(Reading time: 22 - 44 minutes)

2017 போட்டி சிறுகதை 42 - புது உறவு - எஸ்.ஐஸ்வர்யா

This is entry #42 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - கரு சார்ந்த கதை - காதல் / திருமண வாழ்க்கை

எழுத்தாளர் - எஸ்.ஐஸ்வர்யா

Marriage

சிங்கப்பூர்.. நேரம் காலை 9.30. அலுவலகத்தில் பணியில் இருந்த ஆகாஷின் கைபேசி ஒலித்தது. திரை அப்பா என்று காட்டியது.

“சொல்லுங்கப்பா..எப்படி இருக்கீங்க?அம்மா நல்லா இருக்காங்களா..?” என்றான். மறுமுனையில் அமைதி. ”ஹலோ அப்பா லைன்ல இருக்கீங்களா..?” என்றான் ஆகாஷ்.

“ஹ்ம்ம்... நல்லா இருக்கேண்டா..அம்மாக்குத்தான்..” என்று அப்பா இழுக்கப் பதறிப்போனவன், ”என்னப்பா என்னாச்சு..? என்றான். “அம்மாக்குக் கொஞ்சம் உடம்பு சரி இல்ல..உன்னை உடனே பார்க்கனும்னு சொல்றாங்க கொஞ்சம் கிளம்பி வரமுடியுமா..?” என்றார் அப்பா..

“சென்னைக்கு அடுத்த ப்ளைட் எப்பன்னு பாத்துட்டு உடனே கிளம்புரேன்ப்பா..நீங்க கவலைப்படாம இருங்க” என்று அழைப்பைத் துண்டித்தான்.

ஆகாஷை எப்படியாவது இம்முறை சென்னைக்கு வரவழைத்து அவனுக்கு திருமணம் செய்துவிடவேண்டும் என்ற முடிவுடன் வேறு வழியின்றி இந்தப்பொய்யைச் சொன்னார்கள் அவனது பெற்றோர் சங்கர்-செண்பா. ஆகாஷ் அவர்களது ஒரே மகன். அவசர அவசரமாக சென்னை கிளம்பும் விமானத்தில் ஏறிய ஆகாஷ், சென்னையில் இருக்கும் அவன் நண்பன் சுரேஷ் எண்ணை அழைத்துத் தன் பெற்றோர்க்குத் துணையாக இருக்கும்படி கேட்டுக்கொண்டான்.

அவனும் அதற்கு, ”சரிடா நீ பாத்துபதறாம வா நான் பாத்துக்குறேன்..” என்று தைரியம் சொல்லி ஆகாஷ் வீட்டிற்குச் செல்ல அங்கு அவன் பெற்றோர் நன்றாக இருப்பதை தூரத்தில் இருந்து பார்த்துவிட்டு உடனே ஆகாஷ் எண்ணை அழைத்து “டேய் லூசாடா நீ..? உங்க அம்மா இங்க நல்லத்தான் இருக்காங்க...யாரோ உன்னை டென்ஷன் ஆக்க இப்படி பொய் சொல்லிருக்காங்க ..” என்று கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்தான்.

பெற்றோரின் மீது கோபம்தலைக்கேறியது அவனுக்கு. ”வீட்டுக்குப்போய்இருக்கு அவங்களுக்கு” என்று மனதுக்குள் அவர்களை நன்றாகத் திட்டித்தீர்த்தான்.

சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கியது விமானம்.சென்னைக்கு வருவதை நினைத்தாலே எப்பொழுதும் மனதில் எழும் மகிழ்ச்சி,ஆசை, ஆர்வம் இதில் எதுவும் இம்முறை அவன் மனதில் தோன்றவில்லை. விமான நிலையத்தில் கால் பதித்த ஆகாஷின் மனம் முழுக்க கோபம்,எரிச்சல் மட்டும்தான்.

தனது பெற்றோர் எதற்காக அவனை சென்னை வர வைத்திருப்பர்கள் என்பதை அவன் யூகித்திருந்தான். பொதுவாகவே திருமண வயதை அடைந்த ஆண்களுக்குத் தங்கள் பெற்றோர் திருமணப்பேச்சைத் துவங்கும்போது ஒருவித எரிச்சல் உண்டாகும்.

காரணம், ஒன்று அவர்கள் வேறு ஒருவரை காதலித்திருக்க வேண்டும் அல்லது திருமணத்திற்குப் பிறகு அவர்களுக்கு இருக்கும் பொறுப்பை நினைத்து வரும் ஒருவித பயம். இவ்விரண்டில் ஆகாஷின் எரிச்சலுக்குக் காரணம் எதுவென்று அவனுக்கே சரியாகத் தெரியவில்ல.

ஆகாஷின் மனமுழுக்க நிறைந்திருந்த பெண் நித்யா.இருவரும் ஒன்றாக ஒரே அலுவலகத்தில் பணிபுரிந்து வந்தனர். ஆகாஷ்-நித்யாவிற்கு இடையே காதல் மலர, ஆகாஷ் அதை நித்யாவிடம் வெளிப்படுத்தும் முன்னரே அவள் ஒரு விபத்தில் இறந்துவிட்டாள். இத்தகைய பெரிய இழப்பை அவன் எதிர்பார்க்கவே இல்லை.

நினைக்க தெரிந்த மனமே உனக்கு மறக்க தெரியாதா...பழக தெரிந்த உயிரே உனக்கு விலக தெரியாதா மயங்க தெரிந்த கண்ணே உனக்கு உறங்க தெரியாதா.. மலர தெரிந்த அன்பே உனக்கு மறையதெரியாதா அன்பே மறைய தெரியாதா...

ஓராண்டு காலமாக தன் பெற்றோரைக்கூட அவன் பார்க்க வரவில்லை. ஏனென்றால் இருவரும் சேர்ந்துதான் எப்பொழுதும் சென்னைக்கு வருவார்கள்.நித்யாவும் சென்னையைச் சேர்ந்த பெண்தான். ஆகாஷ், நித்யாவின் நினைவுகளைக் கொஞ்சம் கொஞ்சமாக அழிக்க முயற்சித்துக்கொண்டிருந்தான்.

சென்னை விமான நிலையத்திருந்து வெளியே வந்தபோது அவன் அப்பா சங்கர் அனுப்பிய கார் தயாராக இருக்க, அதில் கடும் கோபத்துடன் ஏறி அமர்ந்தான். வீட்டிற்குள் நுழைந்தவுடன் பெற்றோர் மீதிருந்த கோபத்தை படபடவெனபொறிந்துதள்ளிவிட்டு அவர்களின் பதிலுக்குக்கூட காத்திருக்காமல் விறுவிறுவென தன் அறைக்குள் நுழைந்துவிட்டான். இவை அனைத்தையும் எதிர்பார்த்துத்தான் அவனதுபெற்றோர் அப்படியொரு பொய்யைச் சொன்னார்கள்.

காலைச் சூரியன் தன் கதிர்களை வீச இனிதே விடிந்தது மறுநாள். செண்பா, ஆகாஷிடம் மனம்விட்டுப்பேச அவன் அறைக்குள் காபியுடன் நுழைந்தாள். அவன் கோபம் சற்றே குறைந்திருப்பதைப் போல் தோன்ற, அவனிடம் பேசத்துவங்கினார் செண்பா.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.