(Reading time: 19 - 37 minutes)

ஹாகன்யாவிற்கும் முதலில் அவனை அடையாளம் தெரியவில்லை." அவன்தாண்டி மஹத்ரு" என  தோழி ஒருத்தி காதை கடிக்க அவள் கண்களில் வியப்பு.இன்னொருத்தியோ "ஜஸ்ட் மிஸ்டி.எனக்கு லாஸ்ட் மந்த்தான் மேரேஜ் ஆச்சு.இல்லைன்னா மஹத்ருகிட்ட "கல்யாணம்தான் கட்டிட்டு ஓடிப்போலாமா"ன்னு பாட்டவே ப்ரொபோஸ் பண்ணிருப்பேன். ஹ்ம்ம்ம் நான் கொடுத்து வைச்சது அவ்வளவு தான்" என புலம்பினாள்.

இன்னும் ஒருபடி மேல போய் சிலர் "நமக்கெல்லாம் மேரேஜ் ஆகிடுச்சு இல்லை நிச்சயம் முடிஞ்சுடுச்சு. இப்போ அதிர்ஷ்டம் இருக்கறது நம்ம கன்யாவிற்கு மட்டும் தாண்டி.மேடம் மட்டும் தான் இப்போதைக்கு பிரீ பேர்ட்(bird)" என கூறியவர்களை மஹாகன்யா முறைத்தாள். அவர்கள் கூறிய நேரத்தில் அனைத்து கடவுள்களும் "அப்படியே ஆகட்டும்" என கூறினரோ யாம் அறியேன்.

கல்லூரி காலத்தில் இப்படியொருவன் இருந்ததே இவங்களுக்கெல்லாம் தெரியாது.இப்போ பேச்சைப் பாரு.ஆளு பாக்கிறமாறி ஆனவுடனே அவன் பின்னாடியே போய்டுவாங்களா? முன்ன இவனை என்னெல்லாம் சொல்லி கலாயிச்சிருப்போம்.அதெல்லாம் கொஞ்சம் கூடவா ஞாபகம் வரலை இவங்களுக்கு என உள்ளுக்குள்ளே பொருமிக் கொண்டிருந்தாள். உள்ளே நுழைந்ததிலிருந்தே அவளையே பார்த்து கொண்டிருந்த அவனுக்கு, அவளுடைய பாவனைகள் அனைத்துமே ரசிக்கக் கூடியதாகவே இருந்தது.

அவர்கள் ஆடிட்டோரியம் செல்லும் நேரம் வந்தது.அவர்களின் பெற்றோர் அல்லது அவர்களின் துணைகள் அங்கு தான் காத்திருந்தனர் இவர்களுக்காக.

மஹத்ரு நேராக மஹாகன்யா தந்தையிடம் சென்று "வணக்கம் அங்கிள்.என்னை ஆசீர்வாதம் பண்ணுங்க" எனக் காலில் பணிய மாமனார் மனசுல மருமகன் அப்போவே நச்சுனு நங்கூரம் மாதிரி ஒட்டிகிட்டான்.

மஹாகன்யா இவனைப் பற்றி எப்பொழுதும் பேசியதில்லை. ஒரே ஒரு முறை  கல்லூரி சேர்ந்த புதிதில் இப்படி ஒரு பையன் இருக்கான் அவனை எல்லாரும் ஓட்டிகிட்டே இருப்பாங்க என சொன்னதோடு சரி.முன்பு அவள் கல்லூரி படிக்கும்போது வந்தபோதும் இவனை பார்த்ததில்லை.எனவே அவருக்கு இவனை அடையாளம் தெரியவில்லை.இருந்தாலும் இவனின் பெரிய மனித தோரணை,பணிவு எல்லாம் அவருக்கு பிடித்திருந்தது. அப்பொழுதே அவர் மனதில் ஆசை எழுந்தது.'நம்ம பொண்ணுக்கு பொருத்தமா இருப்பான்.நமக்கு இப்படி ஒரு மருமகன் வரணும் என்று.'(பயபுள்ள அதுக்குதான் வந்திருக்குன்னு உங்களுக்கு புரியாம போய்டுச்சே அங்கிள்)

"நீ யாருப்பா எனக்கு தெரிலையே"

"நான் மஹாகன்யா கூட படிச்சவன் அங்கிள்"

"அப்படியாப்பா.எனக்குதான் ஞாபகம் வரலை.வயசாயிடுச்சில்ல."

