(Reading time: 19 - 37 minutes)

2017 போட்டி சிறுகதை 60 - காதல் வெண்ணிலா கையில் சேருமா? – கீர்த்தனா

This is entry #60 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - சூழ்நிலை கதை - கதை தொடக்கத்தில் இருந்து தொடர்க... / முடிவுக்கேற்ற கதை

எழுத்தாளர் - கீர்த்தனா

 Love

ழைய மாணவர்கள் தினத்தை ஆர்ப்பாட்டத்துடன் அனுபவித்துக் கொண்டிருந்தவர்களிடையே திடீரென ஒரு அமைதி... அந்த விசாலமான அறையின் வாசலின் நின்ற உருவத்தின் வசீகரமும், கம்பீரமும் அவர்கள் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்திருந்தது...

மெல்ல அமைதியை கிழித்துக் கொண்டு ஒரு குரல் ஒலித்தது...

"இது யாருன்னு தெரியலையா? எண்ணெய் வச்சு சப்புன்னு வாரின முடியோட, நீள மூக்கோட இருந்த அவன் மஹத்ரு. கதிர் சொல்லி முடித்தவுடன் அந்த அறையில் ஊசி விழுந்தால் கூட கேட்கும் அளவு அமைதி சில நிமிடங்களுக்கு. மஹத்ருவின் கண்கள் ஒரு முறை அந்த அறையையே சுற்றி வந்தது. இப்பொழுது இந்த கண்களில் தெரியும் சிநேஹபாவம் சில வருடங்களுக்கு முன்பே தெரிந்திருந்தால் என் மனம் பல வலிகளை சுமந்திருக்காது. நினைக்கக் கூடாது என நினைத்தாலும் புண்பட்ட மனம் அந்த நாளின் நினைவுகளை நோக்கி சென்றது. அப்பொழுதாவது அவன் வலிகள் குறைகிறதா என பார்ப்போம்.

செப்டம்பர் 2007:

கல்லூரியா பூங்காவா என வியக்கும்படி எங்கும் பசுமை எதிலும் பசுமை.கல்லூரி தாளாளர் இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வாரின் தம்பி மகன்.கேட்க வேண்டுமா இயற்கையை போற்றக் கூடிய குடும்பத்தில் இருந்து வந்தவரால் எப்படி இயற்கைக்கு துரோகம் செய்ய மனசு வரும்.இயற்கையை மாசுபடாமல் காப்பாற்ற தன்னாலான முயற்சி செய்தார்.

அந்த புகழ்பெற்ற கல்லூரியில் தன் கால் தடத்தை பதித்தான் மஹத்ரு. எங்கிருந்தோ சில்லென்ற காற்று வீசியது.முதன் முதலாக வெங்காயப்பட்டி என்ற கிராமத்தில் இருந்து கல்லூரிப் படிப்பை படிக்க வந்தவனுக்கு வானமும் மழை தூறலால் ஆசி தெரிவித்தது.

வகுப்பை கண்டு பிடித்து உள்ளே நுழைந்தவுடன் அங்கு அமர்ந்திருந்தவர்களை பார்த்தான்.அவர்கள் கண்களில் மருந்துக்கு கூட சிநேஹபாவம் தெரியவில்லை. மாறாக தெரிந்தது என்னவோ ஏளனம் தான். அனைவருமே அவனை பார்வையால் ஒதுக்கினர். பின்னே எண்ணெய் வழிய படிந்து சீவிய தலை,பிறந்ததில் இருந்தே இருக்கும் நீளமூக்கு,சோடாபுட்டி கண்ணாடி, ரூபாய் 100க்கு தெருவோர கடைகளில் விற்கும் சட்டை என உள்ளே நுழைந்தவனை நண்பனாக ஏற்றுக் கொள்ள அங்கு யாரும் தயாராக இல்லை.

