(Reading time: 13 - 25 minutes)

ந்த புத்தகத்தைப் பற்றி  பகிர்ந்து கொள்ளவும், ராகமதியின் நண்பர்களை காணவும் தான் அங்கு வந்தார் விசித்திரமைந்தன். செழுமையான தமிழிலும், பின் சரளமான ஆங்கிலத்திலும் தன் உரையை பேசி முடித்த தந்தையை விழி நீர் நிறைய ரசித்தாள் ராகமதி.

“என்னுடைய எல்லா புகழுக்கும் காரணமாக இருக்கும் என் மகளுக்கு இந்த பாட்டு!” என்று கூறிய விசித்திரமைந்தன் ராகமதிக்காக அந்த பாடலைப் பாடினார்.

எந்தன் வாழ்க்கையின் அர்த்தம் சொல்ல

பூக்களிம் வண்ணம் கொண்டு

பிறந்த மகளே என் மகளே!

நான் வாழ்ந்தது கொஞ்சம், அந்த

வாழ்க்கையில் வந்து உதித்து

உயிரில் கலந்தாய் என் உயிரே!”

மேடை இறங்கி வந்த ராகமதியின் தந்தையை சூழ்ந்து கொண்டனர் அனைவரும். அவரை கேலி பேசிய அதே மாணவன்,

“என்னை மன்னிச்சிருங்க அங்கிள்.. உண்மையான அழகு என்பது திறமைதான்னு நிரூபிச்சுட்டீங்க.. உங்க முன்னாடி நிற்கவே கூச்சமா இருக்கு.. அந்த வயசுல ஏதோ முட்டாள் தனமா பேசிட்டேன்!” என்று தலைக் குனிந்தான். விசித்திரமைந்தனை ஓடி வந்து கட்டிக் கொண்டாள் ராகமதி.

“ஐ லவ் யூப்பா.. ஐ லவ் யூ சோ மச்..” என்றாள்.

“ஐ லவ் யூ பாப்பா..” என்றவர், “ இந்த பையனை என்ன பண்ணலாம்?” என்று கண்களில் சிரிப்புடன் கேட்டார் .

“ அப்பா, தவறு பண்ணுறதை விட பெரிய தப்பு, தன்னுடைய தவறை உணராமல் இருக்குறதுதான்.. அவன் மன்னிப்பு கேட்டுட்டான்ல?மன்னிச்சிரலாம்”என்றாள். மகளைப் பெருமையாய் பார்த்தபடி அந்த பையனின் தோளில் கை வைத்து ஆதரவாய் தட்டிக் கொடுத்தார் விசித்திரமைந்தன். அன்றைய நாள் மிகவும் கலகலப்பாக கழிந்தது. ராகமதியின் தோளில் கைப்போட்டு கொண்டு மெதுவாய் நடந்து கொண்டிருந்தார் விசித்திரமைந்தன்.

“உன் காலேஜ் எனக்குமே நிறைய பாடம் சொல்லி கொடுத்துருக்கு பாப்பா..”

“ஹ்ம்ம்.. நீங்க சந்தோஷமா இருக்கீங்களாப்பா?”

“எனக்கென்னம்மா? ராஜா மாதிரி இருக்கேன்மா! அடுத்து உன் கல்யாணம்தான்! எந்த மாதிரி மாப்பிள்ளை பார்க்கட்டும்?” என்று கேட்டார் அவர்.

“ எங்கப்பா மாதிரி அழகான பையன் வேணும்பா”

“ஓஹோ அன்னைக்கு பார்த்தோமே Twilight படம், அதுல வர்ற  Edward Cullen மாதிரியா?” என்று வசீகரமாய் சிரித்தார் அவர்.

“அப்பா வர வர உங்க செல்ப் டப்பா தாங்கல!” என்று மலர்ந்து சிரித்தாள் ராகமதி. மகளுடன் அந்த தந்தையும் மலர்ந்து சிரிக்க, நாமும் அதே சிரிப்புடன் டாட்டா சொல்லிப்போம்.

ஹாய் ப்ரண்ட்ஸ்! எனக்கு அப்பா அம்மாவை படிக்க வைக்கணும்னு ஆசை நிறையவே இருக்கு. அதை இந்த கதை மூலமாக சொன்னதில் சந்தோஷம். இந்த கதையை பெர்சனலி நான் என் அப்பா அம்மாவுக்கு டெடிகேட் பண்ணுறேன்.

 

This is entry #41 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - சூழ்நிலை கதை - கதை தொடக்கத்தில் இருந்து தொடரவும்...

எழுத்தாளர் - புவனேஸ்வரி கலைசெல்வி

{kunena_discuss:1083}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.