"உங்க ஞாபக சக்தி அபாரம் அங்கிள்.நான் உங்களை இதுக்கு முன்னாடி சந்திக்க சரியான சந்தர்ப்பம் அமையலை"

"இப்போ என்னை சந்திக்க வந்த காரணம் என்னப்பா?"

"அங்கிள் நான் மஹத்ரு.இது தான் என கடந்த காலமென கன்யாவை சந்தித்தது முதல் கடைசி நாள் வரை சொல்லி, தற்போழுது அவன் இருக்கும் நிலையையும் அவன் ஆற்றி வரும் பணிகளையும் சொல்லி முடித்தான்"

கேட்ட அவரோ "எனக்கு கண்ணே கலங்குதுப்பா.இப்படி ஒரு சூழ்நிலையில் இருந்து நன்றாக படித்து நல்ல நிலையிலிருப்பதை நினைத்து பெருமையாக உள்ளது. என் மக அவ மனசுல தோன்றதை யார்கிட்ட பேசறோம் என்ன பேசறோம்னு புரியாம பேசிடுவா.அவ பேசினதை மனசுல வைச்சுக்காதப்பா.

"என் கன்யாவை பத்தி எனக்குத் தெரியாதா அங்கிள். அவ பேசினதை நான் அப்பவே மறந்துட்டேன்" என சொல்ல பெண்ணைப் பெற்றவர் மனமோ குளிர்ந்தது.

“என் மக உனக்குத் தான்" என சத்தியமே செய்தார்.

இதை அவனே எதிர்பார்க்கவில்லை.அவனுடைய மகிழ்ச்சியை அதிகப்படுத்தவென வானமும் பூத்தூறல்களால் மகிழ்ச்சியை தெரியப்படுத்தியது.

நாட்கள் செல்ல அதன் பிறகு வேலைகள் மளமளவென நடந்தேறின.அங்கு அனைவருமே கன்யாவின் மறுப்பை அலட்சியப்படுத்தினர். தான் கேட்டு மறுக்காத தந்தை கூட இந்த திருமண விஷயத்தில் பிடிவாதமாக இருப்பதை பார்த்து வியந்தாள்.இவன் அப்படி என்ன  சொக்குப்பொடி போட்டு அப்பாவை மயக்கிருப்பான்? என தாறுமாறாக யோசித்தெல்லாம் பார்த்தாள்.எங்கே அவள் கேள்விகளுக்கான விடைதான் கிடைக்கவில்லை.

அன்று தோழிகள் கிண்டலடிக்கும் போது முறைச்சுட்டு, இப்போ அவன் கூடவே கல்யாணம்னு எப்படி கூப்பிட?! அதுவும் இது என் சம்மதிமில்லாமல் நடக்கும் திருமணம் என அவள் யாரையும் அழைக்கவில்லை.ஆனால் நேர்மாறாக மனம் கவர்ந்தவளையே கைப்பிடிக்கபோகும் உற்சாகத்தில் மஹத்ரு  அனைவரையுமே அழைத்தான்.

பத்திரிக்கையை பார்த்த அனைவருக்குமே வியப்பு. தோழிகள் மொபைலில் வாழ்த்து சொல்ல அழைக்க அவள் யார் அழைப்பையும் ஏற்கவில்லை. இருந்தாலும் மகிழ்வுடனே திருமணத்தில் பங்கேற்க வந்திருந்தனர்.

திருமணத்திற்காக அவன் பார்த்து பார்த்து இவளுக்கு வாங்கி கொடுத்ததை பார்க்கும்போதே இவள் மனதில் அந்த கள்வன் குடி புக ஆரம்பித்து விட்டான்.அதை ஏற்கும் நிலையில் தான் அவள் இல்லை.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.