(Reading time: 17 - 33 minutes)

2017 போட்டி சிறுகதை 62 - நம்முள் பூத்த காதல் எங்கே - லேகா

This is entry #62 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - கரு சார்ந்த கதை - காதல்/திருமண வாழ்க்கை

எழுத்தாளர் - லேகா

Lost Love
 

சூரியன் முடிந்த அளவு தன் உக்கிரத்தைக் குறைத்து பூமிக்காதலியை தழுவத் தொடங்கியிருந்த காலைப்பொழுது.  லட்சக்கணக்கான கதிர்களில் ஒன்றிரண்டு முகத்தைத் தொட்டு மெதுவாக எழுப்பியது அவளை.  படுக்கை, இன்னும் நமது ஒப்பந்தம் முடியவில்லை என அழைக்க, அதனுடனான உறவை நீட்டிக்க ஆவல் இருந்தாலும், இன்றைய நாளில் செய்ய வேண்டிய வேலைகள் அணிவகுத்து நிற்க, “இன்று போய் நாளை வருகிறேன்” என்று பிரியா விடை கொடுத்தாள் சஹஸ்ரா.

இன்று அவளுடன் வசிக்கும் மெரிடித் தன் தாயைப் பார்க்க சென்றதால் அவள் மட்டுமே வீட்டில்.  நல்லதொரு தோழி மெரிடித், சுருக்கமாக மெர்.  இருவருக்கும் கல்லூரியில் படிக்கும்போது பழக்கம் ஏற்பட்டது.  இந்திய கலாச்சாரத்தைப் பற்றி அறிந்துகொள்ளவே சென்னைக்கு பயில வந்தாள் மெர்.  இருவரும் நெருங்கிய தோழிகளாகினர்.  சஹஸ்ராவின் வீட்டு விஷேஷங்களில் பட்டுடுத்தி தலைமுடியைத் தளரப் பின்னிப் பூவைத்து, பொட்டிட்டு புன்னகையுடன் “வாங்க”, “வணக்கம்” என்று ஒவ்வொருவரையும் தன் கொஞ்சும் தமிழில் விசாரிக்கும் மெரிடித் மிகவும் பிரசித்தி.  அதன்பின் இருவரும் வெவ்வேறு திசகளில் பிரிந்தாலும், வேலைக்காக இங்கு வரவிருப்பதாக சஹஸ்ரா கூறியவுடன் தன்னுடனேயே தங்குமாறு கட்டளையிட்டு பணியவும் வைத்துவிட்டாள்.  ஆனால், மெரிடித்தின் தாய்க்கு உடல்நலம் சரியில்லாமல் போனதால், சஹஸ்ராவைத் தனியே விட்டு சிகாகோவிற்கு செல்ல வேண்டியதாயிற்று அவளுக்கு.

காலைக்கடங்களை முடித்துவிட்டு, குளிர்சாதனப்பெட்டியில் இருப்பு வைத்திருந்தவற்றைக் கொண்டு எளிமையான சமையலை செய்து சாப்பிட்டு, அந்த குளிருக்கு ஏற்ற கதகதப்பைத் தரக்கூடிய உடைகளை அணிந்து வீட்டை விட்டு வெளியேறினாள் சஹஸ்ரா.  புது இடம், பணியின் முதல் நாள் என்ற மகிழ்ச்சி துளியும் அவள் மனதில் இல்லை.  அதன் காரணம் அவள் அறிந்ததே.  தன் வெற்றியாயினும் தோல்வியாயினும் பகிர்ந்துகொள்ள அவள் முதலில் தேடும் அந்த உறவு தற்போது இல்லாமல் போனதால் தானென்று.

தன்னை ஆட்கொள்ள வந்த அந்த கடந்த கால நினைவுகளை முயன்று தடுத்து, அலுவலகத்தை நோக்கி புறப்பட்டாள் அவள், அந்த நினைவின் நாயகனே தன்முன் நிற்கப்போகிறான் என்றறியாமல்.

