(Reading time: 19 - 37 minutes)

ணமேடையில் அமர்ந்திருந்தவளின் கண்களில் கண்ணீர்த்துளிகள் எட்டிப் பார்த்தன... இதோ இன்னும் சில நிமிடங்களில் அருகே இருக்கும் இவன் அவளுக்கு தாலி அணிவித்து கணவனாக போகிறான்... நினைக்கும் போதே சுளீர் என வலித்தது.

அந்த வலிக்கு காரணம் அவனை பிடிக்காமல் என்று சொல்ல முடியாது. இவ்வளவு நாள் இப்படி தவறாக நினைத்து கொண்டிருந்த ஒருவனை வாழ்க்கை துணையாக ஏற்றுக் கொள்ளப் போகும் குற்ற உணர்ச்சியால் வந்த வலி.அவனை நினைத்து அவனுக்காக எழுந்த வலி.

இன்று அவனை எல்லாருக்கும் பிடிக்கும் அவளுக்கும்தான் என ஒத்துக்கொள்ள தான் அவள் தயாராகயில்லை. அவனுக்காக அவனுடைய வலியை தன் வலியாக உணர்ந்த நேரத்திலேயே, அவள் மனதில் அவன் இருப்பதை உணர்ந்து கொண்டிருக்கலாம்.

ஐயர்தான் கெட்டிமேளம் கெட்டிமேளம் சொல்லி கொண்டிருந்தார்.

திடீரென இரு கரங்கள் அவள் கழுத்தில் தாலி கட்டும் நேரத்தில் தான் நிகழ்காலத்திற்கு திரும்பி வந்தாள்.

அதன்பிறகு சடங்குகள் ஒவ்வொன்றாக நடைபெற, அனைத்தையும் ஏதோ செய்றேன் என்ற பாவனையில் செய்து முடித்தாள். மஹத்ருவிற்கு அவளின் மனம் புரிந்தாலும் மாற்றிவிடலாம் என்ற நம்பிக்கை இருந்தது.

பரிசுடன் மேடையேறிய தோழிகள் அனைவருமே அவளை கலாய்த்து விட்டனர்."ஏன்மா அன்னைக்கு நாங்க சொன்னதுக்கு முறைச்ச.இன்னைக்கு என்ன பண்ண ப் போற?" என கேட்க இவளோ இப்பொழுதும் முறைக்கத்தான் செய்தாள் அவர்களை. இதுக்கெல்லாம் நாங்க அசருவோமா என்ற ரீதியில் தோழிகள் அவர்களை வாழ்த்தி விடைபெற்றனர்.

விடை பெறுவதற்குமுன் அவளிடம் வந்த அவள் உயிர் த்தோழி உமா மட்டும் "கன்யா பழசை நினைக்காத. பாஸ்ட் இஸ் பாஸ்ட்.அதெல்லாம் மறந்திடு. இப்போ மஹத்ரு உன் கணவர்.புரிஞ்சு நடந்துக்கோ.உனக்கு அமைஞ்சுருக்க நல்ல வாழ்க்கையை நீயே அழிச்சுக்காத" என அறிவுரை கூறி விடைபெற்றாள்.

முதல் இரவு அனைவருக்குமே ஒரு எதிர்பார்ப்பையும் பயத்தையும் ஏற்படுத்தும் இரவு.மஹத் காத்திருக்க கன்யா அறைக்குள் நுழைந்தாள்.

"கன்யா நீ இங்க மேல படுத்துக்கோ. நான் கீழ படுத்துகிறேன்.இன்னைக்கு ஒரு நாள் மட்டும் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ.நாளைக்கு நான் வேற ரூம்ல போய் படுத்துகிறேன்.யாரையும் மேல வர வேண்டாம்னு சொல்லிடறேன். நீ உன் இஷ்டப்படி இங்க இருக்கலாம்." என சொல்லிக் கொண்டே போக அவள் ஆச்சரியமானாள்.

