(Reading time: 5 - 9 minutes)

2017 போட்டி சிறுகதை 59 - கணவனின் மறுபக்கம் - தஞ்சை சீனி அரங்கநாதன்

This is entry #59 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - தலைப்பு சார்ந்த கதை - கணவனின் மறுபக்கம்

எழுத்தாளர் - தஞ்சை சீனி அரங்கநாதன்

Husband

மனைவி அமைவதெல்லாம்,

இறைவன்கொடுத்த வரம்

ரேடியோ எப்.எம்.மில் பாடலைக் கேட்கும்போது மாலதிக்கு கணவன் அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த சாபமா என்று கேட்கத் தோன்றியது.மாலதிக்கும் கணவன் சுந்தருக்கும் திருமணமாகி ஐந்து வருடங்களாகி விட்டது. வீட்டீல் தவழ்ந்து விளையாட மழலை செல்வம் இன்னும் வரவில்லை.

மாமியார் சிவகாமிக்கு பொழுது விடிந்து, பொழுது போனால் இந்த கவலை பெருங்கவலையாகி, சுற்றியுள்ள சாதி சனம், தன்னை கேலி பேசுவது போல் மருமகளை தினம், தினம் கரித்துக் கொட்டுவாள். மாலதியும் விதியை நினைத்துப் பொறுத்து போவாள்.

இத்தனைக்கும் கணவன் சுந்தர் வாய் திறக்கவே மாட்டான். அம்மாவின் சொல்லே வேத வாக்குப் போல நிப்பான். மாலதிக்கு தன் மீதே வெறுப்பு வந்தது.

என்ன வாழ்க்கை இது. பிள்ளைப் பெற்றுக் கொள்வது தான் வாழ்க்கையா, மலடி என்றால் வெறுத்து ஒதுக்குவதா, தனக்கு யாரும் துணையில்லையே.

இறைவா ஏன் இந்த சோதனை என்று கண்ணிர் வீட்டாள்.

ன்று காலை வீட்டீல் பூகம்பமே தோன்றி விட்டது.சமீபத்தில் அடித்த வர்தா புயலில் சிக்கிய சென்னை மரங்கள் வீழ்ந்தது போல் அந்த செய்தி அவளைத் தாக்கியது.

அந்த அம்மா பிள்ளை தன் கணவனின் வீட்டார் ஒன்று கூடி ஒரு முடிவு எடுத்து வீட்டார்கள். டவுன் ஆஸ்பத்திரிக்குச் சென்று மாலதியை சோதனை செய்வது, பிள்ளைப் பிறக்க வாய்ப்பில்லை என்று டாக்டர் சொல்லி விட்டால் மாலதியை ஒதுக்கி வைத்து, சுந்தருக்கு வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்வது என்று முடிவு செய்யபபட்டது. மாலதி வேண்டாத தெய்வமில்லை, மாலை சுந்தர் வந்ததும் ஆஸ்பத்திரிக்கு கிளம்பினார்கள். பிடிவாதமாக மாமியாரும் காரில் ஏறி கொண்டார். குடும்ப டாக்டர் ரஞ்சிதம் அவர்களை வரவேற்றார்

சுந்தர் அம்மா புலம்ப தொடங்க என் மருமகளைப் பாருங்கம்மா, என்று நீட்டி முழக்க ஆரம்பித்தார். மாலதியை பரிசோதித்த டாக்டர் மாலதியின் கையை பிடித்து குலுக்கியவாறு, யு ஆர் பெர்பெக்ட்லி ஆல் ரைட் டோன்ட் வொர்ரி என்று கூறினார்.

மாலதிக்கு போன உயிர் திரும்ப வந்தது போலிருந்தது. டாக்டர் அம்மாவிடம் நன்றியை சொல்லி விட்டு, வெளியே வந்தாள் மாலதி. மாமியாரிடம், அத்தை என்னிடம் ஒன்றும் குறையில்லையாம் என்றாள்.

என்ன டாக்டர் இப்படி சொல்லிட்டீங்க,

ஆமாம்மா, மாலதியை நன்கு பரிசோதனை பண்ணி விட்டேன் தேவைப்பட்டால் உங்கள் மகனையும் சோதனை செய்து விடலாம் என்றார்.