வழக்கமான அறிமுகம் முடிந்து தன் இருக்கையில் வந்து அமர்ந்தாள் சஹஸ்ரா.  பழக்கமான வேலையாதலால் எந்த தடுமாற்றமுமே இல்லாமல் தன் பணியைத் தொடங்கி, சிறிது நேரத்தில் அதில் மூழ்கியும் போனாள்.  அவளது கவனத்தை ஈர்த்தது அந்த கூச்சல்.  யாருக்கோ பிறந்தநாள் போல.  அலுவலகமே கூடி நின்று வாழ்த்து கூறியது.  ஈடுபாடு இல்லாமல் பார்த்துக்கொண்டிருந்தவள், தன் இடத்திலிருந்து எழுந்து ஒரு வித தேடலுடன் பார்வையை ஓட்டினாள், பிறந்தநாள் கொண்டாடுபவனின் பெயரைக் கேட்டு.  அது அவனது பெயர் அல்லவா?

இத்தனை வருடங்கள் மனதில் வாடகையில்லாமல் குடியிருக்கும் வெறுப்பை ஆவல் மிஞ்ச, அந்த கூட்டத்தில் அவனைத் தேடினாள் சஹஸ்ரா.  இன்று தான் அவனுக்கும் பிறந்தநாள் அல்லவா?  அவனாக இருக்குமோ என்ற ஆர்வம் தூண்ட, தேடினாள் அவள்.   சல்லடை போட்டு அந்த மனிதத் தலைகளை சலிக்காதது ஒன்றுதான் குறை.  அவனை கண்டுபிடிக்க முடியவில்லை.

‘உனக்கு இந்த நாட்டின் உச்சரிப்பைப் பற்றித் தெரியாதா?  சுலபமான பெயரையே மிகவும் கடினப்பட்டுக் கூறுவார்கள்.  அவனது பெயரை உச்சரிப்பதும் அதுபோல முற்றிலுமே மாறிப்போயிருக்கும்.  இதில் நீ அறைகுறையாய் காதில் கேட்டதை வைத்து தேடினால் அவன் எவ்வாறு கிடைப்பான்?’ என்றது மனம்.  அதுவும் சரிதான்.  சென்னையில் இருப்பவனை இந்த நியூயார்க்கில் தேடுவது பைத்தியக்காரத்தனம் என்று தன்னைத் தானே குட்டிக்கொண்டு இருக்கைக்குச் செல்லத் திரும்பினாள்.  அப்போது, அவளை அழைத்தது ஒரு குரல்.

கேட்ட மாத்திரத்திலேயே அவள் செவியில் விழுந்து இதயத்தில் நுழைந்து அதனை ஒரு நொடி நிறுத்தி வைத்து, பின் பூங்காவனமாய் மலரச் செய்தது.  அவன் தான்!  அவனே தான்.  உள்மனம் அடித்துக் கூற, பயமும் படபடப்பும் ஆவலும் ஒன்றை ஒன்று முந்த, திரும்பினாள் சஹஸ்ரா.

அவளை இங்கே அவனும் எதிர்பார்த்திடவில்லை என்பதை அவளைப் பார்த்தமாத்திரத்தில் அவன் கொண்ட அதிர்ச்சியே கூறியது.  அவளுக்கும் இது அதிர்ச்சியே!  இவனை பார்க்கக்கூடாது என்று தொலைதூரம் வந்தால் இங்கேயே வந்திருக்கிறானே!  (எட்டி எட்டிப் பார்த்தது யாரும்மா?  உன்னைப் போல் ஒருத்தியா?)

இருவரும் எத்தனை கணங்கள் அவ்வாறு ஒருவரை ஒருவர் பார்த்து நின்றிருந்தார்களோ, அவர்கள் அறியாதது.  எந்த தொழில்நுட்பமுமே இல்லாமல் இருவரும் கடந்த காலத்தில் சஞ்சாரித்தனர்.  எவ்வளவோ மாற்றி கருத்துகள் இருப்பினும் இருவரும் அப்போது அவை எல்லாமே மறந்தது உண்மை.  அவர்களது கோபம், வெறுப்பு என அனைத்து எண்ணங்களுமே பின்னுக்கு சென்று, உள்ளுக்குள் புதைத்த காதல் பீறிட்டு வெளியேறியது.  பார்வையினாலேயே ஓராயிரம் ஆண்டுகள் வாழ்ந்திருப்பர் நிகழ்காலத்தின் தூதனாய் அவனது நண்பன் கிரிஸ்டோபர் வந்து அழைக்காவிடில்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.