" என்னடா மஹா?" எப்பொழுதும் மனதுக்குள் சொல்லும் பெயரை அவனை அறியாமல் உச்சரித்தான்.

அவனின் மஹாவை கேட்டவளுக்கு கண்கள் தானாக அருவியை உற்பத்தி செய்தது.

அவளின் கண்ணீர் அவனை உலுக்கியது.

"ஏன்டா மஹா அழற?சொல்லுடா.நான் உன் நண்பன் தானே?" எனப் பதறி கேட்க இன்னும் அவள் கண்களில் கண்ணீர் அருவி உற்பத்தி ஆகியது.அவளின் கண்ணீரைப் பார்த்தவன் "இன்னைக்கு காலைல தான் உன்னை கண் கலங்க விடமாட்டேன்னு சத்தியம் பண்ணேன்.ஆனால் இன்னைக்கு நைட்டே இப்படி நீ அழறதை பாக்கறனே. ஐயோ இதுக்குதான் உன்னை பார்த்த முதல்நாள்ல இருந்து லவ் பண்ணி கல்யாணம் பண்ணிகிட்டானா?!" என அவன் சொல்ல அவள் மனம் தெளிந்தது.

"இல்லை இல்லை நான் அதுக்கு அழலை.எனக்கு இந்த மேரேஜ் பிடிக்கலைதான்.ஆனால் நான் ஆசைப்பட்ட மாதிரி இங்க இருக்க முடியாதோன்னு நினைச்சேன்.ஆனால் இப்போதான் அம்மா என்கிட்ட நீ என் மருமகள் இல்லைடா மகள் அப்படி சொன்னாங்க. அதையே நினைச்சிட்டு உள்ளே வந்தா நீங்களும் எனக்கு பிடிச்ச மாதிரி நடந்துக்கணும்ன்னு நினைக்கறீங்க.நான் நிஜமாலுமே லக்கிதான்"

"காலேஜ் டேஸ்ல உங்களை நானும் எவ்வளவோ அலட்சியப்படுத்திருக்கேன்.அதெல்லாம் பட்டாம்பூச்சியா சுற்றி திரிந்த பக்குவப்படாத பொண்ணோட வார்த்தைகள்.இப்போ கூட அப்படி தான் இருந்தேன். ஆனால் உமாவோட அட்வைஸ் கேட்ட பிறகு தான் எனக்கு மனசு தெளிவாச்சு"

" அப்போ உமாக்கு ஒரு ஸ்பெஷல் ட்ரீட் கொடுத்திடலாம்.”

"இவ்வளவு காதலை வைச்சுக்கிட்டு என்கிட்ட சொல்லாம என் அப்பாகிட்ட சொல்லிருக்கீங்க. போங்க "எல்லாமே முடிஞ்சு போச்சு. என் மூஞ்சியிலேயே முழிக்காதீங்க...” என்றாள் அவள்.

அதன் பிறகு அவளை கொஞ்சி கெஞ்சி சமாதானப்படுத்தி வாழ்க்கையை துவங்கினான். இனி அவர்கள் வாழ்வில் வசந்தம் மட்டுமே.

வாழ்க்கைக்கு தோற்றம் முக்கியம் தான்.ஆனால் தோற்றம் மட்டுமே முக்கியமில்லை. தோற்றத்தை மாற்றிக்கொள்ளலாம்.ஆனால் உள்ளிருக்கும் மனதை?!!! தோற்றம் அழகாக இருந்து வக்கிர மனம் கொணடவராக இருந்தால், வாழ்க்கை நகரம் தான்.எனவே மனதிற்கு முக்கியத்துவம் கொடுங்கள்.வாழ்க்கை அழகிய பூஞ்சோலை தான்.

 

This is entry #60 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - சூழ்நிலை கதை - கதை தொடக்கத்தில் இருந்து தொடர்க... / முடிவுக்கேற்ற கதை

எழுத்தாளர் - கீர்த்தனா

{kunena_discuss:1083}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.