(Reading time: 13 - 25 minutes)

2017 போட்டி சிறுகதை 41 - எந்தன் வாழ்க்கையின் அர்த்தம் சொன்ன மகளே ! – புவனேஸ்வரி கலைசெல்வி

This is entry #41 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - சூழ்நிலை கதை - கதை தொடக்கத்தில் இருந்து தொடரவும்...

எழுத்தாளர் - புவனேஸ்வரி கலைசெல்வி

 father Daughter

ழைய மாணவர்கள் தினத்தை ஆர்ப்பாட்டத்துடன் அனுபவித்துக் கொண்டிருந்தவர்களிடையே திடீரென ஒரு அமைதி… அந்த விசாலமான அறையின் வாசலின் நின்ற உருவத்தின் வசீகரமும், கம்பீரமும் அவர்கள் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்திருந்தது.. மெல்ல அமைதியை கிழித்துக் கொண்டு ஒரு குரல் ஒலித்தது… “இது யாருன்னு தெரியலையா? எண்ணெய் வச்சு சப்புன்னு வாரின முடியோட, நீல மூக்கோட பக்கா கிராமத்தானாக இருப்பாரே, விசித்திரமைந்தன்.. சா…ர்… டா” என்றான் கூட்டத்தில் ஒருவன். அவனுடன் சேர்ந்து நண்பர்கள் அனைவருமே கோரசாய் அந்த மேடையைப் பார்த்தனர்.

அந்த தனியார் கல்லூரியில் மாணவர் தினத்தின் சிறப்பு பிரமுகர் என்ற இடத்தில், திரு. விசித்திரமைந்தன் என்று பெயரிடப்பட்டு இருந்தது. “ நான்தான் சொன்னேன்ல அது ராகமதியின் அப்பாவோட பேருன்னு யாராச்சும் நம்புனீங்களா?” என்று கூட்டத்தில் ஒரு இளைஞன் கேட்க, அவன் அருகில் இருந்த இன்னொருவனோ,

“டேய் அவரெல்லாம் சீவ் கெஸ்ட்டுன்னு சொன்னா நம்புற மாதிரியா இருந்துச்சு ? ஆனா என்னடா இது ஆளே மாறிட்டாரு !” என்று வியப்பாய் கேட்டான். இவர்களின் பேச்சை எல்லாம் கூட்டத்தில் ஒருத்தியாய் நின்றுக் கொண்டு கேட்டிருந்த ராகமதிக்கு, தன்மேல் யாரோ பூக்கூடையை கவிழ்த்தது போல இருந்தது.

“எங்கிருந்து வந்ததாம் இந்த சார் என்ற மரியாதை?” அவளே உள்ளுக்குள் கேட்டுக் கொண்டாள். கல்லூரி வாழ்க்கை முடிந்து போன இந்த ஐந்து வருட வாழ்க்கையில், தன்னுடன் படித்த நண்பர்களுக்கு அறிவு முதிர்ச்சி ஏற்பட்டு விட்டதா? அல்லது தன் கண்ணெதிரில் ஸ்டைலாய் நடந்து வரும் தந்தையின் மெருகேற்றப்பட்ட தனித்துவமா? எது இந்த மாற்றத்திற்கு காரணம்? என்று ஆராய்வதை விடுத்து, தனது தந்தையை ஆராய்ந்தாள் ராகமதி.

இதே தந்தை, ஒன்பது வருடங்களுக்கு முன்பு இந்த காலேஜிற்கு முதல் தடவை வந்தப்போது அவர் சந்தித்த கேலியும் கிண்டலும் அவளுக்கு ஞாபகம் வந்தது. அன்றும் இன்றும் விசித்திரமைந்தனின் தோற்றத்தில் மிகப்பெரிய மாற்றம் எழுந்திவிடவில்லை! அதே கதர் வேஷ்டி சட்டைத்தான்! இந்த முறை நரைத்த தலைமுடிக்கு கருப்புச்சாயம் பூசவில்லை. கண்பார்வைக்காக ஒரு மூக்கு கண்ணாடி, இதை எல்லாம் தூக்கி சாப்பிட்டுவிடும் அக்மார்க் புன்னகையும், புன்னகையின் பின் பிரதிபலிக்கும் நிமிர்வும்தான் அவரது மாற்றம்!

