(Reading time: 9 - 17 minutes)

ன்னய்யா நடக்குது இங்க.. என்னை வெச்சு காமெடி கிமெடி பண்ணலையே? நல்லவேள்ள அப்பா அம்மா கீழ இறங்கிட்டாங்க’ என்று நினைத்தாலும், அவன் தங்கை சொல்லி விட்டு சென்ற செய்தியோ மனதில் தென்றலாகவும் புயலாகவும் மாறி மாறி தாக்கியது.

அவளை  என்ன சொல்லி சமாதானப் படுத்துவது என்று அவன் யோசிக்கையிலே, வந்து சேர்ந்தாள் தங்கை, அவர்களது தாயுடன்.

‘சுத்தம்...’ என்றுவிட்டு சும்மா இருந்தான், ரூபன். அவனுக்குத் தெரியும் அல்லவா அவனது தாயைப் பற்றி. இனிமேல் தனது பேச்சு எடுபடாது என்றும்.

“வாம்மா.. வா.. வா... நான் தான் ரூபனோட அம்மா..  இவ என் பொண்ணு... கல்யாண பையன் என் பெரிய பையன். ரூபன் சின்னவன். நாங்க உன்ன பார்போம்னு நினைக்கவே இல்லமா..”என்றார்.

“எனக்குஒண்ணுமே புரிலை ஆன்டி...” என்றாள் ஷக்தி.

“உன்னை எங்கயோ எப்பயோ பார்த்தேன்னு, உன்னையே நினைச்சு, உன்னக்காக எட்டு மாசமா காத்து இருந்தான் என் பையன்.. நானும் அவனை பேசி கரைக்க எவ்வளோவோ முயற்சி செஞ்சேன்.. ஹ்ம்ம்.. ஹ்ம்ம்.. இபோ அவன் நினைச்ச மாதிரி எங்க முன்னாடி நீ வந்துட்ட... இது போதும் எனக்கு.. எங்க உன் அப்பா அம்மா? அவங்க கிட்டநான் பேசறேன். ரூபா நீனே எல்லா விஷயத்தையும் சொல்லுபா.. ஆமாம் உன் பேரே கேட்கலியே... உன் பேர் என்னமா?” என்றவருக்கு பதில்

“ஷக்தி.....” என்று வந்தது ரூபனிடம் இருந்து.

அவனிடம் ஒரு ஆச்சர்யப் பார்வை செலுத்தினர் மூவரும்.

தனது அவசரத்தை எண்ணி நொந்துபோனான் ரூபன்.

ஷக்திக்கு ஏதோ புரிந்தது போலவும் ஒன்றுமே புரியாதது போலவும் தோன்றியது. அவளின் கண்ணத்தில் செல்லம்மாக தட்டிவிட்டு சென்றார், அம்மா.

எதிரில் நின்றவினடம் பார்வையாலே ‘என்ன’ என்று வினவினாள்.

“அப்படி அந்த ஓரமா போய் பேசலாமா?” என்று கேட்டுவிட்டு பதிலை எதிர்பாராமல் நடந்தான்.

‘என்னடா இது.. குடும்பத்துல யாருமே என்னை பேசவிடாம அவங்கலாகவே முடிவெடுத்துட்டு போறாங்க.. ஆண்டவா.. நீ தான் காபத்தனும்’ என்று எப்போதும் போல் தனக்குள்ளாகவே புலம்பினாலும் அவனின் குரலில் ஈர்க்கப்பட்டு அவன் பின் சென்றாள்.

வராந்தாவில் இருந்த ஜென்னலின் அருகில் சென்று நின்றவன், என்ன பேசுவது, எப்படி பேசுவது என்று ஒரு நொடி சிந்தித்தான்,

‘யோசிச்சா ஒன்னும் வராது’ என்று அவளை நோக்கித் திரும்பினான்.

அவளின் விழியில் ஈர்க்கப்பட்டு, “உன் கண் ரொம்ப அழகா இருக்கு... பூனைக்கண்” என்று மிருதுவாக மொழிந்தான். பின் தலையை குலுக்கியபடி, “நான் யாருன்னு உனக்கு தெரியுமா?” என்றான்.

“ஹ்ம்ம்....”, என்றாள்.

“ஹ்ம்ம்..னா?”

“தெரியும்.. பிரபல பின்னணி பாடகர் ‘அதிரூபன்’ன்னு தெரியும்.”

“ஹா ஹா... என்ன நியூஸ் ரீடர் மாதிரி சொல்ற.. அம்மா சொன்னதுலேர்ந்து உனக்கு பாதிதான் புரிஞ்சிருக்கும்னு நெனைக்கறேன். தப்பா நினைக்காம நான் சொல்றத கொஞ்சம் பொறுமையா கேட்டு முடிவெடு. நான் உன் முடிவுக்கு கண்டிப்பா கட்டுபட்றேன். சரியா?”

“ஹ்ம்ம்.. சொல்லுங்க..”

“நான் உன்னை முதல்ல நம்ப தலைவர் படம் பார்க்க தியேட்டர் வந்த பொது தான் பார்த்தேன். பாரத்துடனே என்னனு சொல்ல முடியாத ஒரு உணர்வு... படம் முடிஞ்சி நீ கிளம்பற வரைக்கும் உன்னை தான் கவனிச்சேன்... நீ பண்ணின ஒவ்வொரு விஷயமும் என்னை ரொம்ப ஈர்த்துச்சு. நீ பஞ்சு மிட்டாய் சாப்பிட்ட அழகு... இன்னும் கண்ணுலேயே இருக்கு... வீட்டுக்கு வந்தப்பறம் கூட என்னால உன்னை மறக்க முடியல..அது என்ன உணர்வு னு அப்போ புரியல..”

“...அப்போ தான் அம்மா பொண்ணு பார்த்திருக்கேன் எனக்கும் அண்ணாக்கும் ஒண்ணாதான் கல்யாணம்னு குண்ட தூக்கி போட்டாங்க... என்னால உன்னை மறக்கவும் முடியாம, மறுபடி பார்க்கவும் வழி இல்லாம ரொம்ப தவிச்சேன்... அன்னிக்கு ஏன் உன் பின்னாடி வந்து உன் வீட்டை பார்துக்கலன்னு ரொம்ப நொந்துட்டேன்....அப்போ தான் என் மனசு என்னனு எனக்கே புரிஞ்சிது..”

“...அப்புறம் வேற வழி இல்லாம அம்மாகிட்ட உண்மைய சொல்லிட்டேன்.. எனக்கு கொஞ்சமே கொஞ்சம் பைண்ட்டிங் தெரியும்.. அதவெச்சு என் மனசுல இருக்கற உன் முகத்த வரஞ்சேன்... இதோ பாரு போட்டோ” என்று தன் போனில் புகைப்படம் எடுத்த அவன் வரைந்த ஓவியத்தை காண்பித்தான்.

அதைக் கண்டு அவள் பிரமித்துவிட்டாள். கண்களில் ரசனையுடன் அவள் பஞ்சுமிட்டாய் சாப்பிடும் விதமாய் வரைந்து இருந்தான்.

முகம் எங்கும் சிரிப்பும் வெட்கமும் போட்டியிட அவனை நோக்கினாள்,ஷக்தி.

சொக்கித்தான் போனான் ரூபன்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.