(Reading time: 16 - 32 minutes)

ன் எண்ண அலைகள் மூலம் மற்ற மனிதர்களின் தொடர்ப்பை சுலபத்தில் ஏற்படுத்திக் கொள்ள முடியும் என்ற காரணத்தினாலேயே உன்னை அணுகினேன்.

ஆனால் எனக்கு தெரியாமல் போனது பேபி... மனிதனுக்குள் அன்பு, பாசம், நேசம், காதல் போன்ற அழகிய விஷயங்கள் இருக்கின்றன என்று.

இவை இருந்தும் ஏன் மனிதன் அழிவை நோக்கி சென்றான்...இன்று வரை எனக்கு புரியாத புதிர் தான்.

காதல் கொண்டு விட்டேன் உன் மீது மனிதனாய்.... எனது கிரகத்திற்கு நான் திரும்ப வேண்டிய நேரம் முன்பே நிர்ணயிக்கபட்ட ஒன்று. நான் வந்த காரியமும் ஓரளவு வேரூன்றி விட்டது. இனி என்னால் இங்கு இருக்க இயலாது.

என் சகாக்கள் எல்லோரும் இன்னும் சில நிமடங்களில் இங்கே வந்து விடுவர். அவர்களோடு நானும் சேர்ந்து உன்னை விட்டு சென்று விடுவேன்.

ஏன் அவசர அவசரமாய் டோக்கியோவில் இருந்து ஹவாய் வந்தோம் என்று கேட்டாயே. காலம் எனும் மாயையை பயன்படுத்தி உன்னோடு இன்னும் சிறிது நேரம் செலவழிக்க ஆசை.

காலம் முழுதும் உன்னோடு இருக்கவே எனக்கு பேராசை...மனிதனாக இருக்கிறேன் அல்லவா. ஆசை என்னையும் விட்டு வைக்கவில்லை.

விஸ்வம் என்றால் உலகம் மித்ரன் என்றால் நண்பன் உங்கள் சமஸ்க்ருத மொழியில். அதனாலே நான் விஸ்வா மித்ரன் என்று பெயர் சூட்டிக் கொண்டேன்.

தேவை எனும் போது பூமியின்  நலம் பேண நாங்கள் ஆயத்தமாக இருப்போம்.

தன் மார்பில் சாய்ந்து உறங்கி கொண்டிருந்தவளிடம் எண்ணங்கள் வழியே சுயவிளக்கம் அளித்துக் கொண்டிருந்தான்.

இவனது எண்ண ஓட்டம் அறிந்து கொள்ள அவள் ஒன்றும் “வி” கிரகவாசி இல்லையே..

டிசம்பர் 31 ,2019 நேரம்:23:55

ஹவாய் தீவுகள்

ன் எண்ணங்களை அறியாமல் போக நாங்கள் பூமி வாசிகள் அல்லவே” சகாக்கள் அவன் பார்வை வட்டத்தில் விழ கையணைப்பில் இருந்த ப்ரகதியை இறுக அணைத்தான்.

“விருப்பம் இருந்தால் மனிதனாக பூமியிலேயே தங்கி விடலாம். ஆனால் உனது “வி” கிரக சக்திகளை நீ துறக்க நேரிடும்”

“வி” கிரக அரசி இவனிடம் தொடர்பு கொள்ளவும் விஸ்வாமித்ரனின் மனித மனம் பேரானந்தம் கொண்டது.

அவன் கிரக வாசிகளோடு அவனது சக்திகளும் பல ஒலி ஆண்டுகள் பயணிக்க விடை பெற்றன.

பூமியின் நலமறிய வந்த வேற்று கிரகவாசி மனிதனாக இருக்க விருப்பம் கொண்டு புது ஜனனம் கொண்டான்.

தன் காதல் தேவதையோடு  புது வருடத்தை எதிர்நோக்கி இருந்தான் ப்ரகதியின் ‘ஸ்வாமி’ விஸ்வாமித்ரன்.       

னவரி 1 ,2017 நேரம்:00:00

புது தில்லி

நலம் நலமறிய ஆவல்...உன் நலம் நலமறிய ஆவல்

“இந்த காலர் டோன்க்கு ஒன்னும் குறைச்சல் இல்லை”

“என்ன எடுக்க மாட்டேன்குறா”

“தூங்கிட்டாளோ”

“கொரியன் சீரியல் பார்த்துட்டு இருப்பா”

“டைம் வேற போயிட்டு இருக்கே”

“நாம எல்லோரும் லைன்ல வந்துட்டோம்...ஸெல்ப் டப்பா பிக் அப் தி கால்”

மொபைல் அடித்துக் கொண்டிருக்க சட்டென்று விழித்தேன்...

“ஹல்லோ”

“ஹாபி நியு இயர்” கன்பரன்ஸ் காலில் தோழிகள் அனைவரும் ஒன்று கூடி ஒரே நேரத்தில் சொல்லவும் நானும் சேர்ந்து தன்னிச்சையாக சொன்னேன்.

“ஐயோ அப்போ எல்லாம் கனவா” நான் சொல்லவும் ஆளாளுக்கு ஆரம்பித்து விட்டார்கள்.

“என்ன கனவு”

“தூங்கிட்டு இருந்தியா கும்பகர்ணி”

“யார் வந்தாங்க கனவுல”

“கனவு நியாபகம் இருக்கா”

“ஹே சொல்லு சொல்லு நியு இயர்ல இன்ட்ரஸ்டிங்கா கதை கேப்போம்”

“நான் ஸ்டார்ட் செய்து தரேன்...ஒரு ஊர்ல ஒரு...”

“இருங்க இருங்க நானே சொல்றேன். சீன் பை சீன் அப்படியே நியாபகம் இருக்கு”

டிசம்பர் 31 ,2019 நேரம்:15:30

டோக்யோ, ஜப்பான்.

டோக்யோ நகரத்தின் சாலைகளில் அதிவேகமாக அந்தக் கருப்பு நிற கார் சீறிப் பாய்ந்து  கொண்டிருந்தது.......

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். பூமியின் நலம் பேண இயற்கையை காக்க இந்த புதிய ஆண்டில் உறுதி கொள்வோம்

This is entry #39 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - தலைப்பு சார்ந்த கதை - நலம் நலமறிய ஆவல்

எழுத்தாளர் - மது

{kunena_discuss:1083}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.