அத்தை முறைக்க, சுந்தர் தயங்க, என்ன சுந்தர் தயங்குறிங்க அம்மா பேச்சைக் கேட்டு வேறு திருமணம் என்றெல்லாம் பேசுகிறார்களாம் உங்கள் வீட்டில்,எதற்கும் உங்களையும் பரிசோதனை செய்து விடுவோம் என்றார் டாக்டர். வீணாக இன்னொரு பெண்ணின் வாழ்க்கையும் கெட வேண்டாம் என்றார் அழுத்தமாக.

மாலதிக்கு இதை கேட்க சந்தோஷமாக இருந்தது. எதிர்பார்த்தது போலவே சுந்தருக்கு மருத்துவ பரிசோதனையில் குழந்தை பிறக்க வாய்ப்பில்லை என்று கூறப்பட்டது.

என்னம்மா, உங்கள் பையனிடம் குறை வைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்த மருமகளைத் திட்டுகிறீர்களே, இனி உங்களுக்கு குழந்தை வேண்டுமென்றால், ஒன்று தத்து எடுக்கலாம் இல்லை மாலதிக்கு ஒரு திருமணம் செய்து பெற்று எடுக்கலாம் என்றார் டாக்டர்.. உடனே மாலதி, டாக்டர் என்ன வார்த்தைச் சொல்லிட்டிங்க நாங்க தத்து எடுத்து வளர்க்கிறோம் இல்லை ஒருவருக்கொருவர் குழந்தையாக இருந்து விட்டுச் செல்கிறோம் என்றாள் ஆணித்தரமாக.

மருமகளின் வார்த்தையைக் கேட்ட அத்தை, மாலதி என்னை மன்னித்து விடும்மா இனி உன்னை குறை சொல்ல மாட்டேன் என்றாள்.

விடுங்க அத்தை நீங்க வேணும்னா அப்படி சொன்னிங்க ஊரார் பரிகாசம் செய்ததற்கு நீங்க என்ன பண்ணுவிங்க என்றாள். இப்போதெல்லாம் மாலதி வீட்டில் கொண்டாட்டம்தான், அனாதை ஆசிரமம் சென்று ஒரு பெண் குழந்தையை தத்து எடுத்து ‘மகாலட்சுமி’ என்று பெயரிட்டார்கள்.

குழந்தை பெயர் சூட்டு விழாவிற்கு டாக்டரம்மாவை அழைத்திருந்தாள் மாலதி.

நல்லவேளை டாக்டர் அன்று மட்டும் எனக்கு தகுதி இல்லையென்று ரிசல்ட் வுந்திருந்தால் நான் அனாதையாகி இருப்பேன் இந்த மகிழ்ச்சி கிடைத்திருக்காது உங்களுக்கு மிகுந்த நன்றி டாக்டர் என்றாள்.

மாலதி நீ நன்றி சொல்ல வேண்டுமென்றால் உன் கணவனுக்குத் தான் சொல்ல வேண்டும் என்றார்.

ஏன் டாக்டர்? என்றாள் மாலதி.

உன்னை பரிசோதிக்க அழைத்துச் சென்ற போது அவசர வழியாக வந்த உன் கணவர் டாக்டர் என் மனைவிக்கு சோதனையில் எந்த முடிவு வந்தாலும் அவளுக்கு குறையில்லை என்று சொல்லி விடுங்கள், மேலும் என்னை சோதனை செய்து எனக்குக் குறையுள்ளதாக தெரிவித்து விடுங்கள், அப்போதுதான் என்னை நம்பி வந்த என் அன்பு மனைவியை நான் நல்லபடியாக என் வீட்டில் வாழ வைக்க முடியும் மேலும் ஒரு குழந்தையை தத்து எடுக்குமாறு யோசனை சொல்லி விடுங்கள் என்றார். நானும் நல்லதிற்காக அவர் சொல்லியவாறு பொய் சொன்னேன்.

மாலதி இது வரை வாய் பேசாத கணவனின் மறு பக்கத்தைப் பார்த்து கண்ணிர் வீட்டாள்.

யார் மீது குறை இருந்தாலும் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து வாழ்வதே நல்வாழ்க்கை.என்னடைய முதல் போட்டிக் கதை படித்து விட்டு கருத்தகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.

 

This is entry #59 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - தலைப்பு சார்ந்த கதை - கணவனின் மறுபக்கம்

எழுத்தாளர் - தஞ்சை சீனி அரங்கநாதன்

{kunena_discuss:1083}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.