“ராகமதியின் உயிர்த் தோழர்கள்” என்று சொல்லிக் கொள்ள சில பேர் இருந்தனர். அவர்கள், யாருக்கும் காத்திருக்காமல் “அப்பா” என்றபடி ஓடி வந்து விசித்திரமைந்தனை கட்டிக் கொண்டனர். மிகப் பொறுமையாய் ஒவ்வொருவருக்கும் புன்னகையுடன் பதில் அளித்து கொண்டிருந்த தந்தையை அகக்கண்ணில் படமெடுத்துக் கொண்டு ஓர் ஓரமாய் நின்றாள் ராகமதி.

அவர்களிடம் பேசிக் கொண்டே திரும்பிய விசித்திரமைந்தனின் இரு விழிகளும் ராகமதியின் விழிகளுடன் உரையாடிட, ஆனந்த கண்ணீருடன் பெருவிரலை நீட்டி “ சூப்பர் பா” என்றாள் அவரின் அன்பு மகள். மகளிடம் ஸ்டைலாய் சமிக்ஞை செய்துவிட்டு அவர் அந்த மேடையில் ஏறிட, ராகமதிக்கு பழசெல்லாம் மின்னல் போல கண்களில் தோன்றி மறைந்தது.

(ராகமதியின் வேகத்தை மிஞ்சுவது கஷ்டம்தான்! அதனால் நாம பொறுமையாகவே நடந்தது என்னனு பார்ப்போம்!)

ராகமதி, தாயில்லாமல் வளர்ந்த பெண் என்ற குறையே பிறருக்கு தெரியாத அளவிற்கு அவளது தந்தை விசித்திரமைந்தனால் வளர்க்கப்பட்டவள். அதிபுத்திசாலி, பொறுப்பான மகள் இதையெல்லாம் தாண்டி தந்தைக்காக எதையும் செய்யும் தைரியமான பெண்.

சொன்னதுமே அனைவருக்கும் பரிட்சயமாகாத ஒரு குக்கிராமத்தில் பிறந்தவள் அவள். எனினும், தனது கடும் உழைப்பினால் மகளை நன்கு படிக்க வைத்தார் அவர்.

செல்வந்தர்களின் பிள்ளைகள் படிக்கும் காலேஜில் பெரும்பாடு பட்டு, தன் மகளையும் சேர்த்துவிட்டார் விசித்திரமைந்தன். “ அப்பா, அப்பா” என்று சிறுகூட்டுக்குள் வளர்ந்தவள் ஹாஸ்டல் வாழ்க்கைக்கு பழகிக் கொள்ள சிரமப்பட்டாள்.

ஆனால் நட்பு ரீதியில் ராகமதிக்கு எந்தவொரு சிரமமும் எழவில்லை! காரணம், அவளது புத்திக்கூர்மையும் மாசற்ற அழகும்தான்! ராகமதி, தன் பெயரில் கொண்டிருக்கும் மதியை விட அழகானவள்.

“உனக்கெல்லாம் பிம்பல்ஸே வராதா டீ?” . ராகமதியின் கன்னத்தை வருடிக் கொண்டே சக அறை தோழி கேட்கும்போது சிரித்து வைப்பாள் ராகமதி. அவள் காலேஜில் நடந்து சென்றாலே,

உன்னை வெள்ளாவி வெச்சுத்தான் வெளுத்தாங்களா?

இல்ல வெயிலுக்கு காட்டாமல் வளர்த்தாங்களா?” என்று சில ஆண் மாணவர்கள் கோரசாய் பாடுவார்கள். ராகமதியைப் பொறுத்தமட்டிலும், இது அவளுக்கு சுகமும் இல்லை சுமையும் இல்லை ! அவளது அகராதியில் அழகு என்பதற்கு அர்த்தம் அவளது தந்தை தான்! தந்தையிடம் உள்ள உழைப்பும், ஒழுக்கமும் தான் அழகு என்பது அவளது கருத்து.

அதனாலேயே இப்படிப்பட்ட பாராட்டுகளையும் பொறாமைகளையும் எளிதாக கடந்து விட்டிருந்தாள் ராகமதி. வெளுத்ததெல்லாம் பால், தன்னோடு பழகுபவர்கள் அனைவருமே சிறந்தவர்கள் என்று ராகமதி நினைத்துக் கொண்டிருந்த போதுதான் அந்த சம்பவம் நடந்தது.

“யாருடா இது ? நம்ம காலேஜ் பியூன்கூட பார்க்குற மாதிரி இருப்பான்!”

“ஆளையும் முடியையும் பாரேன்!”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.