வகுப்பில் முதல் பெஞ்சிலேயே அமர்ந்தான்.அவன் அமர்ந்தவுடன் அங்கு ஏற்கனவே அமர்ந்திருந்த  ஒருவனும் “எங்கிருந்துதான் வருதுங்களோ” என முணுமுணுத்தபடியே எழுந்து அடுத்த பெஞ்சிற்கு சென்று விட்டான்.மஹத்ரு மனதில் சுள்ளென்ற வலி பரவியது. பிறந்ததிலிருந்தே அவர்கள் வீட்டில் முடிசூடா இளவரசனாக வளர்க்கப்பட்டவன். அவனுக்கு அவன் பெற்றோர் தேடித் தேடி அந்த மஹாவிஷ்ணு பெயரான மஹத்ரு  என்ற நாமம் சூட்டினர். பள்ளியிலும் விளையாட்டிலும் முதலாக திகழ்ந்ததால் அனைவருக்கும் பிரியமான மாணவனாகி போனான். இப்படி சூழ்நிலையில் வளர்ந்தவனுக்கு இவர்கள் ஊதாசீனம் மனதுக்குள் ரணத்தை ஏற்படுத்தியது.

ஆசிரியர் வகுப்பறைக்குள் நுழைந்தவுடன் கசமுசா எனப் பேசிக்கொண்டிருந்த அனைவரும் அமைதி ஆகினர்.

"அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.நம் வாழ்வில் மறக்கமுடியாத நாட்கள் என்றால் அது கல்லூரி காலமாகத் தான் இருக்கும். எனவே நல்லா என்ஜாய் பண்ணுங்க.அப்பப்போ படிக்கவும் செய்ங்க அரியர் இல்லாம இருக்க" என ஆசிரியர் சிரிப்புடன் சொல்ல ஒரு குறும்புக்கார மாணவன் "அரியர் இல்லாத மனிதன் அரை மனிதன்" எனக் கூற வகுப்பறையில் சிரிப்பலை உண்டானது."இப்போவே ஆரம்பிச்சுட்டீங்களா" என சிரித்துக் கொண்டே கேட்ட அந்த ஆசிரியர் அனைவருக்கும் பிரியமான ஆசிரியர் ஆகிப்போனார் அந்த நொடியிலிருந்தே.

"எல்லாரும் எப்படியும் உங்களுக்குள்ள அறிமுகம் ஆகிருப்பிங்க.எனக்குத் தெரிய வேணாமா உங்களைப்பத்தி.அதனால எல்லாரும் அவங்களை பத்தி சொல்லுங்க.முதல்ல கடைசில இருந்து வருவோம்" என கூறினார்.

"ஏன் சார் இங்க இருந்து? இதுக்குத்தான் நான் மொத பெஞ்சுல உட்காரமா லாஸ்ட்ல வந்து உக்காந்தேன்.என்ன சார் இப்படி பண்றிங்களே?" எனப்  பாவமாக கேட்க அந்த வித்தகரோ இவனை விட ஜெகஜால கில்லாடிகளை பார்த்தவராயிற்றே  "நானே லாஸ்ட் பெஞ்சுல தான் உக்காந்திருந்தேன்.உன்னைவிட அட்டகாசம் பண்ணுவேன்.இப்போ  உன் முன்னாடி நின்னு கிளாஸ் எடுக்கலையா?அதெல்லாம் உன்னாலையும் முடியும்" என  அவர் பாட்டுக்கு அடித்து விட இவனும் அவனை பற்றி சொல்ல ஆரம்பித்தான்.

அனைவரும் அவர்களை பற்றி சொல்லி முடிக்க மஹத்ரு முறை வந்தது.அவனை பற்றி சொல்ல ஆரம்பிக்கும்போதே

"எக்ஸ்க்யூஸ் மீ சார்" என குரல் கேட்க அனைவரும் திரும்பி வாசலை பார்த்தனர்(அங்க வேற யாரு இருக்க போறா எல்லாம் நாம ஹீரோயின் தான்).

அங்க இருந்த எல்லா பசங்க மனசும் லப்டப் அதிகமாக அடிக்க,  அப்படியே அவங்க அவங்களுக்கு பிடிச்ச டூயட் சாங்க்கு வெளிய நின்ன தேவதை கூட டூயட்டே ஆடிட்டாங்கன்னா பாத்துக்கோங்களேன். அப்போ கூட சார் இன்னும் அவளை உள்ளே கூப்பிடலை.

"என்னம்மா பர்ஸ்ட் டேவே லேட்டா.சரி சரி உள்ள வந்து உக்காரு"

"நீ ஏன்பா நிறுத்திட்ட சொல்லு" என அவர் சொன்னவுடன் தான் அனைவரும் நிகழ்காலத்துக்கு திரும்பினார் மஹத்ரு உட்பட.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.