(Reading time: 3 - 5 minutes)

2017 போட்டி சிறுகதை 58 - நலம் நலமறிய ஆவல் - ரேவதிசிவா

This is entry #58 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - தலைப்பு சார்ந்த கதை - நலம் நலமறிய ஆவல்

எழுத்தாளர் - ரேவதிசிவா

(அனைவரின் நலத்திற்காக பயன்பட்ட ஒன்றின் கதை)

ன் அனுபவங்களை உங்களிடம் பகிர வந்திருக்கிறேன். "என்ன சுயசரிதையா! அதுக்கெல்லாம் எங்களுக்கு நேரமில்ல"....உங்களைவிட்டால் நான் யாரிடம்  என் மனக்குறைகளைப் பகிர்வது.அதற்காக நீங்கள் பயப்பட வேண்டாம். என் கதை, ,அரசியல்வாதியின் உரையைப்போல் இல்லாமல் விடைத்தெரியாக் கேள்விக்குப் பதில் எழுதும் மாணவனின் விடையைப்போல் இருக்கும் .

என் அனுபவத்தைக் கூறுவதற்க்கு முன்னால் என்னைப் பற்றியக் குறிப்பு...

நான் யார்? என்பதைக் கதையின் முடிவில் அறிவீர்கள்.என்னை யார்  உருவாக்கினார்கள்? என்பது எனக்குத் தெரியாது.ஆனால் பிறரின் பயன்பாட்டுக்காக உருவாக்கப்பட்டேன்  என்பதை மட்டும் அறிவேன்.ஆரம்பத்தில் எனக்குத் தற்பெருமை அதிகமாக இருந்தது.அதனால் மற்றவர்களை மதிக்காமல், அவர்களைப் பார்த்து ,"நான்தான் எப்பொழுதும் முன்னிலையில் இருப்பேன்.என்னைத் தொடர்ந்து வரவேண்டியவர்கள்தான் நீங்கள்.மரியாதையாக நடந்துக்கொள்ளுங்கள்" என்று அதட்டினேன். ம்...இப்பொழுதுதானே அனைத்தும் புரிகிறது.

பாருங்களேன்! இப்பொழுதும் என் பெருமையைத்தானே முதலில் கூறினேன். உங்களையும் கோபப்படுத்த விருப்பமில்லை.

ஆரம்பத்தில் அதிகம் பெருமைப்பட்டாலும் என்னுடையப் பணியை ஒழுங்காகதான் செய்தேன்.காலங்கள் மாறிவர  என்னுடையப் பயன்பாட்டைக் குறைத்தார்கள்.நான் ஒவ்வொருவராய்ப் பார்த்தப்பொழுதும்கூட யாரும் என்னை ஏற்கவில்லை. நானும் தமிழ்நாட்டில் பிறந்ததால்தான் நம் மக்கள், என்னை ஏற்கவில்லை என்பதைப் பிறகு அறிந்துக்கொண்டேன். நம் மக்கள், மற்றவைகளைப் போல என்னையும் அப்புறப்படுத்தி அயல்நாட்டில் உள்ளவைகளைப் பயன்படுத்திக் கொள்ள ஆரம்பித்தனர்.சில காலங்கள் நான் பயன்பாட்டில் இல்லாவிட்டாலும் என் பெயரின் ஒரு பகுதியைக் கேட்கும் பாக்கியமாவது எனக்குக் கிட்டியது.ஆனால் இப்பொழுது, என்னை அருங்காட்சியகத்தில் வைக்காதது மட்டும்தான் குறை.விரக்தி நிலையில் இருக்கிறேன் நண்பர்களே! நம் மக்களுக்கு எப்பொழுது நம் நாட்டின்மீதும் மொழியின்மீதும் பற்று வருகிறதோ , அன்றுதான் என்னிலமையும் மாறும் என்று நினைக்கிறேன்.அதுவும்கூட கேள்விக்குரியதே!

"போதும் உன் கூப்பாடு "என்று நீங்கள் கூறுவது என் செவியில் விழுகிறது. நண்பர்களே! உங்களிடம் என்னைப்பற்றிக் கூறியது ஏன் தெரியுமா ?

கீழே அதற்கான விடை இருக்கிறது...விடையோடு நானும் விடைப்பெறுகிறேன் ...

ஒரு காலத்தில்

அனைவரின் முகவுரையாக இருந்தேன்

இப்பொழுதோ

முடிவுரையில்கூட எனக்கு இடமில்லை!

உங்களிடம் பேசியதுகூட

நீங்கள் என்னை பயன்படுத்தியதால்

என்னது நாங்களா? ஆமாம்

பிறரின் நலம் விசாரித்த என்னை

நீங்கள் விசாரித்ததால்

இனியேனும் என்னை நினைவில் கொள்வீர்கள்தானே!

இப்படிக்கு,

நான் (நலம் நலமறிய ஆவல்)

 

This is entry #58 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - தலைப்பு சார்ந்த கதை - நலம் நலமறிய ஆவல்

எழுத்தாளர் - ரேவதிசிவா

{kunena_discuss:1083}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.