சி பாதையில் தடையின்றி செல்ல ஏதுவாக அமைந்தது  குறிப்பிடத்தக்கது.

யாரிந்த வி.எம் ???

ஹூ இஸ் தி மாஸ்டர் மைன்ட்???

2018 , 2019 ஆண்டுகளின் பத்திரிக்கைகள் செய்தி சேனல்களில் எல்லாம் இதே விவாதம் தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.