(Reading time: 13 - 26 minutes)

2017 போட்டி சிறுகதை 61 - சகி(ஹி) நீயடி..! - ஆர்த்தி N

This is entry #61 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - சூழ்நிலை கதை - முடிவிற்கான கதை...

எழுத்தாளர் - ஆர்த்தி N

Friends

னக்கு துன்பம் வந்தால் அதை

நண்பனிடம் சொல்லாதே..

துன்பத்திடம் சொல் எனக்கு

ஒரு நண்பன் இருகிறான் என்று.!

(thanks to google:D)

என்ற வரிகளை மெய்பிப்பது போல் அவளுக்கும் உயிர்த் தோழி என ஒருவரல்ல இரண்டு பேர் இருந்தனர்.. ஆம் இருந்தனர்.(idha nalla stress pannikonga.. back to story :D)

சாஹித்யாவிற்கு காலையில் எழுந்ததிலிருந்து தனது தோழிகளின் நினைவாகவே இருந்தது. தோழிகள் என்பது பெயர் அளவில் தான் ஆனால் அவர்கள் கூடப் பிறந்த சகோதரிகள் போலவே எப்பொழுதும் ஒன்றாகவே இருப்பர். சாஹித்யா சரண்யா ஸ்வேத்தா மூவரும் தங்களதுப் பள்ளி பருவத்தை சேர்ந்தே துவங்கினர்.. வேறு குணம் கொண்டிருந்தாலும் இவர்கள் வெகு விரைவில் நல்ல தோழிகளாயினர். இவர்கள் மூவரின் நட்பு வெகு பிரசித்தம் அவர்கள் பள்ளியில்.

மூன்று பேர்கிடையில் எவர் வந்தாலும் அவர்களால் அதை தாங்கிக்கொள்ளவே இயலாது. காதலில் மட்டுமல்ல நட்பிலும்  possessiveness இயல்பே. அதனால் சண்டைகள் வந்தாலும் அது நீடிப்பது வெகு சில நொடிகள் மட்டுமே.. இவர்களின் நட்பினால் இவர்களது குடும்பமும் இணைந்தது.

அப்பொழுது அவர்கள் பள்ளிப் படிப்பை முடித்து விடுமுறையில் இருந்த சமயம். தினமும் மூவரில் எவராவது ஒருவர் வீட்டில் தங்களது அரட்டைக் கச்சேரியை ஆரம்பித்து விடுவர். மாலை நேரங்களில் கணினி வகுப்புகளுக்கு சேர்ந்தே சென்று வருவர். மூவரும் கணினி பொறியியல் படிக்கவே விரும்பினர்..

பண்ணிரண்டாம் வகுப்பு தேர்வில் மூவரும் நன்மதிப்பென்களைப் பெற்று ஒரே கல்லூரியில் சேர்ந்தனர். வானில் சிறகில்லாமல் பறந்தனர்.. அவர்களது நட்பு கல்லூரியிலும் தொடரப்போவதுக் குறித்து மகிழ்ச்சியில் திளைத்திருந்தனர்.

கல்லூரியில் அவர்கள் நட்பு வட்டாரத்தில் நுழைந்தவன் தான் வினோத். மிகவும் கலகலப் பேர்வழி.. யாரையும் தனதுப் பேச்சினால் நொடியில் கவர்ந்திழுக்க கூடியவன். ஆனால் சாஹித்யவிற்கு அவன் மேல் ஏனோ ஆரம்பத்திலிருந்து நல்ல எண்ணம் கிடையாது அவள் தோழிகளை அவளிடமிருந்து பிரிக்க வந்த வில்லனாகவே அவனை கருதுவாள். ஆதலால் சிரிது ஒதுங்கியே இருப்பாள். ஸ்வேத்தா மனிதர்களை எடைப் போடுவதில் சிறந்தவள். சாஹித்யா யாரையும் ஒரு தூரத்திலையே நிறுத்தி வைப்பவள். ஆனால் சரண்யா அப்படி கிடையாது யாரையும் எளிதில் நம்பி விடுவாள். ஆதலால் அவளை இவர்கள் இருவரும் தனியே விட்டு எங்கும் செல்லமாட்டர்.

