(Reading time: 8 - 16 minutes)

2017 போட்டி சிறுகதை 49 - காதல் கணவா - சுஜி பிரபு

This is entry #49 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - கரு சார்ந்த கதை - காதல் / திருமண வாழ்க்கை...

எழுத்தாளர் - சுஜி பிரபு

Love

" நெஞ்சோரமா ஒரு காதல்

துளிரும் போது.....

கண்ணனோரமாய் சில

கண்ணீர் துளிகள் ஏனோ ? "

எனும் பாடல்வரிகள் தென்றலுடன் சேர்ந்து தன்னை தீண்டியவுடன் இதழில் மென்னகையுடன் தன் கையிலிருந்த புகைப்படத்தில் தன் மன்னவனின் உருவத்தை வருடிக்கொண்டிருந்தாள் யாகவி... நம் கதையின் நாயகி.

அவள் கையிலிருந்த புகைப்படத்திலிருந்து கண்சிமிட்டினான் அந்த கள்வன். ஆம் கள்வனே தான்...அதோடு அன்பான பிடிவாதகாரனும் கூட......அவனது பிடிவாதத்தினால் தான் அவர்களது திருமணம் நடந்ததும்... இப்பொழுது அவன் காதலில் திளைப்பதும்.......

காதல் , திருமணம் என்னும் வார்த்தைகளுக்கு தன் வாழ்வில் என்றும் இடமில்லை என்றே நினைத்திருந்தாள். அவன் அறிமுகம் கிடைக்கும் வரை.. பாவம் அவளும் என்ன செய்வாள் ? எங்கு சென்றாலும் கேலியும்,கிண்டலும், பரிதாப பார்வையும், ஏமாற்றங்களும் அவளை பின்தொடரும் போது.....

ஒரு அழகான மாலைபொழுதில் வீட்டின் ஜன்னலோரத்தில் அமர்ந்து வெளியே சிறுவர்களின் விளையாட்டினை ஏக்கத்துடன் ரசித்துக்கொண்டிருக்கும் போது அந்த மோன நிலையை கலைக்கவே வந்தது ஒரு அழைப்பு....

" ஹலோ, ராஜா இருக்காங்களா ? நான் விபாகரன் பேசுறேன்..."

" இங்க அப்படி யாரும் இல்லைங்க... Wrong Number."

ச்சே ! இவங்களுக்கு வேற வேலையே இல்ல. ஒரு நம்பரை கூட ஒழுங்கா பாத்து கால் பண்ண தெரியல....ம்ம் ..சரி நாம வேடிக்கை பாக்குறத continue பண்ணுவோம்...

அதன் பிறகு அந்த விஷயத்தை மறந்து விட்டு தன் அன்றாட வேலையில் கவனம் செலுத்தினாள் யாகவி.

ரண்டு நாட்களுக்கு பின் அடிக்கடி சில fwd msgs, jokes, motivated msgs, gd pictures வர ஆரம்பித்தது.

யாகவியும் அதனை தவிர வேறு எந்த தொல்லையும் இல்லாததால் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் சில நாட்களுக்கு பின் அந்த முகம் தெரியாத நலம்விரும்பியின் msgs எதிர்பார்க்க ஆரம்பித்தாள்.

இப்படியே இருவரும் பேச ஆரம்பித்து கவி, விபு என செல்ல பெயர் வைத்து அழைக்குமளவிற்கு அவர்களது உறவும் முன்னேற்றம் கண்டது.....

ஆனால் அவன் ஒவ்வொருமுறை நேரில் சந்திக்கலாம் என கேட்கும் போதெல்லாம் அதனை தவிர்க்க ஏதேனும் ஒரு காரணம் தேடினாள் யாகவி....

" கவி, நேர்ல தான் பார்க்க முடியல. உன்னோட photo அனுப்பு டா. அத பார்த்தாவது சந்தோசபடுறேன்......"

" ஏன் விபு, photo பார்த்தா தான் பேசுவீங்களா ? ஒருவேளை நான் அழகா இல்லனா பேச மாட்டீங்களா? "

" ஹே லூசு கவி, நீ ஏன் இப்படி பேசுற. நீ எப்படி இருந்தாலும் எனக்கு ரொம்ப பிடிக்கும் டி. அது உனக்கும் தெரியும். ஆனாலும் ஏன் இப்படி பேசுற னு தெரியல. ம் பரவாயில்ல.... இப்போ நான் என் photo அனுப்புறேன். உனக்கு எப்போ என்மேல நம்பிக்கை வருதோ அப்போ எனக்கு கால் பண்ணு....ஆனா ஒரு விஷயம் நியாபகம் வச்சிக்கோ எப்பவும், எந்த நிலமையில் இருந்தாலும் எனக்கு உன்ன ரொம்ப பிடிக்கும். உன் phone காக நான் காத்திருப்பேன்..... என்று போனை வைத்து விட்டான்.....

யாகவியின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது..அவளுக்கும் அவனை நேரில் பார்க்க வேண்டும்...நிறைய பேச வேண்டும் என நிறைய ஆசைகள் இருந்தது. ஆனால் நேரில் பார்த்த பின் அவன் சிறிதேனும் முகம் சுழித்து விட்டாலும் அவ்வளவுதான். தன் உயிர் பிரிந்து விடும். அதற்கு இந்த பிரிவே மேல் என நினைத்தாள்...

ஆனால் அவன் குரல் கேட்காமல் ஒரு நாள் கூட ஒரு யுகமாய் தோன்றியது....கண்ணீரிலேயே கரைந்தாள்......

ஒரு நாள் முடியுமுன்னமே அவளவன் அழைத்துவிட்டான். ஒரு தொலைபேசி அழைப்பு ஒருவரை உயிர்ப்பித்து விடுமா ? ஆனால் அவளை உயிர்பித்தது.....

" ஹலோ, குட்டிமா "

" போ, பேசாத... குட்டிமாவாம். இப்போ ஏன் கால் பண்ண ? நீ தான பேச வேண்டாம்னு சொன்ன .... போ பேசாத... நான் கோவமா இருக்கேன்.." என அழுது கொண்டே கூறினாள்.

" கவி குட்டி , நான் சொல்றத கொஞ்சம் அழாம கேளு டா. நல்ல பொண்ணுல...."

" ம்ம்... சொல்லு நான் அழமாட்டேன்...."

" ம்ம்ம் இப்போ தான் நீ நல்ல பொண்ணு....அப்படியே நான் கேக்குற கேள்விக்கெல்லாம் உன் மனசார உண்மையை மட்டும் சொல்லணும். சொல்வியா உன்னோட விபுக்காக......"

"சரி நான் சொல்றேன். நீ கேளு"

"குட்டிமா ஒரு நாளாவது என்கிட்ட உன்னால பேசாம இருக்க முடியுமா?"

" முடியாது..."

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.