(Reading time: 5 - 10 minutes)

2017 போட்டி சிறுகதை 63 - வாழ்வின் ஒரு கோணம் - ரேவதிசிவா

This is entry #63 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - சூழ்நிலை கதை - கதை தொடக்கத்தில் இருந்து தொடர்க... / முடிவிற்கான கதை

எழுத்தாளர் - ரேவதிசிவா

ணமேடையில் அமர்ந்திருந்தவளின் கண்களில் கண்ணீர்த்துளிகள் எட்டிப் பார்த்தன... இதோ இன்னும் சில நிமிடங்களில் அருகே இருக்கும் இவன் அவளுக்கு தாலி அணிவித்து கணவனாக போகிறான்... நினைக்கும் போதே சுளீர் என வலித்தது....  அப்பொழுது , நிறுத்து என்று ஒரு குரல், ஓங்கி ஒலித்தது"....

ஏ! போதும் போதும் . இப்ப மீதி கதைய நான் சொல்லவா ?" கல்யாணத்த நிறுத்த வந்தது அந்தப் பையனோட  காதலி. இவன் பணத்துக்கு ஆசைப்பட்டு இந்தக் கல்யாணத்துக்குச் சம்மதித்திருப்பான்.அந்தப் பெண்ணோட வந்த காவல்துறையினர் , அவன விலங்கிட்டு இழுத்துப் போயிருப்பாங்க. அப்புறம் மணப்பெண் அவளோட காதலனையே கல்யாணம் செய்துக்கும்"...நான் சொல்றது சரியா?

முதல மூச்ச வாங்குங்க , எப்படி அண்ணி இவ்வளவு சரியா சொல்றீங்க? என்னோடப் பேப்பர எடுத்துப் பாத்திங்களா?...

க்கும்..அப்படியே பார்த்துடாலும்..போடா ,இததான நம்ம தமிழ் சினிமால காட்டியிருக்காங்க.அதவச்சிதான் நானும் சொன்னேன். இங்கப்பாருடா தம்பி, இப்படிலாம் நீ கதையெழுதிக் கொண்டுக்கிட்டுப் போன , அந்த தயாரிப்பாளர் தலைத்தெரிக்க ஓடிடுவார் பார்த்துக்க...

சூப்பரா சொன்னீங்க அண்ணி. இததான் நானும் சொல்றேன், எங்க இவன் கேக்கிறான்.படமெடுக்க கதையா இல்ல.எவ்வளவோ சமூகக் கருத்துள்ளப் படமெல்லாம் இருக்கு, அதுமாதிரியானக் கதையெல்லாம் எழுதலாமே.

எனக்கும்  வானதி சொல்றதுதான் சரியாப்படுதுபா. நீ ஏன் சமூகத்துல நடக்கிறப் பிரச்சனைகள் அவலங்களைப் பற்றி எழுதக்கூடாது, அதப் பார்த்து யாரவது திருந்தனா நமக்கும் நிம்மதிய தருந்தானே.

நீங்க சொல்றமாரி செய்யனும்னா , நான் முதல நிறையக் குறும்படம் எடுக்கனும் அப்புறந்தான் சினிமா எடுக்க முடியும்.

நீ சொல்றது அந்தளவுக்கு சரி கிடையாது கண்ணா. நல்ல விஷயங்கள் சொல்லறத்துக்குக்  குறும்படத்த மட்டுமே கருவியாகப் பயன்படுத்தக்கூடாது. திரைப்படத்துலயும் சொல்லலாம். என்ன ,  உடனே வெற்றிப்பெறாவிட்டாலும் அதன்மூலமா கண்டிப்பா மக்கள் பயன் அடைவர்.

சரியண்ணி. நீங்க சொல்வதையும் முயற்சி செய்கிறேன்.அதுசரி நம்ம தலைவர எங்க காணோம். என்ன செய்றாங்க மேடம்?

"சித்தப்பா! நான் இங்கிருக்கன். என்ன விட்டுட்டு நீங்க மூனுப்பேரும் என்ன செய்றீங்க?"கண்களை உருட்டி கைகளால் அபிநயித்தால், அவ்வீட்டின் மூன்று வயதுச் செல்லக்குழந்தை சம்யுக்தா.

கண்ணன் அவளைத்தூக்கி, " சித்தப்பா படம் எடுக்கிறதப் பத்திப்  பேசிகிட்டு இருந்தோம்டா.

ஹய் படமா! சித்தப்பா நீங்க நிறையா கார்டூன் படம் எடுக்கறீஙகளா? அப்பதான் அம்மா பாக்க விடுவாங்க...

என்னது கார்டுன் படமா! கண்ணன் முழிக்க, சங்கமித்ராவும் வானதியும் சிரித்தனர்.

வானதி குழந்தைய அழைத்து," யுக்தாமா, சித்தபாவுக்குக் காரட்டூன் படமெல்லாம் எடுக்கத்தெரியாதுடா.அதுக்கெல்லாம் தனியா படிச்சிருந்தா மட்டுமே எடுக்கமுடியும்" என்றாள்.

ஓ ...அப்ப சரியத்த , யுக்தா பாப்பா பெருசான அதப் படிச்சி கார்டுன் படம் எடுக்கும்,என்றாள் சம்யுக்தா.