நாட்களும் விரைந்து சென்றன. கல்லூரி இறுதி ஆண்டிற்கு அடி எடுத்து வைத்தனர் மூவரும். அப்பொழுது தொடங்கியது இவர்களுக்குள் கருத்து வேறுபாடு. சாஹித்யாவிற்கு மற்ற இருவரும் தன்னிடம் எதையோ மறைப்பது போல் தோன்றத் தொடங்கியது இருந்தும் தனது தோழிகளின் மேல் உள்ள நம்பிக்கையால் பெரிதாக அவள் அதை எடுத்துக் கொள்ளவில்லை.

சாஹித்யா ஒரு நாள் மனது சரியில்லை என்று அவள் நண்பர்களை (நண்பிகள்னு சொல்லனுமோ :P ) வெளியே செல்ல அழைத்தாள்.. ஆனால் இருவராலும் வர இயலவில்லை.. இவள் மட்டும் திருவான்மியுர் பீச் வறைச் சென்றாள்.. மனது பாரமாக இருக்கும் பொழுது அவள் செல்வது அங்கேயே!

அவளுக்கு அங்கு ஒரு அதிர்ச்சி காத்திருப்பது தெரியாமல் கரையோரமாக நடந்துக் கொண்டிருந்தாள்.. தூரத்தில் அவளது தோழிகள் போல இருவர் இருந்தனர்.. கூடவே ஒரு இளைஞனும்..

“யாரு டா இது நம்ம வானரங்க மாதிரி இருக்குதுங்க.. பக்கத்துல போய் பாக்கலாம்” னு தனக்கு தானே பேசிக் கொண்டு அவர்களிடம் சென்றாள்.

(வாங்க நாமளும் என்ன நடக்க போகுதுனு போய் பார்க்கலாம்)

ஸ்வேத்தா “இவ்ளோ நாள் ஏன் சொல்ல’ல ரெண்டு பேரும்?” என சரண்யாவைப் பார்த்து முறைத்துக் கொண்டே வினோத்திடம் கேட்டாள்.

“இல்ல ஸ்வே நீயும் சஹியும் என் கிட்ட ஒரு லிமிட் ஓட தான் இருப்பிங்க.. எனக்கே தெரியும் அது.. அதான் சொல்ல’ல” என தயங்கிக் கொண்டே சொன்னான்.

சரண்யா ஏதொ சொல்ல வரும் பொழுது அவளை முறைத்து “நீ பேசாத.. எவ்ளோப் பெரிய விஷயம் மறைச்சிருக்க..” என ஸ்வேத்தா சாடவும் கப் ச்சுப் என அமைதியானாள் மற்றவள்.

“இந்த லவ் மேட்டர் இப்போதைக்கு சஹிக்கு தெரிய வேண்டாம் “என ஸ்வேத்த சொல்லி முடிக்க.. சாஹித்யா அவர்கள் எதிரில் துளைக்கும் பார்வையோடு வந்து நின்றாள்..

சாஹித்யாவின் கண்களில் வலி மட்டுமே..

இப்பொழுதும் அவள் மனம் அவ்வலியை உணர்ந்தது.. தனது உயிர் தோழிகளால் ஒதுக்கப்பட்ட வலி. தலையை உலுக்கிக் கொண்டு தனது வேலையைப் பார்க்க சென்றாள். சாஹித்யா பூனேவிலுள்ள ஒரு mncயில் வேலை செய்கிறாள். மூன்று மாதத்திற்கு ஒரு முறை வீட்டிற்கு சென்று வருவாள். சரண்யவிற்கு திருமணம் என சரண்யாவின் அன்னை அழைத்து கண்டிப்பாக வரவேண்டும் என மிகவும் வருந்தி அழைத்ததால் அவரின் சொல்லிற்காக (அப்படி அவளுக்கே அவள் சொல்லிக் கொள்வது.. என்ன தான் இருந்தாலும் அவளுடைய உயிர் தோழி ஆயிற்றே) சென்னைக்கு கிளம்பிக் கொண்டிருகிறாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.