கால்கள் வேரறுந்து போக, மெல்ல தரை நோக்கி சாய்ந்தாள் சஹஸ்ரா. ஆனால், அவளை அந்த பூமித் தாய் தாங்குவதற்குள் தன் கரங்களில் ஏந்தினான் சஹியின் மணாளன்.
“சஹி… கண்ணம்மா… டேய்… இங்கே பாருடா…” என்று அவன் அவளது கண்ணம் தட்ட, சில நிமிடங்களில் கண்விழித்தாள் அவனது உயிரானவள்.
விழிகளைத் திறந்தவள் கண்ணில் முதலில் பட்டது, கண்ணீருடன் அவளைப் பார்த்துக்க்கொண்டிருந்த மகிழனே. உயிரைக் கண்ணில் தேக்கிவைத்து நோக்கிக் கொண்டிருந்தான் அவளை. அதைக் கண்ட நொடி அவளுள் ஒரு கேள்வி.
“இவனா என்னை காதலிக்காதவன்? இத்தனை வருடங்களுக்குப் பின்பும் அவனிடம் அதே நேசத்தைக் காண்கிறேனே. இதோ, இங்கே நான் வந்து எத்தனை மாதங்களாயிற்று? இதுவரை அவனை நான் காதலாக பார்த்திருப்பேனா? இல்லையே! எப்போதும் முறைத்துக் கொண்டல்லவா இருந்தேன்? அதற்காக, எனக்கு அவன் மீது காதல் இல்லையென்றாகிவிடுமா? அதேபோல் தானே அவனுக்கும்? என்மீது காதலைப் பொழிய அவனுக்கு நேரம் கிடைக்காமல் போயிருக்கலாம். அதனால், அவனுக்கும் என்மீது காதல் இல்லையென்றாகிவிடுமா? என்ன மடத்தனம் செய்துவிட்டேன்? இத்தனை நாட்கள் அவனையும் துன்புறுத்தி, என்னையும் துன்புறுத்தி, எங்களைச் சேர்ந்தவர்களையும் துன்புறுத்தி…”
அந்த நொடி தன்னையே வெறுத்தாள் சஹி. அவளைப் பார்த்தமாத்திரத்திலேயே அவளது உள்ள எண்ணங்களை அவன் கண்டுகொண்டானோ என்னவோ,
“ஹே… சஹி… நீ மட்டும் இல்லைடா… நானும் நீ என்னிடம் முன்பு போல பாசம் காட்டவேண்டும் என்று எண்ணினேனே தவிர, நானும் உன்னிடம் அதே அன்பை செலுத்த வேண்டும் என்பதை மறந்து போனேன். ஆனால், உன்னைப் பிரிந்திருந்தபோதுதான் எல்லாம் புரிந்தது கண்ணம்மா. நானும் பிழை செய்திருக்கிறேன். உன்னை மட்டும் குற்றம் சொல்வதில் எந்த விதத்தில் நியாயம்? மறந்துவிடு” என்று அவளது கண்ணில் இருந்து வழிந்த நீரைத் துடைத்தான் அவள் கணவன்.
“என்னை மன்னிச்சிடு மகி” என்று அவன் மார்பில் சாய்ந்தாள் சஹஸ்ரா.
“என்னையும் மன்னிச்சிடும்மா” என்று அவள் உச்சியில் இதழ் பதித்தான் மகிழ்வேந்தன்.
காலத்தை வென்று காதல் நிலைப்பது மற்றவரிடம் குறைகள் இருந்தாலும் அனுசரித்துப் போவதில் தான் உள்ளது. இருவரும் தங்களுக்கு கிடைக்கும் நேரத்தில் ஒருவர் மீது மற்றவர் கொண்ட நேசத்தை எளிமையாக வெளிப்படுத்தியிருந்தாலே பிரிவென்பது இவர்களுக்குள் வராமல் இருந்திருக்கும். அதனை சிறிது காலம் கடந்து அறிந்துகொண்டாலும், இருவரது உள்ளமும் நிறைந்திருந்தது.
This is entry #62 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest
போட்டி பிரிவு - கரு சார்ந்த கதை - காதல்/திருமண வாழ்க்கை
எழுத்தாளர் - லேகா
{kunena_discuss:1083}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.