ஏற்கனவே இருக்கிறவங்கப் பத்தாதுனு இவவேறயா..நல்ல குடும்பம்பா இது, என்று மித்ரா தலையில் கை வைத்துக்  கூற, அனைவரும் சிரித்தனர்...

போங்க போங்க. நாழியாச்சு போய் தூங்குங்க...நாளைக்கு நமக்கு நிறைய வேலை இருக்கும்...உங்க அண்ணனும் ஊரிலிருந்து வந்துடுவாங்க...

ண்ணன் யுக்தாவைத் தூக்கிக்கொண்டு தன் அறைக்குச் சென்றான்.இருவருக்கும் இரவு வணக்கங்களைக் கூறி , மித்ரா வானதியை தன்னறைக்குக் கூட்டிச் சென்றாள்.

வானதியைப் பார்த்த மித்ரா, "சொல்லுமா  என்ன பிரச்சனை உனக்கு, உன் முகமே சரியில்ல"என்றாள்.

அதுவந்து அண்ணி, என்று வானதி தயங்க, தயங்கமா சொல்லுமா என்றாள் மித்ரா.

நான் வரும்பொழுது, ரோட்டில ஒருத்தன் வேகமா வண்டிய ஓட்டி ஒரு வயசனாவங்க மேல இடிச்சிட்டுப் போய்டான். அவங்கள மருத்துவமணைக்கு கொண்டு போனாங்க...அதே ஞாபகமா இருக்கண்ணி,அவங்களுக்கு ஒன்னும் ஆகாதில்ல..

ஒன்னும் ஆகாதும்மா ,நீ இன்னைக்கு இங்கேயே தூங்குடா.. குட் நைட் அண்ணி. ஐ லவ்யு அண்ணி. குட் நைட் மா. மீ டூ...

சிறிது நேரத்தில் வானதி உறங்கிவிட , மித்ரா எழுந்து தன்னுடைய டைரியை எடுத்து அதன் பக்கங்களைப் புரட்டினாள்.அதன் உள்ளே,

விபத்து

நடைபெறக் காரணம்யார்?

இருப்பக்கங்ளில் வந்த யார் மீது குற்றம்?

செல்பேசியோடு வந்த ஓட்டுனர் மீதாஅல்லது

இருக்கையின் பெல்ட் அணியாது உட்கார்ந்திருந்தவர் மீதா

குடித்துவிட்டு வண்டியோட்டியவன் மீதா

அதைக் மிகவும் கவனித்தும் கவனிக்காக்காமல் விட்டவர் மீதா

இழப்பு யாருக்கு? யாரோ ஒருவருக்கல்ல

வாழ்க்கை ஒரு சுழற்ச்சிமுறை (யோசியுங்கள்)

விரைந்து செல்வதற்குத்தான் வாகனம் ஆனால்

அந்த விரைவு எதைநோக்கியென்று....

இவ்வரிகளுக்கு கீழே மித்ராவின் பெற்றோர் படம்...

மித்ராவைப் பற்றி சில வரிகள்.. பதின்வயதில், விபத்தில் பெற்றோரை இழந்த மித்ரா காப்பகத்தில் சேர்க்கப்பட்டாள்.அனைவரையும் நேசிக்கும் பணபுள்ளவள். வேலைப் பார்க்கும் பொழுது காப்பகத்தின் தலைவரின் அறிவுரையால் தன்னை நேசித்தவனைத் திருமணம் செய்துக்கொண்டாள். கணவனின் உடன்பிறப்புகளை தன் சொந்தமாக நேசிப்பவள்... அவள் கணவனும் இன்றுவரை அவளை அதேப்போல் நேசிப்பவன்.

சிறிது நேரத்தில் மித்ராவும் உறங்கினாள்.

காலையில் எழுந்து வந்தப் பொழுது , நாங்களும் சமையலுக்கு உதவுறோம் என்று சொல்லி சமையலறையை ஒருவழியாக்கிருந்தனர், அவ்வீட்டின் நான்குப்  பிள்ளைகள். இதில் அவள் கணவனும் அடக்கம்.தன்னுடைய மனநிலையை வானதிமூலம் அறிந்து , அதை மாற்றுவதற்குத் தன் கணவன் செய்த வேலை என்றும் புரிந்தது...மனதில் மகிழ்ந்தாலும்  , கோபம்போல் முகத்தை வைத்துக்கொண்டு, இதை முழுவதுமா சுத்தம் செய்தாவரை யாரும்"என் மூஞ்சியிலேயே முழிக்காதீங்க..." என்றாள் அவள்.

உங்களோடு சில வரிகள், அனைவரையும் விபத்தில் பறிக்கொடுத்துத் தனியாய் அனுபவிக்கும் வலி , பிறந்ததில் இருந்தே தனியாய் இருக்கும் வலியை விடக் கொடியது. பிறரின் வலிக்கு நாம் காரணமாக இல்லாமல் இருப்போமே..இனியேனும் சாலை விதிகளைக் கடைப்பிடிப்போம்..

 

This is entry #63 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - சூழ்நிலை கதை - கதை தொடக்கத்தில் இருந்து தொடர்க... / முடிவிற்கான கதை

எழுத்தாளர் - ரேவதிசிவா

{kunena_discuss:1083}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.