(Reading time: 19 - 37 minutes)

சுற்றி நண்பர்களின் அவனை பொறுத்தவரை அவர்கள் அனைவரும் நண்பர்கள் தானே. அவர்களின் அட்டகாசத்தை ரசித்தான்.சுற்றுலாவில் தனியாகவே இருந்தாலும் சென்ற இடங்களை ரசித்து பார்த்தான்.தனிமை கூட இனிமையாகவே கழிந்தது அவனுக்கு. ஆனால் அவனுக்கு எதிர்பார்த்த வாய்ப்பு தான் அமையவில்லை. மஹாகன்யாவிடம் காதலை சொல்ல இயலவில்லை. ஏனெனில் மஹாகன்யா எப்பொழுதும் தோழிகள் புடை சூழ இருந்ததே காரணம். கடைசி வருடம் இந்த வருடம் படிப்பு முடிந்தால் பிரிந்து விடுவோம் என பிரிவை எண்ணி சோகத்தில் மூழ்கமால், அனைவரும் சேர்ந்து இருக்கும் நாட்களை மகிழ்ச்சியாக கழிக்கலாம் என்றெண்ணி மகிழ்வுடன் கொண்டாடினர் சுற்றலா நாட்களை.

கடைசி வருடம் வளாகத்தேர்வில் எப்படியாவது வேலை வாங்கி விடவேண்டும் என எண்ணி முழு மூச்சுடன் பயிற்சியில் ஈடு பட்டனர்.வகுப்பில் 40 பேரில் 35 பேருக்கு வேலை கிடைத்தது. மற்ற 5 பேரும் அரியர் வைத்திருந்ததால் அவர்களுக்கு கிடைக்கவில்லை. மஹத்ரு மற்றும் மஹாகன்யா உட்பட 10 பேருக்கு ஒரே பன்னாட்டு நிறுவனத்தில் வேலை கிடைத்திருந்தது. பிரிவு உபச்சார விழாவில் மனம் நிறைய சோகம் இருந்தாலும், வளர்ந்து விட்ட தொழிநுட்பத்தின் உதவியுடன் அனைவரும் சேர்ந்தேயிருக்கலாம் என எண்ணி மகிழ்வுடன் இருந்தனர்.

4 வருடமாக யாருக்கும் சொல்லாத காதலை சொல்லி விட எண்ணி மஹத்ரு மஹாகன்யா தனியாக இருக்கும் தருவாயில் அவளிடம் வந்தான்.

"ஹாய்"

"ஹாய்.என்ன மஹத்ரு இதே கெட்டப்போடவா கம்பனிக்கு போகப் போறீங்க? இப்படியே வர்றிங்கன்னா அங்க வந்து எங்களை உங்க பிரெண்ட்ஸ்ன்னு சொல்லி அசிங்கப்படுத்திடாதீங்க. ஆமா எனக்கு ஒரு டவுட் இன்டெர்வியூல பர்சனாலிட்டிக்கு இம்போர்ட்டண்ட் கொடுப்பங்களே.உங்களுக்கு எப்படி வேலை கொடுத்தாங்க?எனக்கு ரொம்ப நாளா இந்த டவுட் இருந்தது.இன்னைக்கு தான் கேக்க சந்தர்ப்பம் அமைஞ்சுது"

"   "

“கொஞ்சமாவது மாறுங்க நீங்க இருக்க இடத்துக்கு தகுந்தமாதிரி. அப்போதான் எல்லாரும் உங்களை மதிப்பாங்க”

"   "

"நானே பேசிட்ருக்கேன். நீங்க ஏதோ சொல்ல வந்தமாதிரி இருந்துச்சு.சொல்லுங்க"

"இல்லை.ஒண்ணுமில்லை.பை"

மனதில் உள்ளதை பட்டென்று முகத்தைப் பார்த்து சொல்லியே பழக்கப்பட்டவள். இந்த கேள்விகள் காதல் சொல்ல வந்த அவன் இதயத்தை  எந்த அளவு புண்படுத்தியிருக்கும் என அந்த பேதைக்கு புரியாமலே போயிற்று.

