(Reading time: 8 - 16 minutes)

"நான் உங்கிட்ட பேசாம இருந்தப்போ என்ன நினைக்காம இருந்தியா ?"

" உன் நியாபகமா தான் இருந்துச்சு"

"எனக்கு தெரியும் டா....உன்னால என்ன விட்டுட்டு இருக்க முடியாதுனு... அப்புறம் ஏன் இவ்ளோ பிடிவாதம் பிடிக்கிற...நாம சந்திக்கிறதுனால நமக்குள்ள எந்த பிரிவும் வந்துடாது டா.....எனக்கு உன்ன பாக்கணும்..... நல்லா யோசிச்சு சொல்லு... நான் நாளைக்கு உனக்காக காந்தி பார்க்ல evening 4.30 கு காத்திட்டுருப்பேன்......அதுக்கப்புறம் உன் விருப்பம் என்று வைத்து விட்டான்..

ன்னும் எத்தனை நாள் தான் அவனை காக்க வைப்பது...என்றாவது ஒரு நாள் இந்த சூழ்நிலையை கையாள வேண்டும். அதை இப்போ செய்தால் என்ன ? ...என்னை பார்த்த பிறகும் விபு என்னை காதலிக்கிறேன் என்று சொன்னால் என்ன செய்வது... அதற்கு சம்மதிக்க கூடாது...அவன் வேறு ஒரு நல்ல பெண்ணை திருமணம் செய்து கொண்டு நன்றாக இருக்க வேண்டும்....எப்போதும் நான் அவனுக்கு பொருத்தமானவள் அல்ல....இவ்வாறு யோசித்தவாறு பூங்காவிற்கு சென்றாள் யாகவி........

அங்கு இவளது வருகையை எதிர்பார்த்தவாறு கையில் சிவப்பு நிற பூங்கொத்தை பிடித்தவாறு மென்னகையுடன் காத்திருந்தான் யாகவியின் கண்ணன்........

தூரத்திலேயே அவனை பார்த்து கண்களில் நிரப்பிக்கொண்டாள்... இதன்பின் இந்த வாய்ப்பு கிடைக்காமலே போகலாம்.....

மெல்ல அவனருகில் சென்று தன் மூன்று சக்கர வாகனத்திலிருந்து இறங்கி சிறு குழந்தை தவழ்ந்து செல்வது போல் தவழ்ந்து சென்று அவன் இருந்த இருக்கையில் அமர்ந்தாள் யாகவி......

" ஹாய் குட்டிமா ! இன்னிக்கு ரொம்ப அழகா இருக்க டி நீ.....இந்த மாமன பார்க்க போறோம்ன்ற சந்தோசமா ?.....என கேட்டான் விபு."

" என்னடா என்ன பார்த்து உனக்கு கொஞ்சம் கூட வருத்தமாயில்லையா ?"

" எதுக்கு டி வருத்தப்படனும். இன்னிக்காவது என் தேவதையோட தரிசனம் கிடைச்சுதேனு சந்தோசமா தான் இருக்கு எனக்கு...."

" விபு ப்ளீஸ் ...... "

"ஓகே ஓகே எனக்கு கொஞ்சம் கூட வருத்தம் இல்ல டி.......ஏன் னா எனக்கு உன்ன முன்னாடியே தெரியும்....நீ ஒர்க் பண்ற ஸ்கூலுக்கு பக்கத்துல தான் என்னோட ஆபீஸ் இருக்கு.... ஒரு சிலர பார்த்தவுடனே நமக்கு பிடிச்சிடுமே அதே மாதிரி தான் உன்ன எனக்கு பிடிச்சது..... உன்கிட்ட பேசணும், பழகணும்னு தோணுச்சு.....அதுனால தான் அந்த கால் பண்ணேன்.....

அப்புறம் எப்படியோ நாம பழக ஆரம்பிச்சிட்டோம்......உன்ன என்னோட பெஸ்ட் friend ஆஹ் தான் நினைச்சேன்......ஆனா அன்னிக்கு நாம சண்டை போட்டு பேசாம இருந்தோமே அன்னிக்கு தான் எனக்கு புரிஞ்சுது நீ என்னோட உயிர்னு..... எந்த காரணத்துக்காகவும் உன்ன விட்டுட கூடாதுனு...ஒரு நாள் கூட என்னால உங்கிட்ட பேசாம இருக்க முடியல டி. யார்கிட்டயும் பேச பிடிக்கல, ஏதுமே இல்லாம வெறுமையா, பைத்தியம் பிடிச்ச மாதிரி இருந்துச்சுடி.....

உனக்கு தெரியும்ல நான் ஆஸ்ரமத்துல தான் வளர்ந்தேன். அப்போலாம் ஏதும் தெரியல டி. ஆனா நீ என்கூட பேசாம இருந்தப்போ இந்த உலகத்துல எனக்குன்னு யாருமே இல்லாத மாதிரி இருந்துச்சு டி. இதுக்கு மேல எப்படி என்ன புரிய வைக்குறதுன்னு எனக்கு தெரியல டி.....

" எனக்கு புரியுது விபு. ஆனா உங்களுக்கு என்மேல ஒரு ஈர்ப்பு இருக்கலாம்.....ஆனால் இது நிஜ வாழ்க்கைக்கு ஒத்து வராது ..... எனக்கும் உங்கள பிடிச்சிருக்கு. ....ஆனாலும் எனக்கு ஏதும் வேண்டாம். ஏன் னா இதுவரைக்கும் பல ஏமாற்றங்களை சந்திச்சிருக்கேன்.... ஒருவேளை நம்ம கல்யாணத்துக்கு அப்புறம் உங்களுக்கு என்ன பிடிக்காம போனாலும், இல்ல ஏதாச்சும் பிரச்சனை வந்தாலோ என்னால தாங்கிக்கவே முடியாது.....நான் செத்தே போயிடுவேன்..... அதுனால நீங்க வேற ஒரு நல்ல பொண்ண பாத்து கல்யாணம் பண்ணிகோங்க.....

" oh ! அப்போ மேடம் என்ன பண்ண போறீங்க.... எங்கிருந்தாலும் வாழ்க னு பாட்டு பாட போறீங்களா......? "

" நீங்க ஏன் இப்படி பேசுறீங்க "என கண் கலங்கினாள் யாகவி.

" ஏன்டி ஒரு பேச்சுக்கு சொன்னதுக்கு கூட உன்னால தாங்க முடியலையே பின்ன ஏன்டி நீயும் கஷ்ட பட்டு என்னையும் கஷ்டப்படுத்துற.....புரிஞ்சுக்கோ டா "

"உங்களுக்கு தான் புரியல. நான் உங்களுக்கு சமமானவளே இல்லங்க. ரெண்டுபேரும் எங்கயாவது வெளிய போகணும்னு நினைச்சா கூட என்னால உங்கக்கூட வர முடியாது. என்னால தாயாகவும் முடியாது. இப்படி எந்த சந்தோசமும் உங்களுக்கு என்னால குடுக்க முடியாது. அப்புறம் ஏன் கல்யாணம் பண்ணிக்கணும். "

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.