(Reading time: 9 - 17 minutes)

2017 போட்டி சிறுகதை 57 - உள்ளம் ஒன்றே என்னுயிரே - ப்ரதீபா

This is entry #57 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - கரு சார்ந்த கதை - காதல் / திருமண வாழ்க்கை

எழுத்தாளர் - ப்ரதீபா

Love

ளைக்கட்டி இருந்தது அந்த திருமண மண்டபம். பரபல பாடகர் ரூபனின் இல்லத் திருமண வரவேற்ப்பு.

கோலாகலமாக இருந்த வாயிலின் வழியே தனது பெற்றோருடன் நுழைந்த அந்த இளம் பெண்னின் முகத்தை எதிரில் வந்த அனைவரின் விழிகளும் மறுமுறையும் வருடிவிட்டு செல்ல, மெல்ல நுழைந்து ஒருவித எதிர்பார்ப்புடன் மணமேடையின் அருகில் வந்து நின்றாள், ஷக்தி.

மேடையில் மணமக்களுடன் நின்று கொண்டிருந்த ரூபனின் விழிகளில் அவள் பட்டதும், அவனின் நெஞ்சுக்குள் ஒரு சாரல்.. இதயத்தில் ஒருபடபடப்பு.. விழிகளில் ஒரு மின்னல்.. கைகளில் மெல்லிய நடுக்கம்..

இதே முகம் தான்.. இதே முகம் தான் அவனை அவனுக்கே அறிமுகப்படுத்திய முகம்..! இந்த முகத்தைக் காணதான் அவன் இத்துணை நாட்களாக ஏங்கிக்கிடந்தான்..! இந்த முகமே தான் அவனை இத்துணை நாட்களாக கனவிலும் நினைவிலும் படுத்தியது..!!

தன் தேவதையைக் கண்டுவிட்டதால், இனி அவள் விரைவில் அவனவள் ஆவாள்(?!) என்ற நம்பிக்கையுடன், தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டு விருந்தினர்களை கவனித்தான்.

மேடையில் ஏரிய ஷக்தி, தனது தோழிக்கும் அவளது கணவனுக்கும் வாழ்த்து கூறிவிட்டுத் திரும்ப, ரூபனை கண்ணோடு கண் சந்திக்க நேர, அவளின் இதயம் நின்று துடித்தது.

‘ஹே.. நான் பார்த்துட்டேன்..’ என்று மனதில் வியந்துக்கொண்டே அவனின் அருகில் சென்று “ஹலோ.. நான் உங்கள பார்ப்பேன்னு எதிர் பார்க்கலை.. ”என்று மெல்ல கூறினாள்.

“.......”

அவனிடம் இருந்து பதில் வராததை கண்டு குழம்பியவள் பின்,

“சாரி... நான் யாருன்னு சொல்லவே இல்லயே.. நான் ஷக்தி.. உங்க வருங்கால அண்ணியோட தோழி. நான் உங்க பாட்டுலாம் நிறைய கேட்டுருக்கேன். எனக்கு உங்க குரல் ரொம்ப பிடிக்கும்...” என்று கூறினாள்.

அதற்கும் பதில் வராமல் போக, ‘எதாவது தப்பாப் பேசிட்டோமா’ என்று சிந்தித்துக்கொண்டே இருந்தவளிடம், “வாம்மா போலாம்” என்று அவளது தந்தை கூற ஏமாற்றத்துடன் மேடையில் இருந்து கீழே, திரும்பிப் பார்த்துக்கொண்டே போனாள்.

ரூபனும் தான் என்ன செய்வான்..! அவளை அவ்வளவு நெருக்கத்தில் கண்டதும், புலன்கள் அனைத்தும் செயல்பட மறுத்துவிட்டனவே...

‘...வாய்மொழியும் எந்தன் தாய்மொழியும் இன்று வசப்படவில்லையடி..’

ஏனோ இந்த வரிகள் மனதிற்குள் வந்து போயின.. ராகத்துடன்..

ஷக்தியின் குரலே செவிகளில் ஒலித்துக்கொண்டு இருக்க, உதடுகளோ ‘ஷக்தி...’ என்று முணு முணுத்துக்கொண்டு இருக்க, அவளின் வழியிலேயே இருந்த விழிகளில் விழுந்தது அந்தக் காட்சி.  சட்டென்று “ஹே.... ஹே...” என்று பதறிக்கொண்டே அவளின் அருகினில் ஓடினான்.

ஓடியவன் மலைத்து நின்றுவிட்டான்.

தெரிந்த இரு பெண்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டாலே முறைத்துக்கொள்வார்கள். யார் என்றே அறியாத இருப் பெண்கள்,

இடித்துக்கொண்டதுடன் சிரித்துக்கொண்டால்..??!!!

ஏனென்றால் அந்த பெண்கள் அவன் உள்ளம் கவர் கள்ளியும், அவனது வம்புக்கார தங்கையும் அல்லவா!?

நம்ப முடியாமல் நின்றவனிடம் அவனது தங்கை, “ ரூபி அண்ணா..! பாரேன்.. என்னவோ என்னை மட்டும் கிண்டல் பண்ணுவியே.. இப்போ பாரு.. இவங்களும் தான் நான் முட்டின உடனே, ‘கொம்பு’னு ஆரம்பிச்சாங்க.. அதான் சட்டுன்னு சிரிச்சிட்டோம்.. ஹே.. இரு இரு..இரு... இவங்க முகத்தை எங்கயோ பார்த்த மாதிரி இருக்கே...” என்று இழுக்க... இப்பொழுது அதிர்ந்து நின்று விட்டான் ரூபன்..

மனதிற்குள் ‘இந்த பெண் கண்டுப்பிடிச்சிடான்னா?’ என்று பதற ஆரம்பித்தான். அவளை திசை திருப்பும் பொருட்டு, “இடிச்சது வலிக்கலையே?” என்று கேட்டான்.

அனால் இந்த வாலு அதைக் காதில் வாங்கியதாகத் தெரியவில்லை.

தீவிரமாக யோசித்துக்கொண்டு இருந்தாள்.

‘கடவுளே அவளுக்கு ஞாபகம் வரக்கூடாது’ என்று கோரிக்கை போட, அவரோ உடனே நிராகரித்தார்.

“ஞாபகம் வந்துடுச்சே... ரூபி அண்ணா இவங்க தானே அவங்க... உன் கனவு தேவதை... என் வருங்கால அண்ணி... வாவ்.. நீயும் இவங்கள இப்போ தான் பார்த்தியா?! உன் மனசை சொல்லிட்டியா? என்ன சொன்னாங்க இவங்க? ஹையோ.. எனக்கு சந்தோஷம் தாங்க முடிலையே... இப்போவே அம்மாக்கிட்ட சொல்லணும்” என்று மூச்சு விடாமல் பேசி, இல்லை..இல்லை.. போட்டு உடைத்துவிட்டு சென்றுவிட்டாள் தனது தாயிடம்.

அங்கே இருந்த இருவரும், ஆளுக்கு ஒரு மன நிலையில் இருக்க.. தர்ம சங்கடமான மௌனமே நிலவியது.

‘பிசாசு.. இப்படி சொதப்பிடாளே... போச்சு.. எல்லாமே போச்சு.. கடவுளே’ என்று ரூபன் மனதிற்குள் புலம்பிக்கொண்டிருக்க,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.