ஹத்ரு அவன் கல்லூரி நண்பர்களுடன் தொடர்புகொண்டு 5 வருடம் ஆகிற்று.எதேச்சையாக கல்லூரி பழைய மாணவர்கள் தினத்தை பார்த்து எல்லாரையும் சந்திக்கும் ஆவல் மனதில் எழ, உண்மையில் அவளை சந்திக்கும் ஆவலால்தான் கிளம்பிவந்தான்.

செப்டம்பர் 2016:

"இப்போ என்ன பண்ணிட்ருப்பா?அவளுக்கு மேரேஜ் ஆகிறுக்குமா?" என விடை தெரியா கேள்விகளின் விடையை தேடி வந்தான்.

கதிர்,வினோத்,பாலு என அவன் வகுப்பில் படித்த அனைத்து மாணவர்களும் அவனிடம் வந்து பேச, அவன் கண்களோ அவளைத் தான் தேடியது.

"ஏன்டா கம்பெனி கூட ஜாயின் பண்ணாம எங்கடா போயிட்ட?"

"எப்படிடா இப்படி ஆளே மாறிப் போய் வந்திருக்க?"

"இவ்வளவு நாள் என்னடா பண்ண?"

"எங்கடா ஒர்க் பண்ற?"

இப்படி பலப் பல கேள்விக் கணைகள் அவனை நோக்கி அன்புடன் பாய, அவர்களின் கேள்விக்கு பொறுமையாக பதிலளிக்க ஆரம்பித்தான்.

"இப்போ நான் ஒரு கம்பெனி ரன் பண்ணிட்ருக்கேன்" என அவன் கம்பெனி பெயர் சொல்ல, அனைவரும் வாயை பிளந்தனர்.

"எனக்கு அங்க ஒர்க் பண்ண பிடிக்கலை.அதான் அங்க ஜாயின் பண்ணலை.வேற இடத்துல வேலை கிடைத்தது.அங்க போய்ட்டேன்" என கூறினான்(அந்த வேலை கிடைக்க எத்தனை கம்பெனி ஏறி இறங்கியதையோ,பல நாட்கள் பட்டினியாக வெறும் தண்ணீர் மட்டும் குடித்து ஓட்டியதையோ சொல்லவில்லை).

அதற்கு கோபி "ஏன்டா மாப்ள அங்கேலா வந்தா நாங்க ஏதாவது உன்னை மறுபடியும் கலாயிப்போம்ன்னு வரலையா?" கேட்க வேகமாக தலையை ஆட்டி மறுத்தான். உள்ளுக்குள் அதுவும் ஒரு காரணம் என எண்ணியதை வாய்விட்டு சொல்லி அவர்கள் மனதை புண்படுத்த விரும்பவில்லை. அது மட்டுமா கடைசி நாள் அவள் கேட்ட கேள்விகள் தான் காரணம் என அவன் உள்மனது சொன்னதை அவன் அலட்சியப்படுத்தினான்.

"இல்லைடா.நல்ல ஆபர் கிடைச்சது.அதான் வேற கம்பெனிக்கு போய்ட்டேன்"

அவர்கள் பழைய கதையை பற்றி பேசிக் கொண்டிருந்தனர்.

திடீரென ஒருவன் ஞாபகம் வந்து அவனுடைய கிராமத்தை பற்றி கேட்க "நானே என் கிராமத்தை தத்தெடுத்து அங்க இலவச கல்வி,மருத்துவ வசதி செய்து கொடுத்திருக்கேன்" என சொல்ல அனைவரும் அவனை பாராட்டினார்.

பாராட்டு மழையில் நனைந்து கொண்டிருந்தவனை ஆனந்த மழையில் நனைய வைக்கவே உள்ளே நுழைந்தாள் மஹாகன்யா. அவளைப் பார்த்தவுடன் அவனுக்கு மிக்க மகிழ்ச்சி ஏனென்றால் இன்னும் அவள் செல்வியாக இருக்கும் காரணத்தால்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.